For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொழுநோய் யாருக்கெல்லாம் வரும்... என்ன அறிகுறி? முழுசா தெரிஞ்சிக்க இத படிங்க

தொழுநோயைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் இந்த கட்டுரையில் மிக விளக்கமாகத் தெரிந்து கொள்ளுங்கள். அது பற்றிய மிக விளக்கமான தொகுப்பு தான் இது.

|

தொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். இந்த நோய் கடுமையான தோல் அழற்சியை ஏற்படுத்துகிறது. மற்றும் கை, கால் சருமத்தின் இதர பகுதிகளில் நரம்புகளில் சேதம் உண்டாக்குகிறது. தொழுநோய் பற்றி பயத்தை உண்டாக்கும் பல வித கதைகள் நமது வரலாற்றில் உண்டு. நீண்ட நெடுங்காலமாக இந்த பாதிப்பு பல்வேறு எதிர்மறை களங்கத்துடன் மனித இனத்தை பயமுறுத்தி வருகிறது.

Leprosy

தொழு நோயின் தாக்கம் மற்றும் அதன் விளைவுகள் ஒவ்வொரு கண்டத்தில் உள்ள மனிதர்களையும் பாதித்து வருகிறது. சீனா, எகிப்து மற்றும் இந்தியாவின் பண்டைய நாகரீகங்களில் தொழுநோய் என்பது மருந்து இல்லாத, உரு சிதைக்கும், தொற்று நோயாக இருந்து வந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொழுநோய்

தொழுநோய்

இருப்பினும் தொழு நோய் என்பது பயப்படும் அளவிற்கு தொற்று நோயல்ல. தொழு நோய்க்கு சிகிச்சை எடுக்காமல் இருக்கும் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருத்தல் மற்றும் அவரின் மூக்கு மற்றும் வாயில் இருந்து வடியும் நீர் ஒருவர் சருமத்தில் அடிக்கடி படும்போது தொழு நோய் பரவும் வாய்ப்புள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை இந்த நோய் அதிகம் பாதிக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் உள்ள தொழு நோயாளிகள் எண்ணிக்கை 1,80,000 ஆகும். அதிலும் ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 100 பேர் தொழுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் அதிகமாக தெற்கு பகுதியில், கலிபோர்னியா, ஹவேலி, மற்றும் இதர மாகாணங்களில் அதிக மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

MOST READ: சாப்பிட்டதும் வயிறு கம்முனு கெடக்கா? இத செஞ்சு பாருங்க சரியாயிடும்...

உண்டாகக் காரணம்

உண்டாகக் காரணம்

மெதுவாக வளரும் பக்டீரியா வகையைச் சேர்ந்த மைகோபக்டீரியம் லேப்ரே என்ற பாக்டீரியா தொழுநோய்க்கு காரணமாக உள்ளது. 1873 இல் M. லேப்ராவை கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயரால், தொழுநோய் ஹான்ஸென் நோய் என்றும் அறியப்படுகிறது.

அறிகுறிகள் என்ன?

அறிகுறிகள் என்ன?

தொழுநோய் முதன்மையாக சருமத்தை பாதிக்கிறது. மூளைக்கு வெளிப்புறம் உள்ள நரம்புகளையும், முதுகுத்தண்டையும் பாதிக்கிறது. தொழுநோய் கைகளையும் பாதிக்கலாம் மற்றும் மூக்கின் மெல்லிய திசுக்களையும் பாதிக்கலாம்.

உருச்சிதைக்கும் சரும புண், கட்டிகள், பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆனாலும் கரையாத புடைப்பு போன்றவை தொழுநோயின் முக்கிய அறிகுறியாகும். சருமத்தில் உள்ள புண் வெளிர் நிறத்தில் காணப்படும்.

