Latest Updates
-
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க!
ஆண்களே! இந்த வயது வரை நீங்கள் தாராளமாக உடலுறவில் ஈடுபடலாம்..இதற்கு மேல்தொடர்ந்தால்தான் பிரச்சினையே..
வயது அதிகரிக்க அதிகரிக்க ஆண்களின் வெளிப்புற தோற்றம் இன்றி அவர்களின் உடலுறுப்புகளின் செயல்பாடுகளும் தளர்ந்து விடுகிறது.
வயதாவது என்பது ஆண்களுக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய கவலையாகும். ஏனெனில் வயது அதிகரிக்க அதிகரிக்க ஆண்களின் வெளிப்புற தோற்றம் இன்றி அவர்களின் உடலுறுப்புகளின் செயல்பாடுகளும் தளர்ந்து விடுகிறது. உடலுறுப்புகள் என்பதில் ஆணுறுப்பின் செயல்பாட்டையும் உள்ளடக்கியதுதான். வயது அதிகரிக்கும் போது ஆண்களின் பாலியல் ஆசைகளும், செயல்திறனும் குறைந்து கொண்டே செல்லும். அதற்கு அவர்களின் உணவுமுறை ஒரு முக்கியமான காரணமாகும்.

நம் முன்னோர்கள் 70 வயதுகளில் கூட குழந்தை பெற்றார்கள், காரணம் அவர்களின் ஆரோக்கியமான உணவுமுறை ஆனால் இந்த தலைமுறை ஆண்களில் சிலருக்கு 30 வயதுகளிலேயே ஆண்மைக்குறைவு ஏற்பட தொடங்கிவிடுகிறது. பொதுவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆண்களின் ஆணுறுப்பின் செயல்பாடுகளும், உணர்வுகளும் மாறிக்கொண்டே இருக்கும். இந்த பதிவில் ஆணுறுப்பின் மாற்றங்கள் வயதை பொறுத்து எப்படி மாறுபடுகிறது என்று பார்க்கலாம்.

வயது 18-30
உங்கள் வாழ்க்கையில் பாலியல் செயல்பாடுகள் மிகவும் அதிகமாக இருக்கும் காலகட்டம் இதுதான். இந்த வயதில் உங்கள் ஆணுறுப்பு விறைப்படைய பெண்களின் தீண்டுதல்கள் அவசியமில்லை. இந்த வயதில் ஆணுறுப்பு விரைப்படைவது என்பது கடினமான காரியமாகவே இருக்காது. தினமும் எழும்போது விறைப்படைந்த ஆணுறுப்புடனேயே எழுவார்கள். இதற்கு காரணம் அதிகமான ஹார்மோன் சுரப்பும், சீரான வளர்ச்சிதை மாற்றமும்தான். ஆனால் இந்த வயதில் இருக்கும் ஆண்களுக்கு விரைவில் விந்தணு வெளிப்படும் பிரச்சினை இருக்கும் அதனை சரியான வழியில் சரிசெய்ய வேண்டும்.

வயது 30-40
ஒருமுறை உறவில் ஈடுபட்ட பிறகு மீண்டும் உங்கள் ஆணுறுப்பு விறைப்படைவது என்பது இந்த வயதில் மிகவும் கடினமான ஒன்றாக மாறியிருக்கும். மேலும் 20 வயதுகளில் இருந்த பாலுணர்ச்சியும் இந்த காலகட்டத்தில் குறைந்துவிடும். மேலும் தன்னிச்சையாக விறைப்படைவதும் குறைந்துவிடும். ஆண்களால் இப்பொழுதும் விறைப்பை அடையமுடியும், உறவிலும் நன்றாக ஈடுபட முடியும். ஆனால் அதற்கு வெளிப்புற உந்துதலும், தூண்டுதலும் தேவைப்படும். இந்த வயதில்தான் ஆண்மைக்குறைவு ஏற்பட தொடங்கும்.

