For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கையை சுத்தமாக கழுவினாலே இந்த ஆபத்தான நோய்கள் உங்களை தாக்காமல் தடுக்கலாம் தெரியுமா?

சுகாதார செயல்கள் என்னும் போது அதில் முதலிடம் வகிப்பது கைகளை சுத்தம் செய்வதுதான். நாமெல்லாம் பேருக்குத்தான் கைகளை சுத்தம் செய்கிறோம்.

|

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது?. நமது ஆரோக்கியம் நமது சுற்றுசூழலை மட்டும் சார்ந்ததில்லை நமது கையிலும் அதன் பெரும்பான்மையான பங்கு உள்ளது. நமது சில சுகாதார செயல்கள் நம்மை பெரும்பான்மையான ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும்.

Diseases You Can Prevent Just by Washing Your Hands

சுகாதார செயல்கள் என்னும் போது அதில் முதலிடம் வகிப்பது கைகளை சுத்தம் செய்வதுதான். நாமெல்லாம் பேருக்குத்தான் கைகளை சுத்தம் செய்கிறோம். ஏனெனில் உலகில் 5 சதவீதத்தினர் மட்டுமே தங்கள் கைகளை சுத்தமாக பராமரிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. நமது கைகளை சுத்தமாக வைத்திருந்தாலே நாம் பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். இந்த பதிவில் கைகளை சுத்தமாக வைத்திருப்பதால் என்னென்ன நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோரோ வைரஸ்

நோரோ வைரஸ்

ஒரே ஒரு நோரோ வைரஸ் உங்களை நோயில் விழ வைக்கக்கூடும். காய்ச்சலை உண்டாக்கும் ஃப்ளு வைரஸ் 50 முதல் 100 வரை தேவைப்படும் உங்களை நோயில் விழவைக்க. பழங்கால கை கழுவும் முறையான ஒவ்வொரு விரலாக சுத்தம் செய்யும் முறை உங்களை இதிலிருந்து பாதுகாக்கும். இதனால் வயிறு மற்றும் இரைப்பை கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

ஃப்ளு வைரஸ்

ஃப்ளு வைரஸ்

காய்ச்சல் மிகவும் மோசமான நோயாகும். இது சிறியவர் முதல் முதியவர் வரை அனைவரையும் தாக்கும் ஒரு நோயாகும். காய்ச்சலை உண்டாக்கும் ஃப்ளு வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழையாமல் தடுக்கும் ஒரு முக்கிய செயல் கையை நன்றாக கழுவுவதாகும். ஒவ்வொரு கிருமியும் உடலுக்குள் நுழைந்தாலும் அது செயல்பட தொடங்க சில காலம் எடுத்துக்கொள்ளும். அதற்குள் அதனை வெளியே தள்ளிவிடுவது உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும்.

கண் கோளாறுகள்

கண் கோளாறுகள்

கண்களின் நிறம் மாறுவது, கண்களை சுற்றி இருக்கும் பகுதியில் அரிப்பு ஏற்படுவது போன்றவை ஏற்பட காரணம் கண்களுக்குள் கைகள் மூலம் ஏற்படும் பாக்டீரிய தொற்றுதான். காலையில் எழும்போதே கண்கள் எரிவதை பிங்க் ஐ என்பார்கள். இது பாக்டீரியா மூலம் ஏற்படும் தொற்றாகும். கைகளை அனைத்து இடங்களிலும் வைத்துவிட்டு அதே கைகளை கண்களில் வைக்கும் போது அது பிங்க் ஐ ஏற்பட வழிவகுக்கிறது. இந்த பிரச்சினை பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி அசுத்தமான கையால் குழந்தைகளுக்கு தொண்டை பிரச்சினைகள், நுரையீரல் கோளாறுகள், வாயுத்தொல்லை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க அவர்களை கைகளை அடிக்கடி சுத்தம் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

MOST READ: இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் ஆன்மா தனித்துவம் வாய்ந்த அரிதான ஆன்மாவாம் தெரியுமா?

சால்மேனோலோசிஸ்

சால்மேனோலோசிஸ்

நீங்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய காரணம் நீங்கள் நினைப்பதை விட அதிக அசுத்தமான பொருட்களை உங்கள் கைகளால் தொடுகிறீர்கள். இதன் மூலமாகத்தான் சால்மேனோலோசிஸ் அதிகம் பரவுகிறது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலை வாழும் பாக்டீரியா ஆகும். நன்றாக சமைக்கப்படாத இறைச்சி, நன்கு கழுவப்படாத பழங்கள் போன்றவற்றில் இவை அதிகம் இருக்கும். இறைச்சிகளை தொட்டுவிட்டு நீங்கள் உங்கள் கையை நன்றாக சுத்தம் செய்யாதபோது இது உங்கள் உடலுக்குள் எளிதாக சென்றுவிடும். இது தொடுதல் மூலமாகவும் பரவக்கூடும்.

மோனோநியூக்ளியோசிஸ்

மோனோநியூக்ளியோசிஸ்

இது முத்தம் கொடுப்பதன் மூலம் பரவும் நோயாகும். ஆனால் இது முத்தம் மூலம் மட்டும் பரவுவதில்லை, சுத்தமில்லாத கைகள் மூலமும் பரவக்கூடும். உமிழ்நீர்தான் இது பரவ முக்கிய காரணமாகும், எனவே தும்மல், இருமலின் போது வெளிப்படும் உமிழ்நீர் மூலமும் இது பரவும். எச்சில் பானங்களை குடிப்பது, ஒரே பாத்திரத்தை உபயோகிப்பது மூலமும் பரவும். கைகளை நன்றாக கழுவவதன் மூலம் இதனை தவிர்க்கலாம்.

ஸ்டேப்

ஸ்டேப்

இது பொதுவாக சருமம் மற்றும் மூக்கில் வசிக்கும் பாக்டீரியா ஆகும். இது மிகவும் ஆபத்தான பாக்டீரியா ஆகும். இது உடலுக்குள் தீவிரமடைந்தால் இது இரத்தம், இதயம்,எலும்புகள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும். சருமத்தில் சிவப்பு புள்ளிகள் போல இது காட்சியளிக்கும். மூக்கை தொட்டபின் கண்டிப்பாக கையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

MOST READ: உங்க ஆயுள்காலம் எவ்வளவு என்பதை உங்கள் நெற்றியில் இருக்கும் கோடுகளின் எண்ணைக்கையே சொல்லும் தெரியுமா?

ஹெப்பாடிட்டீஸ் ஏ

ஹெப்பாடிட்டீஸ் ஏ

ஹெப்பாடிட்டீஸ் ஏ அதன் மற்ற பிரிவுகளான பி மற்றும் சி போன்ற கல்லீரலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால் இதுவும் உங்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மஞ்சள்காமாலை, காய்ச்சல், வாயுக்கோளாறு, சோர்வு போன்ற பிரச்சினைகளை இது ஏற்படுத்தக்கூடும். பலவீனமானவர்களுக்கு இதனால் கல்லீரல் செயலிழப்பு கூட ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diseases You Can Prevent Just by Washing Your Hands

You can protect yourself from many diseases by simply washing your hands properly.
Story first published: Thursday, May 9, 2019, 13:48 [IST]
Desktop Bottom Promotion