For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பால் குடிப்பதால் ஆண்களுக்கு ஏற்படும் அந்தரங்க பிரச்சினை என்ன தெரியுமா?

|

உடல் ஆரோக்கியத்திற்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவென்றால் அது பால்தான். பால் மட்டுமின்றி பால் தொடர்பான பொருட்களான தயிர், நெய், வெண்ணெய் என அனைத்துமே நமக்கு ஒவ்வொரு வகையில் நன்மையை வழங்கக்கூடியதாகும்.

Things that happen to body when you go dairy free diet

ஆனால் பால் பொருட்களால் சில பக்கவிளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக உடல் எடை அதிகரிப்பு இதன் முக்கியமான பக்கவிளைவாகும். இதனை தவிர்ப்பதற்காக பால் பொருட்களை தவிர்க்கும் டயட் கடைபிடிக்கப்படுகிறது. உடல் எடைக்காக பால் பொருட்களை தவிர்ப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலும்புகளின் பலவீனம்

எலும்புகளின் பலவீனம்

எலும்புகளின் வலிமைக்கு அத்தியாவசிய தேவைகளான கால்சியம், வைட்டமின் டி, புரோட்டின் போன்றவை பாலில் அதிகம் உள்ளது. சிறுவயது முதலே எலும்புகள் வலிமையடைய வேண்டும் என்பதற்காகத்தான் குழந்தைகளுக்கு பால் கொடுக்கப்படுகிறது. ஒருவேளை நீங்கள் எடை குறைப்பிற்காக பால் பொருட்களை தவிர்க்கும் டயட்டை கடைபிடித்தால் இந்த ஊட்டச்சத்துக்களின் இழப்பை ஈடுசெய்யும் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் உங்கள் எலும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடையும். இதனால் இடுப்பு வலி, தசைப்பிடிப்பு, எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

கால்சியம் அதிகம் இருந்தாலும் பாலில் பொட்டாசியம் குறிப்பிட்ட அளவு இருக்கிறது, இது போதுமான அளவு இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. பால் பொருட்களை தவிர்ப்பது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கும். டயட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டும் சேர்த்து கொள்ளும்போது உங்கள் இரத்த அழுத்தத்தில் தொடர்ந்த ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

எடையில் மாற்றம்

எடையில் மாற்றம்

பாலை தவிப்பதற்கு எடை குறைப்புதான் உங்களின் முக்கிய காரணமாக இருந்தால் அதனை நீங்கள் அடைவது சந்தேகம்தான். ஏனெனில் பாலில் கலோரிகள் அதிகம் இருந்தாலும் அது உங்களுக்கு திருப்தியான உணர்வை வழங்கக்கூடும். இதனால் உங்கள் எடை சீராக பராமரிக்கப்படும். ஆனால் அதனை நீங்கள் தவிர்க்கும் போது அதற்கு பதிலாக நீங்கள் உணவில் சேர்த்து கொள்ளும் பொருளே உங்களின் எடையை தீர்மானிக்கும்.

MOST READ: இராவணனின் மனைவி ஆஞ்சநேயருக்கு அளித்த சாபம் என்ன? அதனால் அனுமனுக்கு என்ன நடந்தது தெரியுமா?

லாக்டோஸ் சகிப்புத்தன்மை

லாக்டோஸ் சகிப்புத்தன்மை

நீங்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால் பால் பொருட்களை சாப்பிடும்போது உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் எழக்கூடும். இதனை நீங்கள் தவிர்க்கும் போது உங்கள் உடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் அதிகரித்து உங்கள் வயிறை பாதுகாக்கும். லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருந்தும் தொடர்ந்து பால் பொருட்களை சாப்பிடுவது உங்களுக்கு வயிறு தொடர்பான பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

குறைவான வீக்கம்

குறைவான வீக்கம்

சிறிது உணவு சாப்பிட்டாலும் வயிறு பலூன் போல காட்சியளிக்கும் பிரச்சினை கொண்டவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு பால் பொருட்களை தவிர்க்கும் டயட் சிறந்த தீர்வாக இருக்கும். உங்கள் வயிறு இவ்வாறு வீக்கமாக காட்சியளிக்க காரணம் லாக்டோஸ் சகிப்புத்தன்மைதான். இந்த டயட்டில் நன்மை, தீமை இரண்டுமே உள்ளது. வயிறு வீக்கம் பிரச்சினை உள்ளவர்களுக்கு வீக்கத்தை குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும்.

புற்றுநோய் அபாயம் குறையும்

புற்றுநோய் அபாயம் குறையும்

சில பால் தொடர்பான பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அதனை நீங்கள் தவிர்க்கும் போது புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை நீங்கள் குறைக்கலாம். அதிகளவு கால்சியம் எடுத்துக்கொள்வது ஆண்களுக்கு புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது, ஏனெனில் அதிகளவு கால்சியம் ஆண்களுக்கு புற்றுநோயை தடுக்கும் ஹார்மோனின் உற்பத்தியை குறைக்கிறது. மேலும் நீங்கள் எப்படிப்பட்ட பால் பொருட்களை எடுத்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தும் இது மாறுபடும். ஏனெனில் இப்போது பால் பொருட்களில் அதிகளவு வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இதனால் கூட புற்றுநோய் ஏற்படலாம்.

MOST READ: இந்த திசையில் தலைவைத்து தூங்குபவர்களுக்கு ஆயுள் குறையுமாம் தெரியுமா?

புரோபயாடிக்ஸ்

புரோபயாடிக்ஸ்

புரோபயாடிக்ஸ் உங்கள் வயிறுடைய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். இந்த புரோபயாடிக்ஸ் பால், தயிர் போன்ற பொருட்களில் அதிகம் உள்ளது. ஆனால் நீங்கள் பாலை முழுமையாக தவிர்க்க வேண்டுமென்று விரும்பினால் புரோபயாடிக்ஸ் இருக்கும் மற்ற பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதுதான் ஊனங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things that happen to body when you go dairy free diet

When you started dairy free diet these things will happen to your body.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more