For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி கூன்முதுகோட பிறந்த குழந்தைய கூட இப்படி மாத்தலாம்... எப்படினு தெரியுமா?

கூன் முதுகு எதனால் வருகிறது அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி மிக விரிவாகப் பார்க்கலாம். அது பற்றிய தொகுப்பு தான் இது.

|

பொதுவாக நாம் ஒரு நபரின் பின்புறத்தைப் பார்க்கும்போது அவர் முதுதண்டு உடலின் மத்தியில் நேராக அமைந்திருக்கும். ஆனால் இந்த நெளிமுதுகு அல்லது கூன் முதுகு கொண்டவரின் பின்புற முதுகெலும்பு ஒரு பக்கமாக வளைந்திருக்கக் கூடும்.

இந்த வளைவு சிலருக்கு சிறியதாக சிலருக்கு பெரியதாக சிலருக்கு நடுத்தர அளவில் காணப்படும். வளைவின் அளவு எப்படி இருந்தாலும், 10 டிகிரிக்கு மேல் வளைவு காணபட்டால் அது நெளிமுதுகு பாதிப்பாக கருதப்படுகிறது.

Scoliosis

இத்தகைய முதுகெலும்பு வளைவை விவரிக்க மருத்துவர்கள் " C" அல்லது "S" என்ற எழுத்தைக் குறியீடாக பயன்படுத்துகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூன்முதுகு

கூன்முதுகு

பெரும்பாலும் இந்த முதுகு தண்டு அமைப்பை நம்மால் நேரடியாக அடையாளம் காணமுடியாது. ஆனால் இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களை அவர்கள் நிற்கும் தோரணை மூலம் அடையாளம் காணமுடியும். அவர்கள் சற்று சாய்வாக நிற்கலாம், அவர்களின் தோள்பட்டைகள் அல்லது இடுப்பு இரண்டு புறத்திலும் சமமற்றதாக தோற்றமளிக்கும்.

MOST READ: இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்து மூலமா பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு

நெளிமுதுகு உண்டாகக் காரணம் என்ன?

நெளிமுதுகு உண்டாகக் காரணம் என்ன?

80% வழக்குகளில் இந்த நெளிமுதுகு ஏற்படுவதற்கான காரணத்தை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை. அறியப்படாத காரணம் மூலம் உண்டாகும் நெளிமுதுகு பாதிப்பை மருத்துவர்கள் "காரணமறியா நோய்"

அதாவது இடியோபதிக் ("idiopathic) என்று கூறுகின்றனர். சில வகை நெளிமுதுகு பாதிப்பிற்கு தெளிவான காரணிகள் உண்டு. அத்தகைய நெளிமுதுகு பாதிப்பில் உண்டாகும் வளைவை மருத்துவர்கள் இரண்டு விதமாக பிரிக்கின்றனர். அவை கட்டமைப்பு சார்ந்த வளைவு மற்றும் கட்டமைப்பு சாராத வளைவு ஆகியவை ஆகும்.

பாதிப்பு

பாதிப்பு

கட்டமைப்பு சாரா நெளி முதுகு பாதிப்பில், முதுகுத்தண்டு வழக்கம் போல் செயல் புரியும் திறன் உள்ளதாக இருக்கும். ஆனால் சற்று வளைவாக காணப்படும். இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு, மற்றவர்களை விட கால்கள் நீளமானதாக இருப்பது, தசை பிடிப்பு, குடல்வால் அழற்சி போன்ற அழற்சி போன்றவை இதற்கான சில காரணிகளாகும். இந்த பாதிப்புகளுக்கான சிகிச்சை எடுப்பதின் மூலம் நெளிமுதுகு பாதிப்பை நம்மால் போக்க முடியும்.

காரணிகள்

காரணிகள்

கட்டுமானம் சார்ந்த நெளிமுதுகு பாதிப்பில், முதுகுத்தண்டின் வளைவு கடினமாக இருப்பதால் அதனைப் போக்குவது இயலாத காரியம் ஆகும். இதற்கான காரணிகள் சிலவற்றை இப்போது காண்போம்.

• பெருமூளை வாதம்

• தசைநார் தேய்வு

• பிறப்பு குறைபாடுகள்

• நோய்த்தொற்றுகள்

• கட்டிகள்

• மார்வன் நோய்த்தொகை அல்லது மன நலிவு நோய் போன்ற மரபணு நிலை

MOST READ: பெண்ணுக்கு பிறப்புறப்பில் மச்சம் இருந்தா பேரதிஷ்டமாம்... அப்போ ஆண்களுக்கு?

