For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் 4-7-8 சுவாசப் பயிற்சி - எப்படி செய்வது?

நுரையீரல் நமது உடலில் உள்ள ஒரு மிக முக்கிய உறுப்பு ஆகும். அது முறையாக அதே நேரத்தில் சரியாக இயங்க வேண்டும். எனவே முறையான சுவாசப் பயிற்சிகளை சரிவர செய்து, நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

|

மனிதர்களாகிய நாம் ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 20 முறை வரை சுவாசிக்கிறோம். உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் இடைவிடாமல் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் பெரும்பாலும் உணர்வது இல்லை. எப்போதாவது காய்ச்சல் அல்லது சுவாசப் பிரச்சனை வரும் போதுதான் நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே நம்மால் உணர முடிகிறது.

4-7-8 Breath Relaxation Exercise: Follow This Technique For Healthy Lungs

எப்போதாவது நாம் ஓய்வாகவோ அல்லது தளர்வாகவோ இருக்கும் போது, எவ்வாறு சுவாசிக்கிறோம் என்பதை நாம் கவனித்து இருக்கிறோமா? அவ்வாறு இல்லையென்றால், அடுத்த முறையாவது, தூங்குவதற்கு முன்பாகவோ அல்லது காலையில் கண் விழித்த பின்போ நாம் எவ்வாறு சுவாசிக்கிறோம் என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

MOST READ: 7 நாட்களில் உடலில் உள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேற்றணுமா? இத குடிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுவாச பயிற்சி

சுவாச பயிற்சி

முறையான சுவாசப் பயிற்சி நமது வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது மன அழுத்தத்தைப் போக்கி நம்மைத் தளர்வாக வைத்திருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் மேலோட்டமாக சுவாசிக்கிறோம். ஆழமாக சுவாசிப்பதில்லை. அதனால் நமது நுரையீரல் தன்னிடம் இருக்கும் சக்தியின் அளவிற்கு ஏற்ப இயங்க முடியாமல் நமது உடல் ஆரோக்கியம் பாதிப்படைகிறது.

நுரையீரல் நமது உடலில் உள்ள ஒரு மிக முக்கிய உறுப்பு ஆகும். அது முறையாக அதே நேரத்தில் சரியாக இயங்க வேண்டும். எனவே முறையான சுவாசப் பயிற்சிகளை சரிவர செய்து, நமது நுரையீரலை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருக்கலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

முறையான சுவாசத்தலினால் ஏற்படும் நன்மைகள்

முறையான சுவாசத்தலினால் ஏற்படும் நன்மைகள்

ஆழமாக மூச்சை இழுத்து விடும்போது, அது உடல் மற்றும் மூளையில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து, நம்மைத் தளர்வாக வைத்திருக்கிறது என்று பல அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறு முறையாக சுவாசிக்கும் போது நமது உடலிலும் மனதிலும் ஒருவிதமான அமைதி ஏற்படுவது மட்டுமல்லாமல் நமக்கு ஒரு புதிய சக்தியும் கிடைக்கிறது. வலி நீங்கி, உடலில் உள்ள நச்சுத் தன்மை முழுவதுமாக வெளியேறுகிறது. நமது அழுத்தத்தை வெகுவாகக் குறைத்து நிணநீர்க்கணுவின் (லிம்ஃபாடிக் சிஸ்டம்) அமைப்பைத் தூண்டிவிடுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான சக்தியையும் அதிகரிக்கிறது. அதோடு இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

ஆகவே ஒரு முறையான சுவாசப் பயிற்சிக்கு, 4-7-8 என்ற சுவாசப் பயிற்சியை நாம் தேர்ந்து எடுக்கலாம். இந்த 4-7-8 சுவாசப் பயிற்சியை எவ்வாறு செய்வது என்பதைக் கீழே பார்ப்போம்.

4-7-8 சுவாசப் பயிற்சி

4-7-8 சுவாசப் பயிற்சி

4-7-8 சுவாசப் பயிற்சியை செய்ய முதலில் தரையில் அமைதியாக அதே நேரத்தில் முதுகை வளைக்காமல் நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும். நிமிர்ந்து அமர கடினமாக இருந்தால், சுவரில் சாய்ந்து நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும். இப்போது 4-7-8 சுவாசப் பயிற்சியை தொடங்கலாம்.

சரியான நிலையில் அமர்ந்த பின், வாயை மூடிவிட்டு, முக்கின் வழியாக 4 வினாடிகள் வரை மூச்சை இழுக்க வேண்டும். மனதிற்குள் நான்கு வரை எண்ணிக் கொள்ள வேண்டும். பின் 7 வினாடிகள் வரை அப்படியே மூச்சை நிறுத்தி வைக்க வேண்டும். தொடக்கத்தில் 7 வினாடிகள் வரை மூச்சை நிறுத்தி வைத்திருப்பது கடினமாக இருக்கும். ஆனால் நாளடைவில் அது எளிதாகிவிடும். பின் வாய் வழியாக 8 வினாடிகள் வரை மூச்சை வெளியே விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று முறை இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும். இதையே 4-7-8 சுவாசப் பயிற்சி என்கிறோம். நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த பயிற்சியை செய்யலாம்.

4-7-8 சுவாசப் பயிற்சிக்கும் பிராணயாமா சுவாசப் பயிற்சிக்கும் உள்ள தொடர்பு

4-7-8 சுவாசப் பயிற்சிக்கும் பிராணயாமா சுவாசப் பயிற்சிக்கும் உள்ள தொடர்பு

4-7-8 சுவாசப் பயிற்சி என்பது சுவாசப் பயிற்சிகளுக்கெல்லாம் மிகவும் அடிப்படையான ஒன்றாகும். இந்தப் பயிற்சியை தவறாமல் செய்து வந்தால் பிராணயாமா சுவாசப் பயிற்சியையும் எளிதில் செய்ய முடியும்.

பிராணயாமாவில் நாம் மூன்று பகுதிகளாக சுவாசிக்கிறோம். பிராணயாமா சுவாசப் பயிற்சி, ஆசனங்களுக்கு இடையே சுவாசிக்கும் போது ஏற்படும் ஒன்றுபட்டு ஒத்திருக்கும் இயக்கங்களைக் கொண்டிருக்கிறது. இதைத்தான் யோகாவில் சுவாசக் கட்டுப்பாட்டு பயிற்சி என்று அழைக்கிறார்கள்.

ஆகவே 4-7-8 சுவாசப் பயிற்சியோடு நின்றுவிடாமல், கபல்பதி போன்ற மற்ற சுவாசப் பயிற்சிகளையும் செய்து வரலாம். அது நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

4-7-8 Breath Relaxation Exercise: Follow This Technique For Healthy Lungs

4-7-8 Breath Relaxation Exercise: Follow This Technique For Healthy Lungs. Read On...
Desktop Bottom Promotion