For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு ஆணை முதன்முதலில் ஒரு பெண் தொடும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன..?

|

ஒரு பொண்ணு உங்க கைய தொட்டாலே 96 படத்துல வரது போல இதயத்தோட துடிப்பு ரொம்ப வேகமாக இருக்கா..? இது ஆண்களுக்கு மட்டும்தான் இப்படி இருக்குமா..? இல்லைனா பெண்களுக்கும் இதே போல தான் இருக்குமா..? அது ஏன் ஒருத்தவங்க நம்மள தொடும் போது உள்ளுக்குள்ள என்னென்னவோ நடக்குது..? இப்படி பல கேள்விகள் உங்க கிட்ட இருந்தா அதற்கு பதிலை நாங்க தரோம்.

மனித உடலில் பல வித மாற்றங்கள் உண்டாகும். இந்த மாற்றங்களுக்கு காரணமே ஹார்மோன்கள் தான். ஒருவரை குழந்தை பருவத்தில் இருந்து இளமை பருவத்திற்கு மாற்ற கூடிய தன்மை இந்த ஹார்மோன்களுக்கு தான் உள்ளது. ஒரு பெண் ஒரு ஆணை தொடும் போது உள்ளுக்குள் நடக்கின்ற அந்த உணர்வை பற்றி சொல்ல வார்த்தையே இல்லை.

இது ஆணுக்கு ஒரு விதமான உணர்வையும் பெண்ணுக்கு வேறு விதமான உணர்வையும் கொடுக்கும். இனி, எப்படிப்பட்ட உணர்வெல்லாம் முதல் முறை தொடுதலில் ஒரு ஆணுக்கு ஏற்படும் என்றும், அந்த உணர்வுகள் எத்தகைய மாற்றத்தை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உண்டாக்கும் என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொட்டால் பூ மலரும்..!

தொட்டால் பூ மலரும்..!

ஒரு பெண் ஒரு ஆணை தொடும் போது உண்மையில் பூ போல அந்த ஆண் மலர தொடங்குவான். காற்றில் மிதப்பது போன்ற உணர்வை அந்த தொடுதல் உண்டாக்கும்.

எவ்வளவு தான் பிறர் மீது கோபம், சண்டை, வெறுப்பு இருந்தாலும் அந்த பெண் தொடும் போது மட்டும் மொத்த உயிரும் சிலிர்த்து போய் விடும்.

தடை செய்யப்பட்டது..!

தடை செய்யப்பட்டது..!

96 படத்தில் வருவது போன்ற உணர்வுகள் இப்போது பலருக்கும் ஏற்படும். ஒரு பெண்ணை பார்த்து பேசவே இன்றும் சிலர் தயங்கி நிற்கின்றனர்.

அவ்வாறு இருக்க, ஒரு பெண் அந்த ஆணை லேசாக தொட்டாலே உள்ளுக்குள் சில சமயங்களில் மோசமான உணர்வும், பல சமயங்களில் வேறு விதமான உணர்வும் உண்டாகும்.

திக்கு முக்கு..!

திக்கு முக்கு..!

உடலில் இருக்க கூடிய என்டோர்ப்பைன் என்கிற ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தி ஆகும் நேரம் ஒரு பெண் உங்களை தொடும் நொடி தான்.

இதனால், மிக இதமான மென்மையான உணர்வை இந்த வித ஹார்மோன்கள் உண்டாக்கும். திக்கு முக்காகி போகிற நிலை கூட உங்களுக்கு ஏற்படலாம்.

அணைக்கும் போது..?

அணைக்கும் போது..?

ஒரு பெண் ஒரு ஆணை கட்டி அணைக்கும் போது உடலில் இருக்க கூடிய மொத்த ஹார்மோன்களும் புரட்டி போட தொடங்கும்.

தொடுதலில் இருந்து அணைப்பிற்கு மாறும் போது ஆக்சிடாக்சின், செரடோனின் போன்ற ஹார்மோன்கள் தான் ஆணின் உடலில் விந்தையான உணர்வை தருகின்றன.

