TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
எடை திடீரென அதிகரிக்க காரணம் நீங்கள் சாப்பிடும் இந்த ஊட்டச்சத்துதான் தெரியுமா?
நம் உடலின் சீரான வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியமானவையாகும். அதிலும் குறிப்பாக தை வெகுவாக பாதிக்கும். அனைத்து டயட்களிலும் அதனால்தான் புரோட்டின் அதிகம் சேர்க்கப்படுகிறது. புரோட்டின் எந்த அளவிற்கு உடலுக்கு நல்லதோ, அதேநேரம் அதன் அளவு அதிகரிக்கும் போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
ஒருவரின் உடல் எடைக்கு ஏற்ப அவர்கள் ஒருநாளைக்கு 0.8 கிராம் புரோட்டின் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த அளவு அதிகரிக்கும் போது அது பல பிரச்சினைகளை உண்டாக்கும். இந்த பதிவில் அதிகளவு புரோட்டினால் உங்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
மலச்சிக்கல்
அதிகளவு புரோட்டின் எடுத்துக்கொள்வது உங்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். உண்மைதான், அதிகளவு புரோட்டின் எடுத்துக்கொண்டு குறைவான அளவு கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்ளும்போது உங்கள் உடலுக்கு குறைந்தளவு நார்ச்சத்துக்களே கிடைக்கும். நமது வயிற்றின் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்துக்கள் மிகவும் அவசியமானதாகும். அதன் அளவு குறையும்போது அது உங்கள் வயிற்றில் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
நீர்ப்போக்கு பிரச்சினைகள்
புரோட்டின் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது நீங்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருக்கும். அதிகளவு புரோட்டின் சாப்பிடும்போது அது உங்கள் உடலில் உள்ள நீரின் அளவை குறைக்கும், மேலும் நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
வாய் துர்நாற்றம்
அதிகளவு புரோட்டினால் ஏற்படும் மற்றொரு பிரச்சினை வாய் துர்நாற்றம் ஆகும். புரோட்டின் உணவுகள் உங்கள் வாயின் துர்நாற்றத்தை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றது. இந்த நிலை ஹலிடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதை ஒருபோதும் புறக்கணிக்ககூடாது.
மோசமான மனநிலை
நீங்கள் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்சினை இதுவாகும். பொறுமையே இல்லாமல் நீங்கள் அடிக்கடி மிகவும் மோசமான மனநிலையில் இருந்தால் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நீங்கள் சாப்பிடும் அதிகளவு புரோட்டின் உங்கள் மனநிலையில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
உயர் கொழுப்பு
இது உங்கள் உடலில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறியாகும். அதிகளவு புரோட்டின் சாப்பிடும் போது அது உங்கள் உடலில் கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும். மேலும் இது உங்களை அடிக்கடி சோர்வாக்குவதுடன் சுவாசப்பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். உங்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் சாப்பிடும் டயட்டில் மாற்றம் கொண்டுவாருங்கள்.
எடை அதிகரிப்பு
காரணமே இன்றி சமீபத்தில் உங்கள் எடை அதிகரித்தால் நீங்கள் சாப்பிடும் புரோட்டின்களின் அளவை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். நொறுக்குத்தீனிகள், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடாமல் அதிகளவு புரோட்டின் சாப்பிடுவதாலேயே உங்களின் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் இதில் அதிகளவு கலோரிகள் உள்ளது.
MOST READ:இளம்வயதிலேயே நரைமுடி இருக்கிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது ஜாக்கிரதை...!