For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்ம முழு உடம்பையும் தாங்கிப்பிடிக்கறது இந்த எலும்புதானாம்... எப்படி தாங்குதுனு நீங்களே பாருங்க...

நமது முழு உடலையும் தாங்கி நிற்கும் பேட்டலா எலும்பு பற்றி தெரியுமா, அந்த எலும்பின் முக்கியத்துவம் பற்றியது தான் இந்த கட்டுரை. வாங்க தெரிஞ்சிக்கலாம்.

|

பேட்டலா என்ற எலும்பு மனித உடலில் உள்ள முக்கியமான எலும்பாகும். இதன் மூலம் தான் நமது உடல் நிறைய செயல்பாடுகளை செய்து வருகிறது. இந்த எலும்பு பார்ப்பதற்கு தம்மா துண்டு இருந்தாலும் ஒட்டுமொத்த உடலையும் தாங்கி நிற்கும் ஒரே எலும்பு இது தான்.

Patella

பிறக்கும் குழந்தைக்கு இந்த பேட்டலா எலும்பு இருப்பதில்லை. குழந்தைகளுக்கு 5-6 வயது வரை குருத்தெலும்பு மட்டுமே காணப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலும்பின் அமைப்பு

எலும்பின் அமைப்பு

இந்த பேட்டலா எலும்பு பார்ப்பதற்கு வட்ட வடிவில் தசைகள் மற்றும் தசைநார்களுடன் பிணைக்கப்பட்டு காணப்படும். மேலும் இது தொடை சதையில் ஆழமாக புதைக்கப்பட்டு முழங்கால் ஜாய்ண்ட்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இது தான் மூட்டு மையம் என்று அழைக்கப்படுகிறது. இது அப்படியே தசைநார்கள் மற்றும் மலக்குடல், ஃபெமோரிஸின் தசைநார்களுடன் இணைகிறது. இந்த எலும்பின் பின்புறம் குருத்தெலும்பு அமைந்துள்ளது. இந்த எலும்புகளுக்கிடையே உள்ள எண்ணெய் பசை உராய்வு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

MOST READ: நம்ம உடம்புல இப்படி தண்ணியோட அளவு குறையறத எப்படி கண்டுபிடிக்கலாம்? என்ன செய்யலாம்?

இரத்த ஓட்டம்

இரத்த ஓட்டம்

இரண்டு வாஸ்குலார் அமைப்புகள் பேட்டலா எலும்பிற்கு சப்போர்ட் ஆக அமைகின்றன. இதன் எக்ஸ்ட்ராஸியஸ் அமைப்பு ஜெனிக்குலார் தமனிகளுடன் கொழுப்பு படலத்துடன் பேட்டலா தசைநார்களுக்கு பின்னால் அமைந்துள்ளது. இதில் இன்ட்ராஸியஸ் அமைப்பு என்பது நிறைய இரத்த குழாய்கள் இணைக்கப்பட்டு பேட்டலாவின் சிறிய திறப்பு பகுதியில் அமைந்திருக்கும். மற்றொரு பகுதி ரெம்பவும் ஆழமாக புதைந்து காணப்படுகிறது.

செயல்பாடு

செயல்பாடு

பேட்டலாவின் அடிப்படை அமைப்பு ஃபுல்க்ரம் என்பது. இந்த புள்ளி அல்லது நெம்புகோல் தான் நமக்கு சப்போர்ட்டை தருகிறது. நெம்புகோல் குவாட்டர்செப்ஸ் தசையை கொண்டு காணப்படும். பேட்டலா உதவியுடன் குவாட்டர்செப்ஸ் தசைநார்கள் நீட்டித்து 50% வலிமையை தருகிறது. மேலும் பேட்டலா கால்களில் கொடுக்கப்படும் விசையை பரப்பி முழங்கால் மூட்டு நேரடி முறிவிலிருந்து பாதுகாக்கிறது.

