Just In
- 1 hr ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 3 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
- 4 hrs ago
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
- 5 hrs ago
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா?.. கண்டிப்பா படிங்க…!
Don't Miss
- News
நடுக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ 50 லட்சத்துக்கு ஏலம்.. விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
- Sports
ஒலிம்பிக் உட்பட எந்த விளையாட்டு தொடரிலும் பங்கேற்கக் கூடாது.. ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் அதிரடி தடை!
- Movies
இமான் காட்டில் பெரிய நடிகர்கள் வரவு.. செம மழை.. இசை மழையும் கூட
- Automobiles
ரெனோ ட்ரைபர் காரில் விரைவில் புதிய டர்போ எஞ்சின்... மாருதி எர்டிகாவுக்கு புது நெருக்கடி
- Finance
ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..!
- Education
வேலை, வேலை, வேலை.! ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை!!
- Technology
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தலையணை வைத்து தூங்குபவரா நீங்கள்? இனிமேலும் அந்த தப்ப பண்ணாதீங்க..உங்களுக்கான எச்சரிக்கைதான் இது..!
அனைவருக்குமே பிடித்த மற்றும் அவசியமான ஒரு செயல் உண்டென்றால் அது தூக்கம்தான். ஏனெனில் எதார்த்த உலகின் இம்சைகளில் இருந்து நம்மை காப்பாற்றும் ஒரு அற்புத செயலாக தூக்கம் இருக்கிறது. தூங்குவதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை இருக்கிறது. ஆனால் அனைவரும் தூக்கத்தில் கடைபிடிக்கும் ஒரு பொதுவான முறை தலையணை வைத்து தூங்குவதாகும்.
மிருதுவான தலையணனைகளை வைத்து தூங்க யாருக்குத்தான் பிடிக்காது. இது சுகமான தூக்கத்தை வழங்கக்கூடும். இது நல்ல தூக்கத்தை வழங்கும் ஆனால் ஆரோக்கியமான தூக்கத்தை வழங்குமா என்றால் அது கேள்விக்குறிதான். ஏனெனில் தலையணை வைக்காமல் தூங்கும்போது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்த பதிவில் தலையணை வைத்துக்கொள்ளாமல் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

முகப்பரு மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது
உண்மைதான். தலையணை இல்லாமல் தூங்குவது உங்களுக்கு முகப்பரு வராமல் தடுக்க உதவும். தலையணை வைத்து தூங்கும்போது உங்கள் முகம் தலையணைக்கு உட்புறமாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் முகத்தில் பாக்டீரியாக்கள் பரவ மற்றும் அழுக்கு பரவ வாய்ப்புள்ளது. இது உங்கள் சருமத்தில் பருக்களை ஏற்படுத்தும். பருக்கள் மட்டுமின்றி இதனால் உங்கள் முகத்தில் சுருக்கங்களும் ஏற்படலாம். உங்கள் முகம் தலையணையுடன் இணைந்திருக்கும் போது அது முன்கூட்டியே சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. சருமத்தை பராமரிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் தலையணை வைத்துகொள்ளாமல் தூங்குவது நல்லது.

முதுகு வழி
முதுகு வலியால் அவதிப்படுபவராக நீங்கள் இருந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது தலையணை வைத்து தூங்குவதை தவிர்ப்பதுதான். ஏனெனில் உங்களுக்கு முதுகுவலி ஏற்பட முக்கிய காரணம் உங்களின் தலையணைதான். தலையணை இல்லாமல் தூங்கும்போது உங்கள் முதுகெலும்பு ஓய்வெடுக்க முடியும். மேலும் அதனை இயற்கை வடிவிலேயே வலையாமல் இருக்கும்.

தூக்கத்தின் தரம்
தலையணை இல்லாமல் தூங்கும்போது உங்கள் தூக்கத்தின் தரம் அதிகரிக்கும். மென்மையான தலையணை வைத்து தூங்கும் போதுதான் உங்களுக்கு நிம்மதியான தூக்கமும், கழுத்து மற்றும் முதுகிற்கு ஓய்வும் கிடைக்கிறது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் நினைப்பது தவறாகும். ஆய்வுகளின் படி தலையணை இல்லாமல் தூங்குவதுதான் உங்கள் தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கும். தலையணை இல்லாமல் தூங்குவது உங்களுக்கு இன்சொமேனியா போன்ற தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும்.
MOST READ: இச்சாதாரி நாகங்கள் வாழ்ந்தது உண்மையா? இச்சாதாரி நாகம் பற்றிய வியக்கவைக்கும் ரகசியங்கள்...