MOST READ: எச்சரிக்கை! வறுத்த மீன், பொரித்த சிக்கன் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்..! காரணம் தெரியுமா..?

நேர்மறையான எண்ணங்கள்

நேர்மறையான எண்ணங்கள்

பொதுவாக இது போன்ற தொடுதல் உடலில் நேர்மறையான எண்ணங்களையே உண்டாக்கும். எதை செய்தாலும் அதில் ஒரு பாசிட்டிவிட்டி இருக்க ஏற்படும். சிலர் இந்த தொடுதலில் காதல் போன்ற உணர்வையும் பெறுவார்கள்.

ஷாக்..!

ஷாக்..!

சிலருக்கு ஒரு பெண் தன்னை தொட்டால் ஷாக் அடித்தது போன்று தோன்றும். இதற்கு அறிவியல் பூர்வமான காரணமும் உண்டு. அணுக்கள் எதிர்வினையாக சேரும் போது இது போன்ற உணர்வுகள் உண்டாகும்.

நெகட்டிவ் சார்ஜ் கொண்ட எலக்ட்ரோனும், பாசிட்டிவ் சார்ஜ் கொண்ட ப்ரோடானும் சேர்ந்தால் இப்படி தான் ஷாக் அடிக்கின்ற உணர்வு தரும்.

முத்தம்..!

முத்தம்..!

ஒரு பெண், ஆணுக்கு முத்தம் கொடுத்தால் அவ்வளவுதான். ஆமாங்க, இந்த உணர்வு முழுவதுமாக ஆணின் மூளையை சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்கும் ஆற்றல் மிக்கது என ஆய்வுகள் சொல்கின்றன. முதல் முத்தம் என்பது சாகும் வரை என்றே நினைவில் இருப்பது தானே.

லப் டப்

லப் டப்

இதயம் காதலின் சின்னமாக இருந்தாலும், இது போன்ற பல நேரங்களில் இது அபரிமிதமான நிலையில் அடித்து கொள்கிறது.

இதயம் வேக வேகமாக துடிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் அட்ரீனலின் என்கிற ஹார்மோன் தான். இந்த ஹார்மோன் ஒரு பெண் உங்களை தொடும் போது அதிக அளவில் சுரக்க தொடங்கும். இதன் விளைவே இதய துடிப்பு வேகமாகுதல்.

MOST READ: தாம்பத்தியத்தில் உங்கள் மனைவியை திருப்திப்படுத்த, இந்த மூலிகை டீயை தினமும் 1 கப் குடியுங்கள்..!

வைலின் வாசிப்பு.!

வைலின் வாசிப்பு.!

பல படங்களில் இது போன்ற காட்சியை பார்த்திருப்போம். அதாவது, ஒரு பெண் நம்மை தொட்டால் நம்மை சுற்றி வைலின் இசைப்பது போன்ற உணர்வு ஏற்படும். உண்மையில் இது பலருக்கும் உண்டாகி உள்ளது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆழம் அதிகம்..!

ஆழம் அதிகம்..!

ஒரு பெண் ஒரு ஆணை தொடும் போது மேற்சொன்ன பலவித மாற்றங்கள் அவரின் உடலில் தோன்றும். இதே போன்ற உணர்வுகள் தான் பெண்ணிற்கும் ஏற்படும்.

சில ஹார்மோன் மாற்றங்கள் மட்டும் மாற கூடும். எதுவாக இருந்தாலும் உங்களுக்கு பிடித்த பெண் உங்களை முதன்முதலாக தொடும் போது ஏற்படும் அந்த உணர்வுக்கு...சொல்ல வார்த்தையே இல்லை. இது போன்ற அனுபவம் உங்களுக்கும் இருந்தால் கமெண்டில் பகிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens to Your Body When Someone Touches You?

What Happens to Your Body When Someone Touches You?