வயது 40-50
ஆண்களின் பாலியல் வாழ்க்கையில் மிகவும் சோதனைகள் நிறைந்த காலம் என்றால் இதுதான். ஆண்களின் மெனோபாஸ்க்கு இணையான காலமானஆண்ட்ரோபஸை ஆண்கள் அடையும் காலம் இதுதான். ஆண்களின் பாலியல் செயல்திறன் இங்கிருந்து மோசமடைய தொடங்கும். அதற்கு அர்த்தம் நீங்கள் விறைப்பு தன்மையை அடைய மாட்டிர்கள் என்றல்ல, ஆனால் தூண்டுதல்கள் இல்லாமல் விறைப்பை அடைவது கடினமானதாக இருக்கும். உச்சகட்ட இன்பத்தை அடைவது எப்போதாவது நடக்கும் நிகழ்வாக மாறிவிடும்.

வயது 50-60
காலை மற்றும் இரவு நேர விறைப்பு என்பது அதிசயமான நிகழ்வாக இந்த காலகட்டத்தில் மாறிவிடும். உங்களுக்கும் பாலியல் தேவை மிகவும் குறைந்திருக்கும் மேலும் ஆணுறுப்பு விறைப்படைவது கடினமானதாக இருக்கும். ஆணுறுப்பு விறைப்படைந்தாலும் விரைவிலேயே விந்தணு வெளிப்பட்டுவிடும், மேலும் விந்தணுக்களின் அளவும், தரமும் குறைந்திருக்கும்.

வயது 60 -70
இந்த வயதில் எல்லா உறுப்புகளிலும் தளர்வு ஏற்பட்டிருக்கும். ஆணுறுப்பு விறைப்படைவது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும் மேலும் விந்தணுக்கள் வெளிப்படுவதே கஷ்டம்தான். ஒருவேளை உங்கள் ஆணுறுப்பு விறைப்படைந்தாலும் அது நீடித்திருக்கும் நேரம் மிகவும் குறைவாகும். இதற்கு முக்கிய காரணம் இந்த வயதில் டெஸ்டோஸ்டிரோன்ஹார்மோனின் சுரப்பு மிகவும் குறைந்திருக்கும்.

வயது 70-80
ஆசைக்கு வயது இல்லை என்று கூறுவார்கள், அதற்கேற்றாற் போல இந்த் வயதிலும் உங்களுக்கு கொஞ்சம் பாலியல் ஆசை இருக்கலாம். ஆனால் அது ஆசையோடு நின்றுவிடும். ஏனெனில் ஆணுறுப்பு விறைப்பு என்பது அரிதான ஒன்றாக மாறிவிடும், விறைப்படைந்தாலும் பெண்ணுறுப்புக்குள் ஊடுருவ இயலாது.

80 க்கு மேல்
ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் மிகவும் குறைவாகி விட்ட இந்த காலத்தில் நீங்கள் 80 வயது வரை உயிருடன் இருப்பதே மிகவும் பெரிய விஷயமாகும். இந்த வயதில் உங்களுக்கு மனதளவில் பாலியல் ஆசைகள் எழுந்தாலும் ஆணுறுப்பு விறைப்பு என்பது முற்றிலும் தடைப்பட்டிருக்கும். உங்கள் பாலியல் வாழ்க்கை முடியும் பருவம் என்று கூட இதனை சொல்லலாம்.

ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி?
குறிப்பிட்ட வயது வரை உங்கள் ஆணுறுப்பின் ஆரோக்கியத்தையும், விறைப்புத் தன்மையையும் பாதுகாக்க ஆரோக்கியமான உணவுகளும், உடற்பயிற்சியும் அவசியம். உங்கள் ஆணுறுப்பின் தசைகளை வலிமையாக வைத்திருப்பதே உங்களின் பாலியல் செயல்திறனை அதிகரிக்கும் ஒற்றே வழியாகும். உணவுகளுடன் சேர்த்து இடுப்பு தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியதும் அவசியமாகும்.



Click it and Unblock the Notifications