மனஅழுத்தத்தை குறைக்கும்
தவறான நிலையில் தூங்குவது கூட உங்கள் மனஅழுத்தத்தை அதிகரிக்கும். ஏன் சரியாக தூங்க முடியவில்லை என்ற எண்ணத்திலேயே நீங்கள் தூக்கத்தை இழக்க தொடுங்குவீர்கள். இதன் காரணமாக உங்கள் மனஅழுத்தம் அதிகரிக்கும். எனவே தலையணை இல்லாமல் தூங்கும்போது உங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தின் அளவு குறையும்.

நினைவாற்றலை அதிகரிக்கும்
நாம் விழித்திருக்கும் நேரத்தில் மூளை எப்பொழுதும் வேலை செய்துகொண்டே இருக்கும். அதுவே நாம் தூங்கும்போது மூளை ஓய்வில் இருக்கிறது, இது நமது மூளையை நன்கு செயல்பட வைக்க உதவும். எனவே நீங்கள் பொருத்தமில்லாத நிலையில் தூங்கும் போது உங்கள் நினைவாற்றலை தவிர்க்க நீங்கள் தவறுகிறீர்கள். நாம் நன்றாக தூங்கினால் மட்டுமே நமது மூளை நன்றாக செயல்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகள்
உங்கள் குழந்தை நீண்ட நேரம் மென்மையான தலையணையில் தூங்கினால் அவர்களுக்கு பிளாட் ஹெட் சிண்ட்ரோம் என்னும் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த குறைபாடு ஏற்பட்டால் குழந்தையின் தலை ஒருபுறம் மட்டும் தட்டையாக மாற வாய்ப்புள்ளது. குழந்தையின் தலை மிகவும் மிருதுவாக இருப்பதால் அவர்களுக்கு இந்த குறைபாடு விரைவில் ஏற்பட்டுவிடும். எனவே உங்கள் குழந்தைக்கு ஒருபோதும் தலையணை வைக்காதீர்கள். இது அவர்களின் தூக்கத்தை எந்த வகையிலும் பாதிக்காது.

குழந்தைகளுக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்படுவதை தடுக்கிறது
குழந்தைகள் நீண்ட நேரம் தலையணை வைத்து தூங்கும்போது அவர்களுக்கு கழுத்து சுளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கென தனியாக வடிவமைக்கப்பட்ட தலையணையாக இருந்தால் இந்த பிரச்சினை ஏற்படாது அதுவே சாதாரண தலையணையாக இருந்தால் குழந்தைகளுக்கு பிரச்சினைதான். தலையணையின் வேலையே உங்கள் கழுத்து, முதுகு மற்றும் கீழ்முதுகை ஒரே நேர்கோட்டில் வைப்பதுதான். தவறான தலையணையை தேர்ந்தெடுக்கும்போது உங்களுக்கு இந்த கழுத்து பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பை இது அதிகரிக்கிறது.
MOST READ: மகாபாரத போரில் உயிர் பிழைத்த துரியோதனனின் ஒரே ஒரு சகோதரன் யார் தெரியுமா?

அலர்ஜிகளை குறைக்கும்
பலருக்கும் தூசி அலர்ஜிகள் இருக்கிறது, மாற்றப்படாத தலையணை மற்றும் தலையணை உறைகள் இந்த பிரச்சினையை அதிகரிக்கும். உங்கள் அறையில் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் உங்கள் தலையணையும் ஒன்று. அதனை தலைக்கு வைத்து நாசிக்கு அருகில் சுவாசிக்கும் போது அவை உங்கள் உடலுக்குள் செல்லும் வாய்ப்புகள் அதிகம். இதனால் உங்களுக்கு அலர்ஜி பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.