பாதிப்புகள்

பாதிப்புகள்

. கை மற்றும் கால்களில் உணர்வு இழப்பு

. தசைகள் பலவீனமாதல்

தொழுநோய் தாக்கும் பாக்டீரியாவுடன் தொடர்பு ஏற்பட்டு 3 முதல் 5 வருடம் கழித்தே நோய் தாக்கத்திற்கான அறிகுறிகள் தென்படும். சில மனிதர்களுக்கு 20 வருடத்திற்கு பின்னும் அறிகுறிகள் தென்படாது. பாக்டீரியாவுடன் தொடர்பு ஏற்பட்ட காலம் மற்றும் அறிகுறிகள் தென்படும் காலம் ஆகிய இரண்டுக்கும் இடையான காலத்தை இன்குபேஷன் அதாவது அடைகாக்கும் காலம் என்று கூறுகின்றனர். இந்த அடை காக்கும் காலம் நீடித்து இருக்கும்போது ஒரு மனிதனுக்கு எப்போது எந்த இடத்தில் தொழு நோய் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தீர்மானிக்க முடியாத நிலை மருத்துவர்களுக்கு உண்டாகிறது.

MOST READ: மீன் முள் எடுக்கப்போய் தொண்டைக்குள் ஸ்பூன் மாட்டிக் கொண்ட விபரீதம் ...

தொழுநோயின் வடிவங்கள்

தொழுநோயின் வடிவங்கள்

சருமத்தில் உண்டாகும் புண்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளைப் பொறுத்து தொழு நோய் வகை தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட வகை தொழு நோய்க்கும் அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் வேறுபடுகின்றன. தொழு நோயின் வகைகள் பற்றி இப்போது காணலாம்.

ட்யுபர்குலைடு

ட்யுபர்குலைடு

இது ஒரு மிதமான, குறைவான தீவிர நிலையைக் கொண்ட ஒரு வகை தொழுநோய். இந்த வகை தொழு நோய் பாதிக்கபட்டவர்களுக்கு ஒன்று அல்லது ஒரு சில தழும்புகள் மட்டுமே இருக்கும், அந்த தழும்புகள் வெளிர் நிறத்தில் இருக்கும். சருமத்திற்கு அடியில் உள்ள நரம்புகளில் சேதம் ஏற்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட சருமத்தில் உணர்வு அற்று மரத்துப்போன நிலை இருக்கும். மற்ற வகை தொழுநோயை விட இந்த வகை தொழுநோயில் பரவும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.

லேப்ரோமடோஸ்

லேப்ரோமடோஸ்

தொழுநோயின் தீவிர நிலையை இந்த வகை தொழு நோய் வெளிப்படுத்தும். சருமத்தில் பரவலாக கட்டிகளும் தடிப்புகளும் தோன்றும். தசைகள் வலிமை இழந்து, மரத்துப்போன நிலை உண்டாகும். மூக்கு, சிறுநீரகம் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகள் கூட பாதிக்கப்படலாம். மேலே கூறிய ட்யுபர்குலைடு தொழு நோய் வகையைக் காட்டிலும் தொற்றும் வாய்ப்பு இந்த வகை தொழுநோய்க்கு அதிகம் உண்டு.

MOST READ: டேய் எங்கலாம் ரொமான்ஸ் பண்றதுனு வெவஸ்தையே இல்லயா? நீங்களே பாருங்க மக்களே!

தொழுநோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

தொழுநோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

ஐயம் உண்டாக்கும் விதத்தில் உங்களுக்கு சருமத்தில் புண் ஏற்பட்டால், உங்கள் மருத்துவர் புண் பாதிக்கப்பட்ட சருமதின் சிறு பகுதியை எடுத்து ஆய்வக பரிசோதனைக்காக அனுப்புவார். இதனை ஸ்கின் பயோப்சி என்னும் திசுச் சோதனை என்று கூறுவர்.

ஸ்மியர் டெஸ்ட் என்னும் பரிசோதனையும் செய்யப்படும். ட்யுபர்குலைடு வகை தொழுநோயில் கிருமிகளைக் கண்டறிய முடியாது. இதற்கு மாற்றாக, லேப்ரோமடோஸ் வக்பை தொழுநோயில் ஸ்மியர் பரிசோதனை மூலமாக கிருமிகளைக் கண்டுக் கொள்ள முடியும்.

சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது?

சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது?

