For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூக்கத்தில் யாரோ அமுத்துறாங்களா, மூச்சு விட முடியலையா பயப்படாதீங்க இது சாதாரண பிரச்சினைதான்...!

தூங்கும் குறைந்த நேரத்திலும் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவ்வாறு தூங்கும் போது ஏற்படும் ஒரு பிரச்சினைதான் தூக்க பக்கவாதம் என்பதாகும்.

|

நாள் முழுவதும் இந்த உலகம் நமக்கு கொடுக்கும் தொல்லைகளில் இருந்து நம்மை பாதுகாப்பது தூக்கம்தான். ஆனால் இன்று மாறிவிட்ட வாழ்க்கை முறையால் தூங்கும் நேரம் என்பது மிகவும் குறைந்து விட்டது. அவ்வாறு தூங்கும் குறைந்த நேரத்திலும் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவ்வாறு தூங்கும் போது ஏற்படும் ஒரு பிரச்சினைதான் தூக்க பக்கவாதம் என்பதாகும்.

Scary Things that Can Happen If You Have Sleep Paralysis

இந்த குறைபாடு நம்நாட்டில் 7.6 சதவீதத்தினருக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. தூங்கும்போது மூச்சு விட சிரமமாக இருப்பது, யாரோ அழுத்துவது போல இருப்பது, அசைய முடியாமல் போவது போன்ற பிரச்சினைகள் நமக்கு ஏற்படலாம். இதற்கெல்லாம் காரணம் தீயசக்திகள் என்று நினைத்தால் அது தவறான கருத்தாகும். இதற்கு காரணம் தூக்க பக்கவாதம் ஆகும். இந்த பதிவில் இந்த குறைபாட்டால் ஏற்படும் மோசமான அனுபவங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசைய முடியாமல் இருப்பது

அசைய முடியாமல் இருப்பது

இதன் பெயருக்கு ஏற்றார் போல இதை வாத நிலை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் உங்களால் கை, கால்களை அசைக்கவோ, நகர்த்தவோ இயலாது. இது நீங்கள் பாதி தூக்கத்தில் இருக்கும்போது ஏற்படுவதாகும். இந்த தருணத்தில் உங்கள் மூளைக்கும், உடலுக்கும் இருக்கும் பிணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும். இதனால் உங்கள் மூளை உங்கள் உடல் பாகங்களை அசைக்க உதவாது. இது உங்களை அதிகம் பயமுறுத்தலாம் ஆனால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சில நொடிகளே இந்த நிலை நீடிக்கும்.

மூச்சு விட சிரமம்

மூச்சு விட சிரமம்

இது பலருக்கும் தூங்கும்போது ஏற்படும் ஒரு அனுபவமாகும். மூச்சு விட சிரமப்படுவது போல அனைவருமே உணர்ந்திருப்போம். சிலர் தங்கள் மார்பு மீது யாரோ அமர்ந்து அழுத்தி மூச்சு விடுவதை தடுப்பது போல உணர்வதாக சிலர் கூறுவார்கள் அதற்கு காரணம் தூக்க வாதம்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

மாயைகள் தோன்றுவது

மாயைகள் தோன்றுவது

கை, கால்களை அசைக்க முடியாமல் போவது, மூச்சு விடுவதில் சிரமம் மட்டுமின்றி சில நோயாளிகளுக்கு மாயயைகள் கூட தோன்றும். பெரிய பாம்பு அல்லது பூச்சி தான் தன் மீது இருப்பது போலவும், தன்னை காப்பாற்ற யாரும் இல்லாதது போலவும் உணர்வுகள் தோன்றும்.

MOST READ: பெண்களே! இந்த ராசி ஆண்களை காதலிக்கிறதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சுக்கங்க..அதான் உங்களுக்கு நல்லது..!

அறையில் யாரோ இருப்பது போன்ற உணர்வு

அறையில் யாரோ இருப்பது போன்ற உணர்வு

தூக்க பக்கவாதத்தின் முக்கியமான அறிகுறி என்னவெனில் அறையில் யாரோ புதிய ஆட்கள் இருப்பது போல தோன்றுவதும் அதனை உணர்வதும்தான்.உங்கள் மூளையில் இருக்கும் எச்சரிக்கை உணர்வு தூங்கும்போதும் விழித்திருப்பதனால் ஏற்படும் விளைவுதான் இது.

தூக்கத்தில் இருந்து விழுவது போன்ற உணர்வு

தூக்கத்தில் இருந்து விழுவது போன்ற உணர்வு

தூக்க பக்கவாதத்தால் ஏற்படும் மற்றொரு விளைவு விழுவது போலவோ அல்லது பறப்பது போலவோ ஏற்படும் உணர்வாகும். சிலசமயம் தங்களின் ஆன்மா மட்டும் வெளியே வந்தது போல உணர்வார்கள்.

பீதியை ஏற்படுத்தும்

பீதியை ஏற்படுத்தும்

அசைய முடியாமல் இருந்தோ அல்லது மூச்சு விட சிரமப்பட்டோ தூக்கத்தில் இருந்து எழும்போது அது நம்முடைய பதட்டத்தை பலமடங்கு அதிகரித்திருக்கும். நமது இதயம் வேகமாக துடிக்கும். இதனை நினைத்து நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் இது பலருக்கும் ஏற்ப்படும் ஒரு பிரச்சினைதான்.

MOST READ: இந்த பழக்கம் உள்ளவர்கள் சனிபகவானின் கோபத்திற்கு ஆளாவதை தவிர வேறு வழியே இல்லையாம் தெரியுமா?

காரணம்

காரணம்

இந்த குறைபாடு தோன்ற காரணம் சோர்வு அல்லது மனஅழுத்தமாக கூட இருக்கலாம். REM என்று அழைக்கப்படும் தூக்கநிலை நீங்கள் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வதற்கு முன் இருக்கும் நிலை ஆகும். இந்த நிலையில் இருக்கும்போது மட்டும்தான் உங்களுக்கு இந்த பிரச்சினைகள் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Scary Things that Can Happen If You Have Sleep Paralysis

If you have sleep paralysis you will experience these scary things.
Story first published: Thursday, May 16, 2019, 16:39 [IST]
Desktop Bottom Promotion