For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மருத்துவமனையில் எப்போதுமே இந்த 8 பொருட்களை தொடவே கூடாதாம்! மீறி தொட்டால்!

|

கால மாற்றத்திற்கேற்ப நோய்களின் தாக்கமும் அதிகரித்து கொண்டே வருகிறது. யாருக்கு எப்போது எந்த நோய் வரும் என்பதே இங்கு மிக பெரிய கேள்வியாக தான் உள்ளது. கடந்த வருடங்களில் பலவித காய்ச்சல்கள், தொற்று வியாதிகள் நம்மை ஆட்டி படைத்து கொண்டிருந்தன. இதனால் பலர் உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் எப்போதுமே இந்த 8 பொருட்களை தொடவே கூடாதாம்! மீறி தொட்டால்!?

இது போன்ற மோசமான நிலைக்கு நம்மை தள்ளுவதே சுத்தமின்மையும், சுகாதார குறைபாடும் தான். மருத்துவமனைக்கு சென்றால் நோய்கள் குணமாகும் என்கிற எண்ணத்தில் அங்கு சென்றால், அங்கையும் நம்மை நோய்கள் துரத்தி கொண்டே வருகிறது. வெளியில் இருக்கின்ற நோய்களை விட மருத்துமனையில் உள்ள நோய்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

பல வகையான நோய் கிருமிகள் மற்ற இடத்தை காட்டிலும் மருத்துவமனையில் அதிக அளவில் உள்ளது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதற்கு காரணம் இங்குள்ள ஒரு சிலவற்றை நாம் தொடுவது தான். மருத்துவமனைக்கு சென்றால் எந்தவித பொருட்களை தொடவே கூடாது என்பதை இனி தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிஃப்ட்

லிஃப்ட்

எப்போதுமே மருத்துவமனைக்கு செல்லும் போது லிஃப்ட்டில் உள்ள பட்டனை பயன்படுத்த கூடாதாம். காரணம், லிஃப்ட்டில் நோயாளிகளை கொண்டு செல்லும் போது அவர்களின் உடலில் உள்ள கிருமிகள் அதே லிஃப்ட்டில் உள்ள ஒவ்வொரு இடங்களிலும் இருக்க கூடும். குறிப்பாக லிஃப்ட்டின் பட்டனில் அதிக அளவில் கிருமிகள் ஒட்டி கொள்ளும். ஆகவே, பட்டனை திசு பேப்பர் அல்லது சிறுதுணியை பயன்படுத்தி அழுத்தலாம்.

அமரும் இடம்

அமரும் இடம்

எதை பற்றியும் யோசிக்காமல் பார்வையாளர்கள் அமரும் இருக்கையில் நாமும் அமர்ந்து விடுவோம். ஆனால், இதுவும் ஆபத்தான இடம் தான்.

காரணம், இது போன்ற இடங்களில் வீரியம் அதிகம் கொண்ட நுண் கிருமிகள் இருக்கும். ஆகவே உட்காரும் போது ஆன்டி பையோட்டிக் கலந்த துணியை வைத்து துடைத்து விட்டு உட்காருங்கள்.

IV போல்!

IV போல்!

நமக்கு குளுக்கோஸ் அல்லது இரத்தம் ஏற்ற கூடிய கம்பி போன்று இருக்கும் இதனை எப்போதுமே தொட கூடாது. இதில் சில பயங்கர வகையிலான பாக்டீரியாக்கள் குடியிருக்கும்.

கூடவே இதில் பல நோயாளிகள் அவர்களது கையை வைத்திருப்பர். எனவே, இதன் பாதிப்பை தவிர்க்க சானிடைசர் பயன்படுத்தலாம்.

கைப்பிடி

கைப்பிடி

எக்கசக்க கிருமிகளின் கூடாரமாக விளங்கும் இடம் இது தான். கதவை திறக்கும் இந்த கைபிடிகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் நோயாளிகளின் கைகளில் இருந்து கிருமிகள் இங்கு மாற்றம் பெற்றிருக்கும். ஆதலால், இதை திசு பேப்பர் கொண்டு திறந்தால் பாதிப்பு இல்லை.

MOST READ:ஆண்கள் சுய இன்பம் கொள்வதால், அந்தரங்க உறுப்பில் எப்படிப்பட்ட அபாயகர மாற்றங்கள் உண்டாகும்?

ஸ்கிரீன்

ஸ்கிரீன்

மருத்துவமனையில் தொங்க விடப்பட்டிருக்கும் ஸ்கிரீனை தொடாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது. ஏனெனில், இதில் பலவித பாக்டீரியாக்கள், வைரஸ்கள் கூட அதிக அளவில் இருக்கும்.

பெரும்பாலும் மருத்துவமனைகளில் இதை அந்த அளவிற்கு பராமரிப்பது கிடையாது. ஆதலால், நீங்கள் தான் உங்களை ஜாக்கிரதையாக பார்த்து கொள்ள வேண்டும்.

குழாய்கள்

குழாய்கள்

பெரும்பாலும் பொது கழிப்பறைகள், பொது வெளியில் இருக்கும் இடங்களை பயன்படுத்தும் போது அதிக ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும்.

இவற்றை எல்லோரும் பயன்படுத்துவதால் மோசமான பாதிப்பை ஏற்படுத்த கூடிய பாக்டீரியாக்கள் ஒளித்து கொண்டிருக்கும். இவை மேலும் உங்களுக்கு அதிக வியாதிகளை தர கூடும்.

படுக்கை கம்பிகள்

படுக்கை கம்பிகள்

எப்போதுமே மருத்துவமனைக்கு சென்றால் இதை மறக்காதீர்கள். அதாவது, படுக்கையில் இருக்க கூடிய கம்பிகளை தொடாதீர்கள்.

இதை ஏதேனும் கிருமி நாசினிகளை பயன்படுத்தி துடைத்து விட்டு தொடுங்கள். இல்லையேல் மோசமான விளைவுகள் உங்களுக்கு நேரலாம்.

இயந்திரங்கள்

இயந்திரங்கள்

மருத்துவர்களோ அல்லது செவிலியர்களோ பயன்படுத்தும் இயந்திரங்களை ஒருபோதும் நீங்கள் தொட்டு விடாதீர்கள்.

இவற்றை அவர்கள் மட்டுமே பெரிதும் பயன்படுத்துவதால் நுண்ணுயிரிகள் அதிக அளவில் இதில் தங்கி இருக்கும். ஆதலால், இதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.

MOST READ: எவ்வளவு சரக்கடிச்சாலும் போதையே ஏறாமல் இருப்பதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கு தெரியுமா..?

தீர்வு!

தீர்வு!

மருத்துவமனை போன்ற பொது இடங்களுக்கு சென்றால் மேற்சொன்ன குறிப்புகளை நினைவில் வைத்து கொண்டு எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.

இந்த இடங்களில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பின் கை கால்களை சுத்தமாக கழுவி கொண்டு மற்ற வேலைகளை செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things to Never Touch in Hospitals

Things to Never Touch in Hospitals
Desktop Bottom Promotion