For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலாற்றில் 200 மில்லியன் மக்களை கொன்று குவித்த உலகின் மிகவும் கொடூரமான தொற்றுநோய் எது தெரியுமா?

உலக சுகாதார அமைப்பு, 2020 மார்ச் 11 ஆம் நாள் கொரோனா வைரஸை பெருந்தொற்று நோய் (Pandemic Disease) என்று அறிவித்துள்ளது. பெருந்தொற்று நோய் என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே

|

சமீப காலமாக கொரோனா என்னும் வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு இதுவரை 1,00,000-த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000-த்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். மேலும் நாளுக்கு நாள் இந்த வைரஸ் தாக்கத்திற்கு உலகின் பல பகுதிகளிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணம் ஏதும் நிகழாதிருந்தது. ஆனால் நேற்று கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் இறந்துவிட்டார்.

MOST READ: மரணம் வரை கொண்டு செல்லும் கொடிய நோய்கள் - ஓர் பார்வை!

மேலும் உலக சுகாதார அமைப்பு, 2020 மார்ச் 11 ஆம் நாள் கொரோனா வைரஸை பெருந்தொற்று நோய் (Pandemic Disease) என்று அறிவித்துள்ளது. பெருந்தொற்று நோய் என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றுநோயாகும். கடைசியாக 2009-இல் பரவிய பன்றிக் காய்ச்சல் உலகளவில் பரவும் தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டது. இத்தொற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதோடு தற்போது பரவி வரும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லை. அதே சமயம் இது வேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது.

MOST READ: இதய கட்டிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

இப்போது வரலாற்றில் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கிய கொடூரமான சில பெருந்தொற்று நோய்கள் எவையென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எய்ட்ஸ்

எய்ட்ஸ்

உலகளவில் சுமார் 25 மில்லியன் இறப்புகளுக்கும், 65 மில்லியன் நோய்த்தொற்றுகளுக்கும் காரணமான ஒரு வைரஸ் தொற்று தான் எய்ட்ஸ். 2006 ஆம் ஆண்டில் பெருந்தொற்று நோயாக இருந்தது. ஆனால் இந்த தொற்றுநோய்க்கு சில சிகிச்சைகளைத் தவிர, இன்னும் துல்லியமான மருந்து ஏதும் கண்டுபிடிக்கவில்லை.

காலரா

காலரா

இந்த தொற்று 1910-1911-க்கு இடையில் ஏற்பட்டது. இது காலராவின் 6-வது அவதாரம் என்று அறியப்பட்டது. இது இந்தியாவில் உருவானது மற்றும் மத்திய கிழக்கு, ரஸ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பா போன்ற பகுதிகளுக்கு பரவியதோடு, சுமார் 0.8 மில்லியன் மக்களை கொன்ற கொடிய தொற்றுநோய்.

ப்ளாக் டெத்

ப்ளாக் டெத்

1346-1353-க்கு இடைப்பட்ட காலத்தில் பரவிய நோய் தான் ப்ளாக் டெத். இந்நோய் தொற்று சுமார் 200 மில்லியன் மக்களைக் காவு வாங்கியது. இது அந்த காலக்கட்டத்தில் மொத்த மக்கள் தொகையில் 60% ஆகும். இந்த ப்ளாக் டெத் தொற்றானது எலிகள் மற்றும் வணிகக் கப்பல்களில் உள்ள பூச்சிகள் வழியாக கண்டங்களைத் தாண்டி மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி பேரழியை உண்டாக்கியது.

ஹாங்காங் ஃப்ளூ

ஹாங்காங் ஃப்ளூ

இந்த பெருந்தொற்று நோய் சீனாவில் இருந்து உருவாகியது. 1968 ஆம் ஆண்டு பெருந்தொற்றுநோயாக மாறியது. 1968 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் 5 லட்சம் பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். பின்பு இது ஆசிய கண்டத்திலும் ஐரோப்பாவிலும் பரவி பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்தது.

ரஷ்யன் ஃப்ளூ

ரஷ்யன் ஃப்ளூ

இன்ப்ளூயன்சா என்னும் வைரஸால் ஏற்படும் ரஷ்யன் ஃப்ளூவானது ஏசியன் ஃப்ளூ என்றும் அழைக்கப்பட்டது. இந்த வைரஸ் 1957 ஆம் ஆண்டு கிழக்கு ஆசியாவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்றால் சுமார் 1 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.

வரலாற்றில் மிக மோசமான பெருந்தொற்று நோய் எது?

வரலாற்றில் மிக மோசமான பெருந்தொற்று நோய் எது?

14 ஆம் நூற்றாண்டில் உலகெங்கிலும் சுமார் 75-200 மில்லியன் மக்களைக் கொன்று வரலாற்றிலேயே மிக மோசமான தொற்றுநோயாக ‘ப்ளாக் டெத்' கருதப்பட்டது. எச்.ஐ.வி, ஹாங்காங் ஃப்ளூ மற்றும் 6-வது காலரா ஆகியவை ப்ளாக் டெத் தொடர்ந்து வந்த பிற தொற்று நோய்கள் ஆகும்.

புற்றுநோய் ஒரு பெருந்தொற்று நோயா?

புற்றுநோய் ஒரு பெருந்தொற்று நோயா?

இல்லை. புற்றுநோய் ஒரு பெருந்தொற்றுநோயாக கருதப்படவில்லை. ஏனெனில் ஒவ்வொரு வருடமும் உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் இந்நோயால் மரணித்து வருகின்றனர். பெருந்தொற்று நோய் என்பது பரவக்கூடியது. ஆனால் புற்றுநோய் ஒரு தொற்றுநோய் இல்லாததால், இது ஒரு பெருந்தொற்றுநோய் அல்ல.

'ப்ளாக் டெத்' எப்போது முடிவுக்கு வந்தது?

'ப்ளாக் டெத்' எப்போது முடிவுக்கு வந்தது?

1347-1351க்கு இடைப்பட்ட காலத்தில் ப்ளாக் டெத் ஐரோப்பாவில் தொடங்கிய ஒரு கொடிய ப்ளேக் நோயாகும். இந்நோய் 14 முதல் 17 ஆம் நூற்றாண்டுகளில் உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களை சூரையாடியது. இந்நோயின் முதல் வெடிப்புக்கு பிறகு, 1360-1667 க்கு இடையே உலகம் பல வெடிப்புக்களை சந்தித்தது. ஆனால் 1665-1666 க்கு இடையே இங்கிலாந்தில் ப்ளாக் டெத் தொற்று முடிவுக்கு வந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Deadly Pandemic Diseases In History

Here are top 5 deadly pandemic diseases in history. Read on...
Desktop Bottom Promotion