முழங்கால் ஜாய்ண்ட்

முழங்கால் ஜாய்ண்ட்

முழங்கால் என்பது இரண்டு ஜாயிண்டுகள் இணைந்த பகுதி. எந்த இடத்தில் பேட்டலா ஃபெமரை சந்திக்குதோ அந்த பகுதி பேட்டலாஃபெமோரியல் ஜாய்ண்ட் என்று அழைக்கப்படுகிறது. திபியா தொடை எலும்பை சந்திக்கும் பகுதி திபியோஃபெமரல் மூட்டு என்று அழைக்கப்படுகிறது. இந்த முழங்கால் மூட்டு உடல் எடையில் குறிப்பிட்ட அளவு எடையை தாங்குகிறது. நீங்கள் சின்னதாக நடந்தால் கூட உங்கள் உடலை தாங்க இந்த பேட்டலா எலும்பு தான் உதவியாக இருக்கும். நடத்தலின் போது சுமையானது 1.5 மடங்கு உடல் எடையாக இருக்கும். இதுவே ஜாக்கிங் போன்றவை என்றால் உடல் எடை எட்டு மடங்காக அதிகரிக்கும்.

MOST READ: காபி பொடில யானை சாணி கலக்குறாங்களா?... அதயும் தெரிஞ்சே குடிக்கிறத பாருங்க...

இருமுனை பேட்டலா

இருமுனை பேட்டலா

மக்கள் தொகையில் 2 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் இருமுனை பேட்டலாவை கொண்டுள்ளனர். இந்த அதிகமான இன்னொரு பீஸ் சூப்பர்லேட்டரல் ஆசிஃபிகேஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த எலும்பு மேல் மற்றும் பக்கவாட்டு பகுதியை தனியாக பிரிக்கிறது. இந்த நிலை பொதுவாக 12 வயதில் காணப்படுகிறது. ஆண்களில் 9 மடங்கு அதிகம். 40% இரண்டு முழங்கால் முட்டிகளில் ஏற்படும் பாதிப்புகள் தன்னைத் தானே தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளது. வலி அதிகமாக இருந்ததால் உடனே மருத்துவரை அணுகி அறுவை சிகிச்சை செய்வது நல்லது.

பேட்டலர் முறிவு

பேட்டலர் முறிவு

கிட்டத்தட்ட 4 விதமான பேட்டலர் முறிவு உள்ளது. நிலையான எலும்பு முறிவு என்பது பேட்டலா எலும்பில் சிறியதாக பிளவு ஏற்பட்டு உடைந்த எலும்புகள் இடம் பெயர்ந்து காணப்படும். எலும்பு 3 க்கு மேற்பட்ட துண்டுகளாக உடையும் போது எலும்பு முறிவு ஏற்படுகிறது. திறந்த எலும்பு முறிவு என்பது மிகவும் ஆபத்தானது. உடைந்த எலும்புகள் சுற்றியுள்ள திசுக்களால் பாதிப்படைந்து தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது சுற்றியுள்ள திசுக்களை காயப்படுத்துகிறது மற்றும் சருமத்தை துளைக்கக்கூடும், இது தொற்றுநோய்க்கான வாய்ப்பையும் அறுவை சிகிச்சையின் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

MOST READ: கால்களில் இப்படி தேங்கியிருக்கிற இறந்த செல்களை ஒரே வாரத்தில் நீக்குவது எப்படி?...

இணை முழங்கால்கள்

இணை முழங்கால்கள்

இரண்டு பேட்டலாக்கள் இருப்பது மனிதர்களுக்கு சிக்கலை தருகிறது. தீக்கோழிகள் மேல் மற்றும் கீழ் பேட்டலாவை கொண்டுள்ளன. மேல் உள்ள பேட்டலா மற்ற உயிரினங்களில் இருப்பது போன்றே காணப்படும். கீழே உள்ளது முழங்கை போல காணப்படும். உங்கள் நீட்டிப்பு வேகத்தின் மூலமாக வேகமாக எலும்பை நகர்த்த முடியும் மற்றும் தசைநார்களை பாதுகாக்க கூடும் எனக் கருதுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Patella: Support for the Whole Body

The human patella is one of the most vital bones, enabling many common activities the body carries out. The small structure sustains a majority of the body's weight. As babies, we are born without kneecaps. Instead, we have cartilaginous placeholders that fully ossify by about age five or six. The patella is more than just a simple covering. Without it, something as simple as taking a step can result in painful complications.
Story first published: Tuesday, June 18, 2019, 11:46 [IST]
Desktop Bottom Promotion