பிறக்கும்போதே

பிறக்கும்போதே

குழந்தை பிறப்பிற்கு முன்னரே நிகழும் முதுகுத்தண்டு வளர்ச்சியின் போதே பிறவியோடு உண்டான நெளிமுதுகு பாதிப்பு தொடங்குகிறது. முள் எலும்புகள் என்று அழைக்கப்படும் சிறிய எலும்புகளில் உண்டாகும் பாதிப்புகள் , முதுகுத்தண்டு வளைவதற்கு காரணமாக இருக்கலாம். இந்த முள் எலும்புகள் முழுமையடையாதது அல்லது சீராக பிரிய தவறுவது போன்றவை சில காரணமாக இருக்கலாம். குழந்தை பிறந்தவுடன் மருத்துவர்கள் இந்த நிலையை கண்டறிகின்றனர். சில நேரங்களில் குழந்தை பதின் பருவத்தை எட்டும் வரை இந்த நிலை அறியப்படுவதில்லை.

பரிசோதனை

பரிசோதனை

குடும்ப வரலாறு அல்லது மரபணு போன்றவை சில நேரங்களில் காரணமறியா நெளிமுதுகு பாதிப்பிற்கு காரணியாக விளங்குகிறது. ஒருவேளை நீங்கள் இந்த நிலையை அனுபவித்திருந்தால், உங்கள் குழந்தையை நல்ல முறையில் அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

சிகிச்சை

சிகிச்சை

குழந்தைகளின் 10 - 15 வயது வரையிலான வளர்ச்சியின்போது இந்த பாதிப்பு பெருமளவில் காணப்படுகிறது. காரணமறியா நெளிமுதுகு பாதிப்பைக் கொண்ட ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளை சமமான எண்ணிக்கையில் சோதனை செய்து பார்த்த பின் அறியப்பட்டது என்னவென்றால், பெண் குழந்தைகளுக்கு உண்டான கூன் பாதிப்பு 10 மடங்கு மோசமான பாதிப்பைப் பெறுவதாகவும், இதற்கு சிகிச்சை மிகவும் அவசியம் என்பதும் அறியப்படுகிறது.

பதின் பருவத்தில் கண்டறியப்படும் இந்த நெளிமுதுகு பாதிப்பு வாலிப பருவத்திலும் தொடரும் வாய்ப்பு உள்ளது. முதுகுத்தண்டின் வளைவின் கோணம் காலப்போக்கில் அதிகரிக்கவே செய்யும். உங்களுக்கு ஆரம்ப காலத்தில் நெளிமுதுகு பாதிப்பு இருந்தால் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

Degenerative scoliosis என்னும் குறைபாடுள்ள நெளிமுதுகு பாதிப்பு, வாலிபர்களை பாதிக்கிறது. கீழ் முதுகில் உள்ள வட்டுகள் மற்றும் மூட்டுகள் வயது அதிகரிப்பதன் காரணமாக கிழியத் தொடங்குவதால் இந்த நிலை உண்டாகலாம்.

நெளிமுதுகு அல்லது கூன் முதுகு பாதிப்பைத் தடுக்க முடியுமா?

இதனைத் தடுப்பது இயலாத காரியம் ஆகும். மேலும், சிறு வயதில் உண்டான காயங்கள் நெளிமுதுகு பாதிப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்பதும் பொய்யான தகவலாகும்.

MOST READ: ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவது போல பெண்களுக்கு இந்திரியம் வெளியாகுமா?

குழந்தைகள்

குழந்தைகள்

இதே போல், பள்ளியில் படிக்கும் குழந்தைகள் முதுகில் மிகப்பெரிய புத்தக பாரத்தை சுமந்து செல்வதை நாம் பார்க்கிறோம். இந்த பாரம் காரணமாக முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவை உண்டாகலாம். ஆனால் இவையாவும் நெளிமுதுகு உண்டாவதற்கு காரணம் அல்ல.

மேலும் சிலர் மோசமான தோரணையில் அமரலாம், நிற்கலாம். இதுவும் நெளிமுதுகு பாதிப்பிற்கு காரணமாக அமைவது இல்லை. ஆனால் முதுகுத்தண்டு வளைவாக காணப்பட்டால் அதனை கவனிப்பது அவசியம். ஒரு குழந்தை நேராக நிமிர்ந்து நிற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் சென்று முதுகுத்தண்டு குறித்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: brain மூளை
English summary

What Is Scoliosis and its Causes

When a person has scoliosis, their backbone curves to the side. The angle of the curve may be small, large or somewhere in between. But anything that measures more than 10 degrees is considered scoliosis.
Desktop Bottom Promotion