For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இந்த எளிய முறைகளை பின்பற்றினாலே போதும்...!

இயற்கையாக நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே இந்த கொசுக்கடி பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம்.

|

மழைக்காலம் வந்தால் மழை வருகிறதோ இல்லையோ கொசு அதிகம் வந்துவிடுகிறது. மழைக்காலத்தில் பலரும் எளிதில் நோய்களில் விழ காரணம் கொசுக்கள்தான். கொசுக்கள் மூலம் பல ஆபத்தான நோய்கள் பரவுகிறது. மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு என கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் ஏராளம்.

natural ways to get rid of mosquitoes

கொசுக்கடியில் இருந்து தப்பிக்கவும், நமது தூக்கத்தை பாதுகாக்கவும் கடைகளில் பல செயற்கை பொருட்கள் கிடைக்கிறது. ஆனால் இயற்கையாக நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே இந்த கொசுக்கடி பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம். இந்த பதிவில் இயற்கையான முறையில் கொசுக்கடியில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேம்பு

வேம்பு

வேம்பு அதன் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளுக்காக வீட்டில் இருக்கும் கொசு விரட்டியாக பயன்படுத்தப்படுகிறது. உங்கள் உடலில் கொசு அதிகம் கடிக்கும் இடங்களில் வேப்பெண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தேய்க்கவும். இது சருமத்தால் உறிஞ்சப்பட சிறிது நேரம் எடுக்கும் ஆனால் கொசுவை விரட்ட இது ஒரு நல்ல முறையாகும்.

புதினா

புதினா

பல்வேறு ஆய்வுகளின் படி புதினா எண்ணெய் மற்றும் புதினா சாறு அவற்றின் நறுமணத்தால் சிறந்த பூச்சி விரட்டியாக இருக்கிறது. கொசு அதிகம் கடிக்கும் இடத்தில் இந்த எண்ணெயை தடவுங்கள்.

லேவண்டர் எண்ணெய்

லேவண்டர் எண்ணெய்

இந்த மலரின் வாசனை கொசுக்களை விரட்டக்கூடும். எனவே உங்கள் வீட்டில் லெவெண்டர் எண்ணெயை தெளிப்பது அல்லது இந்த மலரின் செடியை வளர்ப்பது உங்கள் வீட்டை கொசுக்களிடம் இருந்து பாதுகாக்கும்.

MOST READ:இந்த சகுனங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள்...இது உங்களை நோக்கி வரும் ஆபத்திற்கான எச்சரிக்கை மணி...!

பூண்டு

பூண்டு

பூண்டு அதன் கடுமையான வாசனை காரணமாக மிகவும் திறமையான கொசு விரட்டியாக செயல்படுகிறது. ஒரு பூண்டை நசுக்கி அதனை தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். இதனை உங்கள் அறையை சுற்றி தெளிக்கவும். இது உங்களை கொசுக்களிடம் இருந்து பாதுகாக்கும்.

யூகலிப்டஸ் மற்றும் எலுமிச்சை எண்ணெய்

யூகலிப்டஸ் மற்றும் எலுமிச்சை எண்ணெய்

யூகலிப்டஸ் மற்றும் எலுமிச்சை எண்ணெய் கலந்த கலவை அதன் ஆன்டி செப்டிக் மற்றும் பூச்சிகளை விரட்டும் குணம் காரணமாக கொசுக்களை விரட்ட பயன்படுத்தப்படுகிறது. யூகலிப்டஸ் எண்ணெயையும், எலுமிச்சை எண்ணெயையும் சரியான அளவில் எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து உங்கள் உடலில் தேய்த்து கொள்ளவும்.

காபி கொட்டைகள்

காபி கொட்டைகள்

கொசுக்களை விரட்ட மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம் காபி கொட்டைகள் ஆகும். பயன்படுத்திய காபி கொட்டைகளை உங்கள் வீட்டு அருகில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் போடவும்.

கற்பூரம்

கற்பூரம்

உங்கள் வீட்டை சுற்றி கொசுக்கள் அண்டாமல் இருக்கவும் சுற்றுப்புறத்தை பாதிக்காமல் இருக்கவும் கற்பூரம் சிறந்த ஒன்றாகும். வீட்டின் வாயிலில் ஒரு கற்பூரத்தை கொளுத்தி விட்டு கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு 10 நிமிடம் வெளியே இருக்கவும்.

MOST READ:சர்க்கரை நோயை எளிதில் கட்டுப்படுத்த இந்த சியா விதைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

துளசி

துளசி

துளசியில் ஆன்டி பையாட்டிக் மற்றும் பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. ஆயுர்வேதத்தின் படி உங்கள் வீட்டில் துளசி செடி வைப்பது அல்லது ஜன்னல்களின் அருகே துளசி எண்ணெயை தெளிப்பது உங்கள் வீட்டிற்குள் கொசுக்கள் நுழையாமல் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

natural ways to get rid of mosquitoes

Here is the list of home remedies that will keep mosquitoes at bay.
Story first published: Thursday, July 4, 2019, 17:50 [IST]
Desktop Bottom Promotion