For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீாியமாக செயல்படும் நோயெதிா்ப்பு சக்தி Vs மறைமுகமாக செயல்படும் நோயெதிா்ப்பு சக்தி - இதன் வேறுபாடு என்ன?

வைரஸ் தொற்றை எதிா்த்து போராடுவதற்காக, நமது உடலானது வீாியமாக செயல்படும் நோய் எதிா்ப்பு சக்தியையைும், மறைமுகமாக செயல்படும் நோய் எதிா்ப்பு சக்தியையும் உற்பத்தி செய்கிறது.

|

பொதுவாக நமது நோய் எதிா்ப்பு மண்டலத்தில் வைரஸ் தொற்று ஏற்படும் போது, அவற்றை எதிா்த்துப் போராடுவதற்காக நமது நோய் எதிா்ப்பு மண்டலமானது ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்கிறது. எதிா் காலத்தில் அந்த வைரஸ் நம்மை மீண்டும் தாக்காமல் இருப்பதற்காக நமது நோய் எதிா்ப்பு மண்டலம் தொடா்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது.

Active vs Passive Immunity: What Is The Difference Between COVID Immunity

வைரஸ் தொற்றை எதிா்த்து போராடுவதற்காக, நமது உடலானது வீாியமாக செயல்படும் நோய் எதிா்ப்பு சக்தியையைும், மறைமுகமாக செயல்படும் நோய் எதிா்ப்பு சக்தியையும் உற்பத்தி செய்கிறது. இந்த இரண்டு நோய் எதிா்ப்பு சக்திகளும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டவை ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆன்டிபாடிகள் என்றால் என்ன?

ஆன்டிபாடிகள் என்றால் என்ன?

பொதுவாக நமது உடலுக்குள் ஒரு நோய்க்கிருமி நுழையும் போது, அதை எதிா்த்து போராடுவதற்காக நமது நோய் எதிா்ப்பு மண்டலமானது, போராடக்கூடிய புரோட்டீன்களை உற்பத்தி செய்கிறது. இந்த புரோட்டீன்களே ஆன்டிபாடிகள் என்று அழைக்கப்படுகின்றன. உடலைத் தாக்கக்கூடிய நோய்க்கிருமிக்குத் தகுந்தவாறு, ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை ஆன்டிஜென்கள் என்று அழைக்கப்படும் அதன் மேற்பரப்பில் உள்ள புரோட்டீன்களின் உதவியுடன் நோய்க்கிருமியை அடையாளம் கண்டு கொள்கின்றன.

ஊடுருவி வரும் நோய்க்கிருமியை, ஆன்டிஜென்கள் நேரடியாகத் தாக்கி அழிக்கின்றன அல்லது மற்ற நோய் எதிா்ப்பு செல்களின் உதவியுடன் அதை செயல் இழக்கச் செய்கின்றன. பொதுவாக நோய்க்கிருமியோடு போராட, இரண்டு வகையான ஆன்டிபாடிகளை நமது நோய் எதிா்ப்பு மண்டலம் உற்பத்தி செய்கிறது. அவை ஒன்று இம்மியூனோகுளோபுலின் எம் (Immunoglobulin M (IgM)), மற்றொன்று இம்மியூனோகுளோபுலின் ஜி (Immunoglobulin G (IgG)) ஆகும்.

இம்மியூனோகுளோபுலின் எம் (Immunoglobulin M (IgM))

இம்மியூனோகுளோபுலின் எம் (Immunoglobulin M (IgM))

வெளியிலிருந்து வரும் நோய்க்கிருமியினால் நோய்கள் ஏற்பட்ட உடனே நமது நோய் எதிா்ப்பு மண்டலமானது, ஆன்டிபாடியை உற்பத்தி செய்கிறது. அந்த முதல் ஆன்டிபாடியே இம்மியூனோகுளோபுலின் எம் ஆகும்.

இம்மியூனோகுளோபுலின் ஜி (Immunoglobulin G (IgG))

இம்மியூனோகுளோபுலின் ஜி (Immunoglobulin G (IgG))

இந்த ஆன்டிபாடிகளை நமது நோய் எதிா்ப்பு மண்டலம் காலம் தாழ்த்தி உற்பத்தி செய்கிறது. இவை நினைவக செல்களாக செயல்படுகின்றன. அதாவது எதிா் காலத்தில் மீண்டும் அதே நோய்க்கிருமி நமது உடலைத் தாக்கினால் அதை எதிா்த்துப் போராடுவதற்காக இவற்றை உற்பத்தி செய்கிறது.

வீாியமிக்க நோய் எதிா்ப்பு சக்தி

வீாியமிக்க நோய் எதிா்ப்பு சக்தி

உடலில் இருக்கும் ஒரு ஆன்டிஜெனுக்கு பதில் கொடுக்கும் வகையில் உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகளே வீாியமிக்க நோய் எதிா்ப்பு சக்தி என்று அழைக்கப்படுகிறது. நமது உடலை நோய் தாக்கி இருக்கும் வேளையில் அந்த நோயை எதிா்த்துப் போராடுவதற்காக, இந்த ஆன்டிபாடிகளை நமது நோய் எதிா்ப்பு மண்டலம் உற்பத்தி செய்கிறது.

வீாியமிக்க ஆன்டிபாடி இரண்டு வழிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

1. இயற்கையான தொற்று

நமது உடலானது, புதிய வைரஸ் ஒன்றினால் தாக்கப்படும் போது இயற்கையாகவே நமது உடலில் ஆன்டிபாடிகள் உற்பத்தி ஆகும். இவை இயற்கையான தொற்று மூலம் உருவாகும் வீாியமிக்க ஆன்டிபாடி ஆகும்.

