For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 பொருட்களை கொண்டு செய்த கோடைகால பானம் உங்களுக்கு என்னென்ன அதிசயங்களை செய்கிறது தெரியுமா?

கோடை காலத்தில், வெப்பம் காரணமாக செரிமான செயல்முறை குறைகிறது. எனவே, கிராம்பு உட்கொள்வது செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது.

|

உயரும் பாதரசம் அடிக்கடி பசியைக் குறைப்பதோடு குடலின் சீரான செயல்பாட்டில் அசௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வது நீரழிவைக் கட்டுப்படுத்த உதவும் அதே வேளையில், குடல் மற்றும் பிற உடல் பாகங்கள் சீராகச் செயல்பட, உட்புற உடல் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் முக்கியம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில், கோடைகாலத்தில் குடல் தொடர்பான வயிற்று பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்.

5-ingredient concoction recipe good for gut health during the summer season in Tamil

ஆதலால், இந்த காலத்தில் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிக அவசியம். ஒரு சில பானங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை அந்தந்த பருவத்திற்கு ஏற்ப சரிசெய்கிறது. அதேபோல, இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள எளிய 5-மூலப்பொருட்களை கொண்டு செய்யும் பானம் உங்கள் குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாக்கும் என்று இங்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கஷாயம் செய்வது எப்படி?

கஷாயம் செய்வது எப்படி?

1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர்

½ கப் வெதுவெதுப்பான நீர்

¼ டீஸ்பூன் இஞ்சி

சிறிதளவு எலுமிச்சை சாறு

ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள்

ஒரு டீஸ்பூன் கிராம்பு தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் இந்த கலவையைக் குடிக்கவும்.

கஷாயத்தின் நன்மைகள்

கஷாயத்தின் நன்மைகள்

ஆப்பிள் சைடர் இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வயிற்று அமிலத்தன்மை குறைவாக உள்ளவர்கள் செரிமானத்திற்கு உதவ வயிற்றின் அமில அளவை அதிகரிக்க ஆப்பிள் சைடரைப் பயன்படுத்த வேண்டும். மேலும், ஆப்பிள் சைடர் வாயு மற்றும் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது. இது செரிமான செயல்முறையை அதிகரிக்கிறது. வயிறு மற்றும் குடலில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவும் நுண்ணுயிர் எதிர்ப்பு பொருட்கள் இதில் உள்ளன.

கிராம்பு

கிராம்பு

கோடை காலத்தில், வெப்பம் காரணமாக செரிமான செயல்முறை குறைகிறது. எனவே, கிராம்பு உட்கொள்வது செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது. கிராம்பு நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இது செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பலன்களை வழங்குகிறது. ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக, வைட்டமின் சி ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக செல்களைப் பாதுகாக்கிறது. மேலும் குடல் அழற்சியைக் குறைக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எலுமிச்சை சாறு மலச்சிக்கல் அபாயத்தை குறைக்க உதவுகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட ஆர்எம்ஐடி பல்கலைக்கழக பொறியியல் பள்ளியின் ஆய்வின்படி, இலவங்கப்பட்டை ஒரு சிறிய டோஸ் கூட வயிற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவைக் குறைக்க உதவுகிறது. இது உடலின் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. இலவங்கப்பட்டை நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஆதரிக்கும் ப்ரீபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடலில் நோய்க்கிருமி பாக்டீரியாக்கள் வளராமல் தடுக்கிறது. எனவே, உங்கள் உணவில் இலவங்கப்பட்டை சேர்த்துக் கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சி சிறந்த சுவை மட்டுமல்ல, இந்த மசாலா உங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். செரிமானத்தைப் பொறுத்தவரை, இது உங்கள் குடல் உணவை குடல் வழியாக நகர்த்த உதவுகிறது. எனவே, இஞ்சி உங்களுக்கு வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தாது. இஞ்சி வயிற்றைக் காலியாக்குவதை விரைவுபடுத்துகிறது, இது அஜீரணம் மற்றும் தொடர்புடைய வயிற்றில் உள்ள அசௌகரியம் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5-ingredient concoction recipe good for gut health during the summer season in Tamil

This 5-ingredient concoction recipe that is good for gut health during the summer season in Tamil.
Story first published: Tuesday, April 12, 2022, 13:36 [IST]
Desktop Bottom Promotion