Latest Updates
-
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா? -
கீரை வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
பலாக்கொட்டை இருந்தா.. கத்திரிக்காய், முருங்கைகாய் சேர்த்து இப்படி குழம்பு வையுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
July 2026 Horoscope: ஜூலை மாதம் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப மோசமான மாதமாக இருக்கப்போகிறதாம் - ஜாக்கிரதை -
Men's Health Month: ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளை பட்டியலிட்ட டாக்டர்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுமாம்
இந்த குறைபாட்டில் ஒன்று இருந்தாலும் பெண்களுக்கு உடலுறவிற்கு பிறகு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும்
சமீப காலமாக பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினை உடலுறவில் ஈடுபட்ட பிறகு அடிவயிற்றில் ஏற்படும் வலியாகும்.
பாலுறவு என்பது ஆண், பெண் இருவருக்குமே அவசியமான மற்றும் அடிப்படையான ஒன்றாகும். நமது உடல் சீராக இயங்க பாலுறவு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். பாலுறவை பொறுத்தவரை ஆண், பெண் இருவருமே ஈடுபட்டாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னவோ பெரும்பாலும் பெண்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது.

சமீப காலமாக பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினை உடலுறவில் ஈடுபட்ட பிறகு அடிவயிற்றில் ஏற்படும் வலியாகும். பெரும்பாலும் பெண்களுக்கு உறவில் ஈடுபடும் போது வலி ஏற்படுவது சாதாரண ஒன்றாகும், ஆனால் உறவிற்கு பிறகு அடிவயிற்றில் வலி ஏற்படுவதை அப்படி எளிதில் விட்டுவிட முடியாது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், குறிப்பாக சில மருத்துவ குறைபாடுகளால் பெண்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பதிவில் பெண்களுக்கு உறவிற்கு பிறகு அடிவயிற்றில் வலி ஏற்பட காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

கர்ப்பகாலம்
சில கர்ப்பிணி பெண்களுக்கு உறவில் ஈடுபட்ட பிறகு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை பெண்களுக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அவர்கள் முதலில் செய்ய வேண்டியது கர்ப்ப சோதனைதான். சிசுவானது யுட்ரஸ் தாண்டி வளர தொடங்கும் போது இப்படி அடிவயிற்றில் வலி ஏற்படும். இதற்கு மற்றொரு வாய்ப்பு 20 வாரங்களுக்கு முன் கருச்சிதைவு ஏற்படப்போவதாகவும் இருக்காலம்.

எண்டோமெட்ரியோஸிஸ்
எண்டோமெட்ரியோஸிஸ் நோய்க்கான அறிகுறிகளில் முக்கியமானது உறவிற்கு பிறகு அடிவயிற்றில் ஏற்படும் வலியாகும். பத்தில் ஒரு பெண்ணுக்கு இந்த குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. எண்டோமெட்ரியோஸிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த நோய்க்கான செல்கள் யூட்ரஸ் தாண்டி மற்ற உறுப்புகளிலும் வளர ஆரம்பிக்கும் குறிப்பாக பலோபியன் குழாய்களில். இதன் மற்ற அறிகுறிகள் வலி நிறைந்த மாதவிடாயும், கருவுறாமையும்தான்.

அடினோமயோசிஸ்
இது எண்டோமெட்ரியோஸிஸுடன் தொடர்புடைய நிலையாகும். கருப்பை சுரப்பிகள் தசை சுவரில் வளர்வதால் வலியை ஏற்படுத்துகிறது. இந்த சுரப்பிகள் வளர்வதுடன் இரத்தக்கசிவையும் ஏற்படுத்தும். அடினோமயோசிஸ்க்கு இதுவரை சிகிச்சை முறை கண்டறியப்படவில்லை. வலியை குறைக்க மட்டுமே வாய்ப்புகள் உள்ளது.

தவறாக வைக்கப்பட்ட IUD
IUD(intrauterine contraceptive device) என்பது கருப்பை கருத்தடை சாதனமாகும். இது கருப்பையின் சுவரை விட்டு விலகியோ அல்லது முற்றிலும் வேறு இடத்திற்கு மாறினாலோ உறவிற்கு பிறகு இது கடுமையான வலியை ஏற்படுத்தும். இது அடிவயிற்றில் அழுத்துவது போன்ற மோசமான வலியை ஏற்படுத்தும். இதனை கருப்பையின் வேறு இடத்தில் மாற்றி வைக்கலாம் ஆனால் அதுவும் வலியை ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான்.

கருப்பை கட்டிகள்
இதனை மயோமாஸ் என்று அழைப்பார்கள், கருப்பையில் ஏற்படும் இந்த கட்டிகள் உறவின் போதும் உறவிற்கு பிறகும் கடுமையான வலியை பெண்களுக்கு ஏற்படுத்தும். இந்த கட்டிகள் கருப்பையின் எந்த இடத்தின் வேண்டுமென்றாலும் வளர வாய்ப்புள்ளது, இவை தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். இதன் அளவு அதிகரிக்க அதிகரிக்க பெண்களுக்கு ஏற்படும் வலியின் அளவும் அதிகரிக்கும். இதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதே நல்லது.

ஹைபர்ட்டோனியா
பெண்களின் பிறப்புறுப்பின் தசைகள் இறுக்கமாக மாறும்போது ஹைபர்ட்டோனியா இந்த நிலை ஏற்படும். இந்த நிலையில் உறவில் ஈடுபடுவது வலி நிறைந்த அனுபவமாக பெண்களுக்கு இருக்கும். தசைகள் மற்றும் நரம்புகள் மோசமடைந்து, மென்மையாகவும், அதிக செயல்திறன் மிக்கதாகவும் ஆகிவிடக்கூடும் இதனால் உறவு வலி நிறைந்ததாக மாறிவிடுகிறது.

இடுப்பு அழற்சி நோய்
திடீரென அடிவயிறு மற்றும் இடுப்பில் வலி ஏற்படுவது, பிறப்புறுப்பில் நாற்றம், உறவின் போது வலி மற்றும் இரத்தப்போக்கு போன்றவை இருந்தால் பெண்கள் இந்த நோய்க்கான சோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இது பெரும்பாலும் 15 வயது முதல் 44 வயது வரை உள்ள பெண்களுக்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த குறைபாட்டுடன் இருக்கும்போது உறவில் ஈடுபடுவதை தவிர்ப்பதே நல்லது.

கருப்பை நீர்க்கட்டிகள்
கருப்பை நீர்க்கட்டிகள் என்பது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினையாகும். கருப்பையில் நீர்ம வடிவில் ஏற்படும் ஒருவகை கட்டிகள்தான் இவை. பெரும்பாலும் இவற்றால் எந்த பாதிப்புகளும் ஏற்படாது. ஆனால் சில பெண்களுக்கு இதனால் அதிக வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அடிவயிற்றில் வலி மற்றும் வீக்கம், மாதவிடாய் தொடங்கும் முன்பு அடிவயிற்றில் வலி ஏற்படுவது, வாந்தி மற்றும் மயக்கம் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

சிறுநீர் பாதை தொற்றுநோய்
பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாத இந்த நோய் பொதுவாக எரிச்சல், வலி போன்ற பிரச்சினைகளை உறவிற்கு முன்னரும், உறவின் போதும், உறவிற்கு பிறகும் ஏற்படுத்தும். இந்த குறைபாடு சமீபத்தில் பலமுறை உறவில் ஈடுபட்டவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் அறிகுறிகள் தெரிந்தவுடனேயே மருத்துவரை அணுகுவது நல்லதாகும்.



Click it and Unblock the Notifications