For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    உங்களின் இந்த செயல் ஆணுறுப்பை சிறிதாக்குவதோடு ஆணுறுப்பில் முறிவையும் ஏற்படுத்தும் தெரியுமா?

    |

    உடலுறவில் ஈடுபடுவது என்பது இருபாலினத்தாருக்கும் பொதுவான ஒரு உணர்வு ஆகும். உறவில் ஈடுபடுவது ஆண், பெண் இருவருக்குமே அளப்பரிய நன்மைகளை வழங்கக்கூடியதாகும். பொதுவாக அதிகமாக உடலுறவில் ஈடுபடுவது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதில் துளியும் உண்மையல்ல.

    does stops having intercourse will affect mens penile health

    உடலுறவில் ஈடுபடுவது பொதுவாக ஆண்களின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். ஆனால் ஆண்கள் உடலில் இருந்து விந்தணுக்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியேற வேண்டும், இல்லையெனில் அது அவர்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக விந்தணுக்களை வெளியேற்றுவதை நிறுத்துவது ஆண்களின் பிறப்புறுப்பில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்தினால் அதனால் ஆணுறுப்பில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

    பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
    விறைப்பு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது

    விறைப்பு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது

    ஆணுறுப்பை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் நீங்கள் அதனை இழக்க நேரிடும். ஆய்வுகளின் படி உறவில் தொடர்ந்து ஈடுபடும் ஆண்களுக்கு, உறவில் அதிகம் ஈடுபடாத ஆண்களை விட விறைப்பு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆணுறுப்பானது உடலில் இருக்கும் மற்ற தசைகளை போன்ற ஒரு உறுப்புதான். எனவே மற்ற தசைகளை போல இதற்கும் உடற்பயிற்சி அவசியம். நீங்கள் உடலுறவில் ஈடுபட்டாலும் சரி, சுயஇன்பம் கண்டாலும் சரி ஆணுறுப்பை தொடர்ந்து உபயோகப்படுத்த வேண்டும்.

    பாலியல் ஆசைகள் குறையும்

    பாலியல் ஆசைகள் குறையும்

    ஆண்கள் உறவில் ஈடுபடுவதை நிறுத்தும்போது அது அவர்களுக்கு உறவில் ஈடுபடும் ஆசையை குறைக்கும். உங்கள் லிபிடோ குறைவாக இருந்தால் கவலை படாதீர்கள், இது உறவில் ஈடுபடாததால் ஏற்படும் பக்கவிளைவு ஆகும். நீங்கள் மீண்டும் உறவில் ஈடுபட தொடங்கினால் மீண்டும் நீங்கள் பழைய நிலைக்கு வந்துவிடும்.

    புரோஸ்ட்ரேட் புற்றுநோய்

    புரோஸ்ட்ரேட் புற்றுநோய்

    எந்த அளவிற்கு உங்கள் ஆணுறுப்பில் இருந்து விந்தணுக்கள் வெளியேற்றப்படுகிறதோ அந்த அளவிற்கு புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவாகும். புரோஸ்ட்ரேட் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் போது அது ஆணுறுப்பின் நீளத்தை 1.6 இன்ச் குறைக்கும். வழக்கமாக விந்தணுக்கள் வெளியேற்றுவது புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 20 சதவீதம் குறைக்கிறது.

    MOST READ: இந்த குணங்கள் இருக்கும் ஆண்களை கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்ளலாம் என்று வேதங்கள் கூறுகிறது

    இரவு நேரத்தில் விந்தணுக்கள் வெளியேறும்

    இரவு நேரத்தில் விந்தணுக்கள் வெளியேறும்

    இது நல்லதா அல்லது கெட்டதா என்பது தீர்மானிக்க முடியாத ஒன்று. ஏனெனில் இது உண்மையில் ஆணுறுப்பிற்கான உடற்பயிற்சியாக அமைவதில்லை. உறவில் ஈடுபடாமல் இருப்பதால் மட்டும் ஆண்மைக்குறைவு ஏற்படுவதில்லை. அதேபோல உறவில் ஈடுபடாமல் இருப்பதால் ஆணுறுப்பின் நீளம் குறையாது. ஆனால் உறவில் ஈடுபடாமல் இருக்கும்போது அது இரவு நேரத்தில் விந்தணுக்கள் தானாக வெளியேற காரணமாக அமையும்.

    இரத்த ஓட்டம் குறையும்

    இரத்த ஓட்டம் குறையும்

    உறவில் ஈடுப்படாமல் இருக்கும் போது அது ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சினை மற்றும் இரவு நேரத்தில் விந்தணுக்கள் வெளிப்படும் பிரச்சினை இது மட்டுமின்றி உங்கள் ஆணுறுப்பிற்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவை குறைக்கும். இதனால் நாளடைவில் ஆண்களின் ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆண்மைக்குறைவு உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் ஆரோக்கியமாக இருக்காது.

    உறவில் ஈடுபட முடியாது

    உறவில் ஈடுபட முடியாது

    உறவில் தொடர்ந்து ஈடுபடாத ஆண்கள் மற்றும் உயிரணுக்களை வழக்கமாக வெளியேற்றாத ஆண்களுக்கும் டெஸ்டிஸ்ட்ரோனின் அளவு குறைவதால் ஆண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் இது உங்கள் ஆரோக்கியத்திலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அதன்பின் ஆண்களே விரும்பி உறவில் ஈடுபட நினைத்தாலும் உங்களால் ஈடுபட முடியாது.

    MOST READ: ஆண் குழந்தை பலசாலியா இருக்க நீங்க வைக்க வேண்டிய 50 ஹனுமான் பெயர்கள் இதோ உங்களுக்காக...

    தூங்கும்போது அதிக விறைப்பு

    தூங்கும்போது அதிக விறைப்பு

    நீங்கள் ஆணுறுப்பை உபயோகிக்காவிட்டால் அதனை இழக்க நேரிடும் என்பது உண்மைதான்.பாலியல் மருத்துவர்களின் ஆணுறுப்பின் ஆரோக்கியம் என்பது ஆணுறுப்பிற்கு வழங்கப்படும் இரத்தம் மற்றும் ஆக்சிஜனை பொறுத்து அமைகிறது. உறவில் ஈடுபடும்போது உங்கள் ஆணுறுப்பு விறைப்பு ஏற்படும் சூழ்நிலை இல்லாததால் அது தானாக இரவு நேரங்களில் விறைப்படைந்து விடும். நீண்ட நேர இரவு விறைப்பில் உங்கள் ஆணுறுப்பில் முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தொடர்ச்சியாக உறவில் ஈடுபட இயலாவிட்டாலும் முடிந்தளவு அடிக்கடி விந்தணுக்களை வெளியேற்ற முயலுங்கள்.

    பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

    English summary

    Does Stops Having Intercourse Will Affect Men's Penile Health?

    Not having intercourse for a long time will affect men's penile health badly.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more