தொழு நோய் என்பது குணப்படுத்தக் கூடிய ஒரு நோயாகும். கடந்த 20 ஆண்டுகளில் 16 மில்லியன் மக்கள் தொழுநோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர். தொழுநோய் உள்ள நோயாளிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் இலவச சிகிச்சை வழங்குகிறது.

தொழுநோயின் வகைக்கு ஏற்ப சிகிச்சை மாறுபடுகிறது. தொற்று பாதிப்பைப் போக்க நுண்ணுயிர்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நுண்ணுயிர்கொல்லி மருந்துகள் நீண்ட கால சிகிச்சைக்கு அதாவது குறைந்தது ஆறு மாத காலம் முதல் ஒரு வருட காலம் வரை பரிந்துரைக்கப்படுகின்றன.

நரம்பு சேதங்கள்

நரம்பு சேதங்கள்

தொழு நோயின் தீவிர நிலையில் உள்ளவர்கள் நீண்ட நாட்கள் நுண்ணுயிர்கொல்லி மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம். ஆனால் நுண்ணுயிர்கொல்லி மருந்துகள் நரம்பு சேதங்களை சரி செய்வது இல்லை.

நரம்பு வலியை கட்டுப்படுத்தவும், சேதங்களை சரி செய்யவும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ப்ரெட்னிசோன் போன்ற ஸ்டீராய்டுகளும் அடக்கம். தலிடோமைடு என்னும் மருந்து உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒடுக்கும் வலிமை பெற்றது. இந்த மருந்து தொழுநோய் பாதிக்கப்பட்ட சரும கணுக்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

இந்த தலிடோமைடு மருந்து அபாயத்தை விளைவிக்கும் பிறப்புக் குறைபாடுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் கர்ப்பிணிகள் அல்லது கர்ப்பத்திற்கு தயாராகும் பெண்கள் இதனைப் பயன்படுத்தக்கூடாது,

MOST READ: பற்களுக்குள் சீழ்கட்டி இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது? என்ன செஞ்சா பல் தப்பிக்கும்?

தொழுநோய் சிக்கல்கள்

தொழுநோய் சிக்கல்கள்

தொழு நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், நிரந்தரமாக உங்கள் சருமம், நரம்புகள், கை, கால்கள், பாதம் மற்றும் கண்கள் பாதிக்கப்படக்கூடும்.

. கண்பார்வை இழப்பு

. முகம் சிதைந்துபோவது (நிரந்தர வீக்கம், கட்டிகள், புடைப்புகள் ஏற்படுவது )

. ஆண்களுக்கு இனப்பெருக்க உறுப்பில் பாதிப்பு

. சிறுநீரக செயலிழப்பு

. தசைகள் பலவீனம் காரணமாக கைகள் சூம்பிப் போவது, கால்களில் திடம் இல்லாமல் போவது

. மூக்கின் உட்பகுதியில் நிரந்தர பாதிப்பு, இதன் காரணமாக மூக்கில் இரதம் வடிதல்

. மூளைக்கு வெளிப்புறம் உள்ள நரம்புகள் சேதமடைவது, முதுகுத்தண்டு நரம்புகள் சேதம் அடைவது, கை, கால்கள், பாத நரம்புகள் சேதம் அடைவது.

நரம்புகளில் சேதம் ஏற்படுவதால், மரத்துப் போன நிலை உண்டாகும் அபாயம் ஏற்படலாம். தொழு நோய் தொடர்பான நரம்பு சேதம் உள்ளவர்களுக்கு கை, கால்கள், பாதம் போன்ற இடங்களில் வெட்டு, எரிச்சல் அல்லது காயம் ஏற்பட்டால் அதனால் உண்டாகும் வலியை அவர்களால் உணர முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Leprosy Symptoms, Treatment, Causes & Prevention

Leprosy is an infectious disease that causes severe, disfiguring skin sores and nerve damage in the arms, legs, and skin areas around the body. The disease has been around since ancient times, often surrounded by terrifying, negative stigmas and tales of leprosy patients being shunned as outcasts.
Story first published: Thursday, May 2, 2019, 11:47 [IST]
Desktop Bottom Promotion