For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் கனவு காணும்போது உண்மையில் உங்களின் உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நடக்கும்..?

|

நம் ஒவ்வொருவருக்கும் வர கூடிய கனவு என்பது மிக இயல்பான ஒன்று. சிறு வயதிலிருந்தே நன் மனதில் பதிவாகின்ற சில முக்கிய செயல்கள் மட்டுமே கனவாக நமக்கு வர கூடும். கனவு மிக முக்கியமான ஒன்றாக பலரும் கருதுவர். சிலருக்கு தாங்கள் கண்ட கனவு உடனே பலித்து விட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஒரு சிலருக்கு கெட்ட கனவு வந்ததால் அவை பலித்து விட கூடாது என்கிற எண்ணம் இருக்கும். கனவை அதிக சக்தி கொண்டதாகவே பலரும் நம்புகின்றனர். கனவுகளை பற்றிய பலவித கட்டுக்கதைகள் இன்றும் நம்மை சுற்றியே வலம் வருகின்றது. ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒரு தன்மை உள்ளது. அதே போன்று நாம் காணும் கனவு ஒவ்வொன்றிற்கும் பல வித அர்த்தங்களும் உண்டு.

What Really Happens To Your Body When You Dream

பொதுவாகவே நமக்கு சராசரியாக 4 முதல் 6 கனவுகள் ஒரு ஆழ்ந்த தூக்கத்தின் போது வர கூடும். ஆனால், அவற்றில் மிக சில மட்டுமே நம் மனதில் பதிந்து இருக்கும். மற்றவை நினைவுக்கு வருவதற்கு கடினமே. இப்படி கனவுகளை பற்றி பல ஆச்சரிய விஷயங்கள் உண்டு. இருப்பினும் நாம் கனவு காணும் போது நமது உடலில் சில வகையான மாற்றங்கள் ஏற்படும். அவை எப்படிப்பட்ட மாற்றங்கள் என்பதையும் கனவுகள் உண்மையில் பலிக்குமா என்பதையும் அறிவியல் பூர்வமாக இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கனா..!

கனா..!

வாழ்நாள் முழுக்க நமக்கு இருக்க கூடிய கனவுகள் என்பது வேறு. நாம் அன்றாடம் காணுகின்ற கனவுகள் என்பது வேறு. இவை இரண்டிற்கும் எண்ணற்ற வித்தியாசங்கள் உள்ளன. இதில் தினசரி காணுகின்ற கனவுகள் தான் பல வகையாக இருக்க கூடும். இவை நமது ஒவ்வொருவரின் எண்ணத்தை பொருத்தும் மாறுபடும்.

பல நிலைகள்..!

பல நிலைகள்..!

நாம் கனவு உலகத்துக்குள் போவதற்கு முன் பல நிலைகளாக நமது உடல் தயாராகும். இவற்றில் ஒவ்வொரு நிலைக்கும் தனித்துவமான அர்த்தங்கள் உண்டு என கனவுகளை பற்றிய ஆய்வுகள் சொல்கின்றன. எல்லா நிலைகளிலும் நமது உடல் ஒருவித மாற்றங்களை அடைய கூடும்.

முதல் நிலை..!

முதல் நிலை..!

என்னதான் நமக்கு பல நண்பர்கள் இருந்தாலும் நாம் கனவு காணும்போது தனிமையாகவே இருப்போம். கனவு உலகத்திற்குள் செல்ல போகும் முன், அதன் முதல் நிலையில் நாம் அரை தூக்கத்திலே இருப்போம். நமது கண்கள் பாதி தூங்கிய நிலையிலும் பாதி விழித்து கொண்டிருப்பது போன்ற நிலையிலும் இருக்கும்.

இரண்டாம் நிலை எப்படி..?

இரண்டாம் நிலை எப்படி..?

முதல் நிலை முடிந்த பின் இரண்டாம் நிலைக்குள் நீங்கள் செல்வீர்கள். நீங்கள் என்பது உங்களின் முழு உடலையும் தான் குறிக்கிறது. இந்த நிலையில் உங்களை சுற்றி இருப்பவைகளை உங்களால் உணர இயலாது. மேலும், உடலின் தட்பவெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். ஒருவித குழப்ப நிலையை இப்போது அடைவீர்கள்.

முக்கிய நிலை..!

முக்கிய நிலை..!

