Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது? காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்!
நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனிப்பட்ட தன்மைகள் இருக்கும். சில உறுப்புகள் மிகவும் மென்மையானதாக இருக்கும். சில உறுப்புகள் எந்த வித பாதிப்புகள் வந்தாலும் அதை பெரிய அளவில் எடுத்து கொள்ளாது. உள் உறுப்புகள் ஒரு விதமாகவும், வெளி உறுப்புகள் வேறு விதமாகவும் தன்மை கொண்டவை. ஆதலால் பெரும்பாலும் வெளி உறுப்புகளை காட்டிலும் உள் உறுப்புகளுக்கே அதிக பாதிப்புகள் உண்டாகும்.

பலருக்கு இந்த பாதிப்புகள் ஆரம்ப காலத்தில் தெரியாது. நீண்ட காலத்திற்கு பிறகே உறுப்புகளில் ஏற்பட கூடிய பாதிப்புகள் என்னென்ன என்பது தெரிய வரும். உறுப்புகளில் நாம் பெரிதாக கவலை படாமல் இருக்க கூடிய உறுப்பு கைகள் தான். எந்த ஒரு பொருளை எடுக்க வேண்டுமென்றாலும் அதற்கு கைகள் தான் மிகவும் அவசியம்.
ஆனால், இந்த கைகளுக்கும் பலவிதங்களில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கைகளால் நாம் தொடுகின்ற சில பொருட்கள் ஆபத்தான விளைவுகளை கைகளுக்கு ஏற்படுத்துமாம். அவை என்னென்ன பொருட்கள் என்பதை பற்றி இனி அறிந்து கொள்வோம்.

ஆன்டி பாக்டீரியல் சோப்புகள்
பல வீடுகளில் இந்த பழக்கம் இன்று வரை நீடித்து வருகிறது. அதாவது, கைகளை கழுவும் போது சோப்புகளை பயன்படுத்துவர். இது மிக மோசமான பாதிப்பை கைகளுக்கு ஏற்படுத்தும் இது போன்ற ஆன்டி பாக்டீரியல் சோப்புகள் கைகளில் அரிப்பு, சொறி போன்றவற்றை கூட உண்டாக்க கூடும்.

ரப்பர் கையுறைகள்
பொதுவாக கைகளில் அணியப்படும் கையுறைகளை மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக ரப்பர் வகை கையுறைகளை பயன்படுத்த கூடாது.
இவை லேடெக்ஸ் என்கிற வேதி பொருளால் தயாரிக்கப்படுவதால் கைகளில் அணியும் போது அலர்ஜிகளை ஏற்படுத்தி மோசமான பாதிப்புகளை கைகளுக்கு உண்டாக்கும்.

வெப்ப காற்று
கைகள் அதிக அளவில் வெப்பம் தர கூடிய வெப்ப காற்றை கைகளின் ஈரத்தை நீக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பயன்படுத்தினால் அதுவும் பாதிப்புங்களை உண்டாக்கும். மேலும், கைகளின் ஈரப்பதத்தை இவை முழுவதுமாக பாதிக்க கூடும். ஆகவே, இது போன்ற கருவிகளை தவிர்ப்பது நல்லது.

நைல் பாலிஷ்
சிலருக்கு கைகளில் வைக்கப்படும் நைல் பாலிஷ் கூட ஒத்து கொள்ளாது. இது ஒவ்வொருவரின் உடன் அமைப்பையும் பொருத்தே மாறுபடும்.
விரல்களில் வைக்கப்படும் நைல் பாலிஷ்கள் நகத்தோடு சேர்த்து முழு கைகளையும் பாதிக்க கூடும். ஆதலால், அடிக்கடி நைல் பாலிஷ் வைக்கும் பழக்கத்தை தவிர்த்து விடுங்கள்.

பாடி ஸ்ப்ரே
சிலர் பாடி ஸ்பிரேவை கைகளுக்கும் அடித்து கொள்வர். இது போன்ற செயல்கள் கைகளை பாதித்து விடும். சிலருக்கு இது ஒவ்வாமை ஏற்படுத்தி அரிப்புகள், சொறி போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். ஆதலால், வாசனைக்காக கூட இது போன்ற செயல்களை செய்து விடாதீர்கள்.

சானிடைசர்
பலர் கைகளை கழுவ சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு சானிடைசர் போன்றவற்றை பயன்படுத்துவர். இதில் கூட ஆபத்துகள் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.
இவற்றில் ஆல்கஹால் கலந்திருப்பதால் கையின் ஈரப்பதத்தை குறைத்து வறட்சியை ஏற்படுத்தும். ஆதலால், இது போன்ற பழக்கத்தை தவிர்க்கவும்.

கிரீம்
பொதுவாகவே நமது கைகளில் பெட்ரோலியம் பொருட்கள் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது போன்ற அதிக வேதி தன்மை நிறைந்த பொருட்கள் உள்ள கிரீம்களை கைகளுக்கு தடவினால் அதனால் நிச்சயம் பாதிப்புகள் கைகளுக்கு உண்டாகும். பல சமயங்களில் கைகள் அரித்த படியே சிவப்பாக மாறி விடும்.

பாடி லோஷன்
உடலுக்கு போட்டு கொள்ளும் பாடி லோஷனை கைகளில் எப்போதுமே தடவ கூடாது. இது போன்ற பழக்கம் தான் கைகளுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது.
இவை கைகளில் உள்ள துளைகளை அடைத்து விடும். இதனால் தோலின் ஈரப்பதம் முற்றிலும் மாறுபட்டு வறட்சியை உண்டாக்கி விடும்.

அழகு சாதனங்கள்
நமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக கண்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது. குறிப்பாக வேதி தன்மை நிறைந்த பொருட்களை கைகளுக்கு நிச்சயம் பயன்படுத்த கூடாது. இவை கைகளை மட்டும் பாதிக்காமல், உடல் ஆரோக்கியத்தையும் சேர்த்தே பாதித்து விடும்.



Click it and Unblock the Notifications