For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா?

ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நமது ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையானதாகும். இந்த நீரின் அளவு குறையும்போது நமது உடலில் பல பிரச்சினைகள் எழ நேரிடும்.

|

மனிதன் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று நீராகும். நீர் இல்லையெனில் இந்த உலகத்தில் மனிதர்களின் வாழ்க்கை என்பது நினைத்து பார்க்க முடியாக அளவிற்கு மோசமானதாக மாறிவிடும். மெல்ல மெல்ல நாம் அந்த நிலையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம். தண்ணீரின் அவசியம் தெரிந்த நமக்கு அதனை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற ஞானம் இன்னும் வரவில்லை என்றுதான் கூறவேண்டும்.

Signs Which Says You’re Drinking Too Much Water

ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நமது ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையானதாகும். இந்த நீரின் அளவு குறையும்போது நமது உடலில் பல பிரச்சினைகள் எழ நேரிடும். அதேபோலத்தான் அதிகமாக நீர் குடிப்பதும் பல பாதிப்புகளை உண்டாக்கும். உங்களுக்கே தெரியாமல் ஆரோக்கியம் என்ற பெயரில் நீங்கள் அதிக தண்ணீரை குடித்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது. உங்கள் உடலில் தோன்றும் சில பிரச்சினைகள்தான் அதற்கான அறிகுறிகள். இந்த பதிவில் நீங்கள் அதிகம் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது அசௌகரியமாகவம், சங்கடமாகவும் இருக்கலாம். இதற்கு பல மருத்துவ காரணங்கள் இருக்கலாம் ஆனால் முதன்மையான காரணம் அதிகம் தண்ணீர் குடிப்பதுதான். ஒருநாளைக்கு 7 முறைக்கு மேல் நீங்கள் சிறுநீர் கழிக்க நேர்ந்தால் நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவை சோதித்து பார்க்க வேண்டியது அவசியமாகும். இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால் படுக்கைக்கு செல்லும் முன் அதிக நீர் குடிப்பதை தவிர்க்கவும்.

உங்கள் சிறுநீர் தெளிவாக இருக்கும்

உங்கள் சிறுநீர் தெளிவாக இருக்கும்

சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாக இருப்பது பிரச்சனையின் அறிகுறியாகும். எனவே நீங்கள் அதனை சரி செய்ய அதிகளவு தண்ணீர் குடிப்பீர்கள். உங்கள் சிறுநீர் எந்த நிறமும் இன்றி தெளிவாக இருப்பதுதான் ஆரோக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அது தவறான ஒன்றாகும். ஏனெனில் போதுமான அளவு தண்ணீர் குடித்து ஆரோக்கியமாக இருந்தால் உங்கள் சிறுநீரின் நிறம் மெல்லிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். எனவே உங்கள் சிறுநீர் நிறமற்று இருந்தால் நீங்கள் அதிக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தசை பிடிப்புகள்

தசை பிடிப்புகள்

அதிகளவு சிறுநீரக கழிப்பது உங்களுக்கு பொட்டாசியம் இழப்பை ஏற்படுத்தும். உங்கள் தசைகள் சிறப்பாக செயல்பட இந்த ஊட்டச்சத்து மிகவும் அவசியமானதாகும். இது குறைவாக இருக்கும் போது உங்கள் தசைகளில் அடிக்கடி பிடிப்புகளும், சுளுக்குகளும் ஏற்படும். அடிக்கடி தசை பிடிப்புகள் ஏற்பட்டால் நீங்கள் அதிக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

MOST READ: இந்த ருத்ராட்சத்தை அணிபவர்கள் சிவனுக்கு இணையாக மதிக்கப்படுவார்களாம் தெரியுமா?

 சோர்வு

சோர்வு

நீங்கள் அதிக தண்ணீர் குடிக்கும் போது அதனை சுத்தம் செய்து உங்கள் உடலில் இருக்கும் நீரின் அளவில் சமநிலையை ஏற்படுத்த உங்கள் சிறுநீரகம் அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் உங்கள் உடல் அதிக சோர்வுக்கு ஆளாக நேரிடும். மேலும் மனஅழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

கை மற்றும் கால்களில் வீக்கம்

கை மற்றும் கால்களில் வீக்கம்

உங்கள் இரத்தத்தில் இருக்கும் சோடியத்தின் அளவு சீரற்ற நிலையில் இருக்கும்போது உங்கள் உடலில் இருக்கும் நீர்சத்துக்கள் அதனை சுத்தம் செய்ய முயலும். இதனால் உங்கள் கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 தலைவலி

தலைவலி

அதிக நீர்சத்தால் ஏற்படும் சோடிய சமநிலையின்மை உங்கள் செல்களை நீரை கொண்டு நிரப்பும். உங்கள் மூளையை சோர்வாக்கும். இதனால் உங்கள் தலைக்குள் ஏற்படும் அழுத்தம் தாங்க முடியாத தலைவலியாக உங்களை படுத்தும்.

MOST READ:30 வயதை நெருங்கும் ஆண்கள் தொப்பையை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும்...!

தாகமில்லாத போதும் தண்ணீர் குடிப்பது

தாகமில்லாத போதும் தண்ணீர் குடிப்பது

உங்களுக்கு தண்ணீர் தேவைப்படுவதற்கான சிறந்த அறிகுறி தாகமாகும். ஆனால் தாகமில்லாத போதும் தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற உணர்வு எப்பொழுதும் உங்களுக்குள் தோன்றும். ஒருவேளை உங்களுக்கு தாகம் எடுக்கவில்லை என்றால் உங்கள் உடலில் போதுமான அளவு நீர்சத்து உள்ளது. தேவையில்லாமல் மேலும் மேலும் நீர் குடித்து உங்கள் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ளாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs Which Says You’re Drinking Too Much Water

These signs says you are drinking too much water.
Story first published: Thursday, May 30, 2019, 12:39 [IST]
Desktop Bottom Promotion