For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களின் முடியை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை கண்டறிய முடியும்..!

|

நாம் எப்படிப்பட்டவர் என்பதை நமது பேச்சை வைத்து, நமது உடல் அமைப்பை வைத்து, குணத்தை வைத்து கண்டறிய முடியும். ஆனால், நமது முடியை வைத்து கூட கண்டறிய முடியும் என கூறுகின்றனர். ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதையும், எத்தகைய நிலையில் அவரது உடல் நிலை இருக்கிறது என்பதையும் எளிதாக நம்மால் சொல்லி விட இயலும்.

What Your Hair Reveals About Your Health

இது ஆண் பெண் என இருவருக்கும் சற்று வேறுபடும். ஒருவரின் முடியை வைத்து நம்மால் அவரின் சில குறிப்பிட்ட விவரத்தை எளிதாக கூறி விடலாம். அதே போன்று ஒருவரின் ஹேர்ஸ்டைலை வைத்தும் அவரின் விவரத்தை சொல்லி விடலாம். முடியை வைத்து எப்படி ஒருவரை பற்றி கூறி விட முடியும் என்கிற கேள்விக்கான பதிலை தருவதே இந்த பதிவு. வாங்க, இது எப்படி சாத்தியம் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறிய முடியா..?

சிறிய முடியா..?

உங்களின் முடி சிறிதான அளவில் இருந்தால் அதற்கென்று ஒரு தனித்துவமான அர்த்தம் உள்ளதாம். இது போன்று பெண்கள் வைத்திருந்தால் அதிக கற்பனை திறன் கொண்டவராகவும், அவரின் முடியே அவரை மற்றவரிடம் இருந்து தனித்துவமாக காட்டும் என்பதையும் இது உணர்த்துகிறது. இவை ஆண்களுக்கு வேறுபடும்.

நீண்ட முடியா..?

நீண்ட முடியா..?

ஆண்களுக்கு நீளமான முடி வைத்திருந்தால் மேற்சொன்ன காரணிகள் ஒத்து போகும். அதாவது, இவர்கள் அதிக படைப்பாற்றல் கொண்டவராகவும், மிகுந்த தனித்துவம் கொண்டவராகவும் இருப்பார்களாம். அத்துடன் இந்த நீண்ட முடி அவரின் ஆரோக்கியத்தையும் சேர்த்தே குறிக்கிறது.

முடி வளர்ச்சி எப்படி..?

முடி வளர்ச்சி எப்படி..?

ஒரு சிலருக்கு முடி வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கும். இது போன்ற நிலை அவரது முடி எத்தகைய பாதிப்பில் உள்ளது என்பதை குறிக்கிறதாம். முடியின் வளர்ச்சி குறைந்து இருந்தால் புரதசத்து குறைபாடு உள்ளது என அர்த்தம். இவை முடியை மட்டும் பாதிக்காமல் பற்கள், உடல் நிலை, மன நிலை போன்றவற்றையும் சேர்த்தே பாதிக்கிறதாம்.

இவ்ளோ முடியா..?

இவ்ளோ முடியா..?

சிலருக்கு முடி அதிகமாக கொட்டுவது போன்று தோன்றும். ஆனால், உண்மை என்னவென்றால் பொதுவாகவே நமக்கு 80 முதல் 100 முடிகள் உதிருமாம். இது இயல்பான ஒன்று. ஆனால், இதற்கும் அதிகமாக உதிர்ந்தால் தான் நமக்கு பிரச்சினை. இது மன அழுத்தம், உடல் நிலை கோளாறு, கர்ப்பம் ஆகிய காரணத்தால் முடி அதிக அளவில் உதிர கூடும்.

Most Read: உங்கள் காதலியை கட்டிப்பிடிக்கும் போது அவரின் உடல், உங்களைவிட ஜில்லுனு இருப்பதற்கு காரணம் என்ன..?

பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள்

பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள்

ஒரு சிலருக்கு திடீரென்று முடி அதிக அளவில் கொட்ட தொடங்கும். அத்துடன் முடியின் பொலிவும், ஆரோக்கியமும் குறைந்தது போன்று இருக்கும். இதற்கு முக்கிய காரணம் நாம் சாப்பிட கூடிய பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் தான். இவை ஹார்மோன் மாற்றத்தை தந்து இப்படிப்பட்ட நிலைக்கு நம்மை தள்ளுகிறது.

தைராய்டு பிரச்சினை

தைராய்டு பிரச்சினை

இந்த நிலை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாம். அதாவது, முடியின் வளர்ச்சியை பாதித்து, முடியை அதிக அளவில் கொட்ட செய்யுமாம். இவற்றிற்கு முக்கிய காரணமே இந்த தைராய்டு சுரப்பி என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை முடியை மிகவும் மெல்லிதாக மாற்ற கூடும்.

வெள்ளை முடியா..?

வெள்ளை முடியா..?

ஒரு சிலருக்கு இளம் வயதிலே முடி வெள்ளையாக மாற கூடும். இந்த நிலைக்கு பலவித காரணிகள் உள்ளன. அதில் முக்கியமானது உங்களது மன அழுத்தம் தான். மன அழுத்தம் கூட உங்களின் கருமை முடியை வெள்ளையாக மாற்றும். சிலருக்கு மரபணு ரீதியாகவும் இந்த பிரச்சினை இருக்க கூடும்.

முடி வெடிப்பா..?

முடி வெடிப்பா..?

பலருக்கு முடி அதிகம் வெடித்து காணப் படும். இதற்கு காரணம் உயர் ரத்த அழுத்தம், பசியின்மை, முதுகு வலி, ஆகியவை தான். மேலும், நமது உடலில் சுரக்க கூடிய கார்டிசோல் அதிகமானால் முடியில் வெடிப்பும் அதிகமாகுமாம்.

Most Read: தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட தினமும் இரவில் 1 கிளாஸ் இதை குடித்து விட்டு தூங்குங்கள்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Your Hair Reveals About Your Health

This article speaks about What your hair reveals about your health.
Story first published: Thursday, January 17, 2019, 14:36 [IST]
Desktop Bottom Promotion