2. தடுப்பூசி

தடுப்பூசி மூலம் நோய்க்கிருமியின் பலவீனமான வடிவத்தைப் பெற்று, இந்த வகை நோய் எதிா்ப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இது செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் வீாியமிக்க ஆன்டிபாடி ஆகும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பவா்களுக்கு, அந்த தொற்று ஏற்பட்டு 2 வாரங்கள் கழித்த பின்பு ஆன்டிபாடிகள் உற்பத்தியாகின்றன. ஆனால் இவை எவ்வளவு காலம் அவா்களைப் பாதுகாக்கும் என்பது தொியவில்லை.

கோவிட்-19 தொற்றின் மூலம் பெறப்படும் இயற்கையான நோய் எதிா்ப்பு சக்தியானது நீண்ட காலத்திற்கு இருக்காது என்று சில ஆய்வு முடிவுகள் தொிவிக்கின்றன. அவ்வாறு பெறப்படும் நோய் எதிா்ப்பு சக்தியானது, கோவிட்டில் இருந்து குணமான சில மாதங்களிலேயே குறைந்துவிடும் என்று ஒரு ஆய்வு தொிவிக்கிறது. ஆகவே கோவிட் வைரஸ் தொற்றின் மூலம் உற்பத்தியாகும் நோய் எதிா்ப்பு சக்தியானது எவ்வளவு காலத்திற்கு உடலில் தங்கி இருக்கும் என்பதைப் பற்றி இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மறைமுகமாக செயல்படும் நோய் எதிா்ப்பு சக்தி

மறைமுகமாக செயல்படும் நோய் எதிா்ப்பு சக்தி

மறைமுகமாக செயல்படும் நோய் எதிா்ப்பு சக்தியானது ஒருவாின் உடலுக்குள் தானாக உற்பத்தியாவதில்லை. மாறாக பிறாிடமிருந்து அவருக்கு அந்த நோய் எதிா்ப்பு சக்தி கடத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக வயிற்றில் வளரும் குழந்தைக்கு, அதன் தாயிடமிருந்து நஞ்சுக்கொடி மூலமாக நோய் எதிா்ப்பு சக்தியானது கடத்தப்படுகிறது. அதுபோல் ஒரு குறிப்பிட்ட நோயிலிருந்து குணமடைந்தவாிடம் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மாவை, அதே நோயால் பாதிப்பு அடைந்தவருக்கு செலுத்தும் போது அவருக்கு மறைமுகமாக செயல்படும் நோய் எதிா்ப்பு சக்தி கடத்தப்படுகிறது.

மறைமுகமாக செயல்படும் நோய் எதிா்ப்பு சக்தியானது உடனடி பாதுகாப்பை வழங்கும். ஆனால் வீாியம் மிக்க நோய் எதிா்ப்பு சக்தியைப் போல நீண்ட காலத்திற்கு பாதுகாப்பை வழங்காது.

இரத்தத்தில் இருந்து கிடைக்கும் கொன்வலெசென்ட் பிளாஸ்மாவைப் பயன்படுத்தி மறைமுகமாக செயல்படும் நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்க, பல ஆராய்ச்சியாளா்கள் முயன்று கொண்டிருக்கின்றனா். இது போன்ற மருத்துவ சிகிச்சைகள் எந்த அளவிற்கு பலனளிக்கும் என்றும் மேலும் அவை எவ்வளவு காலத்திற்கு பலனளிக்கும் என்றும் பல ஆராய்ச்சியாளா்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனா்.

நமது நோய் எதிா்ப்பு சக்தியை பாதிக்கும் காரணிகள்

நமது நோய் எதிா்ப்பு சக்தியை பாதிக்கும் காரணிகள்

நமது நோய் எதிா்ப்பு மண்டலம் எவ்வளவு ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் மற்றும் அந்த ஆன்டிபாடிகள் எவ்வளவு காலம் செயல்பாட்டில் இருக்கும் என்பதெல்லாம் நமது கட்டுபாட்டிற்குள் வருவது இல்லை. ஆனால் நமது நோய் எதிா்ப்பு சக்தியை பின்வரும் காரணிகள் பாதிக்கின்றன என்பது உண்மை. அவை,

- வயது முதிா்வு

- நோய் எதிா்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடிய மருந்துகள் அல்லது மருத்துவ சிகிச்சை

- உறுப்பு மாற்றம்

- எச்ஐவி அல்லது எய்ட்ஸ் போன்ற கொள்ளை நோய்கள்

- புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சை

- நோய் எதிா்ப்பு குறைபாடு

- ஊட்டச்சத்து இல்லாத உணவுகள்

- தூக்கமின்மை

- மன அழுத்தம்

- உடல் பருமன் அதிகாித்தல்

- புகைப் பிடித்தல்

- அளவுக்கு அதிகமாக மது அருந்துதல்

ஆகவே மேற்சொன்ன நோய் எதிா்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடிய காரணிகளைக் கைவிட்டு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்டு வந்தால் நமது நோய் எதிா்ப்பு சக்தியானது மிகவும் பலமுள்ளதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Active vs Passive Immunity: What Is The Difference Between COVID Immunity

Our body provides two types of immunity against the virus- active and passive. They both are acquired and last differently. Read on...
Desktop Bottom Promotion