Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கசப்பு சுவையுடைய இந்த பொருட்கள் உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும் தெரியுமா?
கசப்பு சுவை உணவுகள் பெரும்பாலானோருக்கு பிடிக்காது. ஆனால் கசப்பு சுவை உணவுகள் வழங்கும் ஆரோக்கியத்தை மற்ற சுவை உணவுகள் வழங்குவதில்லை என்பதுதான் உண்மை.
அனைவருக்குமே பிடித்த உணவுகள் என்றால் அது சுவையான உணவுகளாகத்தான் இருக்கும். ஆனால் சுவையான உணவுகள் மட்டுமே உங்களுக்கு ஆரோக்கியத்தை வழங்கிவிடாது. அறுசுவை உணவுகள் இருந்தாலும் அதில் பலரும் விரும்புவது இனிப்பு, காரம் போன்ற சுவைகள்தான்.

கசப்பு சுவை உணவுகள் பெரும்பாலானோருக்கு பிடிக்காது. ஆனால் கசப்பு சுவை உணவுகள் வழங்கும் ஆரோக்கியத்தை மற்ற சுவை உணவுகள் வழங்குவதில்லை என்பதுதான் உண்மை. கசப்பு சுவை உணவுகள் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பாகற்காய்தான். ஆனால் பாகற்காயை போலவே கசப்பான பல உணவுகள் உங்களின் ஆயுளை அதிகரிக்கும். இந்த பதிவில் உங்கள் ஆயுளை அதிகரிக்கும் கசப்பான உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

காலே
கீரைகளிலேயே மிகவும் ஆரோக்கியமான கீரை என்றால் அது காலேதான். இது முட்டைகோஸ் குடும்பத்தை சேர்ந்த காய்கறி ஆகும் மேலும் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருளாகும். குர்செடின் மற்றும் கேம்ப்ஃபெரோல் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால் இது புற்றுநோயை தடுப்பதுடன் வயதாவதையும் தள்ளிப்போடுகிறது. இது உங்கள் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்றுவதுடன் உடலில் இருக்கும் புற்றுநோய் கட்டிகள் வளர்வதையும் தடுக்கும்.

பாகற்காய்
கசப்பான பொருள் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவு வருவது பாகற்காய்தான். இதனை பலரும் வெறுக்க காரணம் இதன் அதிக கசப்பு சுவைதான். உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பினால் அதற்கு சிறந்த தேர்வு பாகற்காய்தான். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது. இது உங்கள் செல்களை சேதமடைவதை தடுப்பதோடு, சரும ஆரோக்கியம் மற்றும் கண் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. கலோரிகள் குறைவாக இருப்பதால் இது எடை குறைப்பிற்கும், இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் பயன்படுகிறது.

டேன்டேலியன் கீரைகள்
டேன்டேலியன் கீரைகள் உண்மையில் என்னவென்று உங்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது?. டேன்டேலியன் கீரைகள் அதன் மருத்துவ குணங்களுக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உங்கள் காயத்தை வேகமாக குணப்படுத்துவதுடன் உங்க இரத்தத்தை சுத்தப்படுத்தவும் செய்கிறது. இது செரிமானத்தை ஊக்குவிப்பதுடன் பித்தப்பை கோளாறுகளையும் தடுக்கிறது.

கோகோ
கோகோ பீன்ஸ்களில் இருந்து தயாரிக்கப்படும் கோகோ அதிலிருக்கும் கொழுப்புக்களை நீக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. மிகவும் கசப்பாக இருக்கும் இதில் துளியும் இனிப்பு சுவையிருக்காது. பாலிபீனால் அதிகமிருக்கும் இது வீக்கத்தை குறைக்கும் பண்பு கொண்டது. இது நல்ல கொழுப்பை அதிகரிப்பதுடன் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

ரெட் ஒயின்
அதிக கசப்பு சுவை கொண்ட மது வகையை சேர்ந்த பாலிபீனால் அதிகமிருக்கும் ரெட் ஒயின் உங்கள் இதயத்தை பாதுகாக்கும். தினமும் ஒரு கிளாஸ் ரெட் ஒயினை குடிப்பது உங்களின் ஆயுளை அதிகரிப்பதுடன் உங்கள் வயிற்றில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஆனால் இதனை குறைந்த அளவில் குடிப்பது மட்டுமே சிறந்தது.

க்ரீன் டீ
நீங்கள் உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பினால் க்ரீன் டீ குடிக்க வேண்டியது அவசியமாகும். இந்தியா மற்றும் சீனாவில் பல நூற்றாண்டுகளாக க்ரீன் டீ குடிக்கப்பட்டு வருகிறது. இனத்தில் இருக்கும் பாலிபீனால்கள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதுடன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் குறைக்கிறது. தினமும் இரண்டு கப் க்ரீன் டீ குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.



Click it and Unblock the Notifications