For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Pongal 2022: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....

பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷலே பொங்கலும் கரும்பும் தான். இதில் பொங்கல் என்பது அரிசி மற்றும் பாசிப்பருப்பின் கலவையாகும். இந்த உணவு ஒரு கார்போ-புரதம் சமநிலையை உறுதி செய்கிறது.

|

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. அனைவரும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்து வந்திருப்போம். பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷலே பொங்கலும் கரும்பும் தான். இதில் பொங்கல் என்பது அரிசி மற்றும் பாசிப்பருப்பின் கலவையாகும். இந்த உணவு ஒரு கார்போ-புரதம் சமநிலையை உறுதி செய்கிறது. பொங்கல் எளிதில் ஜீரணமாகக்கூடிய ஒரு உணவாகும். இதில் கொழுப்பு மற்றும் கலோரி குறைவாக உள்ளது.

2022 Pongal: Health Tips To Convert Pongal Into A Healthy Feast

வீட்டில் நெய் குறைவாக சேர்த்து தயாரிக்கப்படும் பொங்கல் ஒரு சிறந்த காலை உணவாகும். குறிப்பாக ஆரோக்கியமான உணவும் கூட. பொங்கல் பண்டிகையன்று சர்க்கரை பொங்கல் மட்டுமின்றி, வெண்பொங்கலையும் செய்வார்கள். வெண்பொங்கல் ஒரு சிறப்பான மற்றும் சுவையான காலை உணவும் கூட. இப்போது பொங்கலை ஆரோக்கியமான ஒரு விருந்தாக மாற்ற சில குறிப்புகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை அரிசிக்கு மாற்றாக பழுப்பு அரிசி பயன்படுத்தலாம்

வெள்ளை அரிசிக்கு மாற்றாக பழுப்பு அரிசி பயன்படுத்தலாம்

பொதுவாக வெண்பொங்கல் தயாரிக்க வெள்ளை அரிசி மற்றும் பச்சைப் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பழுப்பு அரிசி போன்ற மாற்று மூலப்பொருட்கள் கொண்டு ஆரோக்கியமான உணவு தயாரிப்பது தற்போது பிரபலமாகி வருகிறது. பழுப்பு அரிசி மற்றும் பாசிப் பருப்பு சேர்த்து தயாரிக்கப்படும் பொங்கல் சுவை மற்றும் ஆரோக்கியம் கொண்ட ஒரு சிறப்பு உணவாகும். மேலும் வெள்ளை அரிசியைக் காட்டிலும் பழுப்பு அரிசியில் சோடியம் அளவு குறைவாகக் கொண்டிருக்கும் . எனவே உப்பின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இது மிகுந்த நன்மையைத் தரும்.

ஆரோக்கிய நன்மைகளுக்கு சிறுதானியம் பயன்படுத்தலாம்

ஆரோக்கிய நன்மைகளுக்கு சிறுதானியம் பயன்படுத்தலாம்

பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரியத்தில் சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. குறைவான கார்போஹைட்ரேட் கொண்ட தினை அரிசியில் க்ளைசீமிக் குறியீடும் குறைவாகவே உள்ளது. க்ளைசீமிக் குறியீடு என்பது உணவுக்குப் பிறகு உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை அளவிட பயன்படும் ஒரு காரணி. தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. ஆனால் ஆரோக்கியமான விளைபொருட்களை கூட அதிகமாக சாப்பிடக் கூடாது. எனவே சாப்பிடக் கூடிய அளவை கவனத்தில் கொள்வதால் மற்ற விளைவுகள் தடுக்கப்படலாம்.

கலப்படமற்ற வெல்லம் பயன்படுத்துங்கள்

கலப்படமற்ற வெல்லம் பயன்படுத்துங்கள்

சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதில் இது ஒரு சிறந்த குறிப்பாகும். சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு கற்கண்டு அல்லது வெல்லம் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கும் போது சுத்தமான வெல்லம் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். வெல்லத்தில் ஒரு துண்டு எடுத்து சுவைத்து பாருங்கள்; அது இயற்கையானது என்றால் அது உப்பு அல்லது கசப்பாக இருக்கக்கூடாது. வெல்லத்தின் சுத்தத்தில் அதன் நிறம் கூட பங்கு வகிக்கிறது. வெல்லம் அடர் பழுப்பு நிறத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது நல்ல தரம் வாய்ந்ததாக இருந்தால், அது ஒரு சிறந்த செரிமானப் பொருளாகவும், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த பொருளாகவும் இருக்கலாம்.

கீரை பொங்கல்

கீரை பொங்கல்

இந்த பருவத்தில் கீரைகள் அதிகமாக அறுவடை செய்யப்படுகின்றன. அதிலும் சிறு கீரை, தண்டுக்கீரை ஆகியவற்றைச் சேர்ப்பது சுவையான பொங்கலை அதிக சத்தானதாகவும் நிரப்பக்கூடியதாகவும் மாற்றும். இந்த கீரைகள், பல தாவர ஊட்டச்சத்துகள், ஆன்டிஆக்சிடண்ட், மினரல் போன்றவற்றைக் கொண்டுள்ளன. மேலும் 100 கிராம் அளவிற்கு 23 கலோரிகள் மட்டுமே கொண்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pongal 2022: Health Tips To Convert Pongal Into A Healthy Feast

Here are some health tips to convert pongal into a healthy feast. Read on...
Desktop Bottom Promotion