இந்த நிலை உங்களின் கனவின் முக்கிய நிலையாக கருதப்படுகிறது. உங்களின் ஆற்றல் மீண்டும் உங்களுக்கு கிடைக்க கூடும். பலவித ஹார்மோன்கள் உடலில் வெளிப்பட தொடங்கும் நிலை தான் இந்த மூன்றாம் நிலை. கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் செயல்திறன் குறைய கூடும். மேலும், ரத்த ஓட்டமும் அதிகரிக்க கூடும்.

கனவு உலகம்..!

கனவு உலகம்..!

இந்த நிலையில் தான் நீங்கள் கனவு உலகத்துக்குள் நுழைய ஆரம்பிப்பீர்கள். ஒருவித மாயாஜால உலகமாகவே இது இருக்கும். பலருக்கும் இது நல்ல அனுபவத்தையே தர கூடும். ஒரு சிலருக்கு மோசமான அனுபவமாகவும் இருக்க கூடும். மூன்றாம் நிலை அறிகுறிகள் தான் கனவு உலகத்தில் நீங்கள் நுழைந்ததற்கான அர்த்தமாகும்.

மூளை எப்படி..?

மூளை எப்படி..?

கனவு உலகத்துக்குள் சென்றவுடன் புதுவித மாற்றங்கள் ஏற்பட கூடும். அதாவது, மூளை அதிக ஆற்றலுடன் செயல்படும். மேலும், கனவு காணும்போது உங்களின் கண்கள் அசைவுடனே இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்ற. அதுவும் மிக வேகமான செயல்பாடாக இருக்குமாம். இவை 90 முதல் 100 நிமிடங்கள் நீடிக்கும்.

உணர்ந்திருக்கிறீர்களா..?

உணர்ந்திருக்கிறீர்களா..?

பொதுவாக நாம் கனவு காணும்போது நமது உடல் மிகவும் தளர்ச்சி அடைந்த நிலைக்கு சென்று விடும். நமது உடலின் தசைகள் மிகவும் தளர்ந்த நிலையில் சென்று விடும். எனவே, நாம் கனவு காணும்போது நமது உடல் அசைவற்று இருப்பது போன்ற உணர்வு இதனால் தான் ஏற்படுகிறது.

மூளையும் கனவும்..!

மூளையும் கனவும்..!

பொதுவாக நாம் கனவு காணும்போது நமது மூளை தூங்கி விடுவதில்லை. மாறாக அது விழித்து கொண்டு அற்புதமாக வேலை செய்கிறதாம். நமது கலர் கலர் கனவுகளுக்கு முக்கிய காரணமே நமது மூளை தான் என்பதை மறந்து விடாதீர்கள். மேலும், பல நிலைகளை தாண்டியே இந்த கனவுகள் உருப்பெறுகின்றன.

இதய செயல்பாடு எப்படி..?

இதய செயல்பாடு எப்படி..?

கனவின் போது எப்படி உங்களின் தசை தளர்ந்து விடுகிறதோ, அதே போன்று உங்கள் இதயத்தின் செயல்பாடும் அதிகரிக்க கூடும். மேலும், சுவாசம் மெல்லமாக நடைபெறும். இது ஒவ்வொரு உறுப்புகளுக்கும் மாறுதல் அடையும். நமது உடல், கனவு நிலைக்கு செல்லும்போது மிகவும் தளர்ச்சி அடைந்து விடுகிறது. இது எப்போதும் ஏற்படுகின்ற இயல்பான மாற்றமே.

பலிக்குமா..?

பலிக்குமா..?

நாம் காணுகின்ற கணுவுகள் பலிக்குமா..?பலிக்காதா..? என்று கேட்டால் அதற்கு விடை "இல்லை" என்பதே. கனவு என்பது நமது எண்ண அலைகளே. இவை எந்த விதத்திலும் உயிர்பெற்று வராது. அப்படியே வந்தாலும் அது இயல்பாய் நடந்ததாகவே இருக்க கூடும். இதற்கும் கனவிற்கு சம்பந்தம் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும் நண்பர்களே.

இறுதியாக...

இறுதியாக...

கனவு நிலையில் இருந்து நாம் நிகழ் நிலைக்கு வரும்போது தான் நமது உடலும் எப்போதும் இருப்பது போன்று உணர்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நமது இதயத்தின் செயல்பாடும், தசைகளின் நிலையும், மூளையின் இயக்கமும் மீண்டும் பழைய படியே சாதாரண நிலைக்கு வந்து விடும். இப்படி தான் ஒவ்வொரு முறையும் கனவின் போது நமது உடல் மாற்றம் பெறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Really Happens To Your Body When You Dream

This article talks about What really happens to your body when you dream.
Story first published: Thursday, January 17, 2019, 10:23 [IST]
Desktop Bottom Promotion