For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படுக்கையில் இந்த 8 விஷயங்களையும் செய்யவே கூடாதாம்! மீறினால் இந்த விளைவுகள் நிச்சயம்..!

|

நாம் செய்ய கூடிய செயல்கள் நம்மை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது. செய்கின்ற செயல்கள் நமது உடல் உறுப்புகளை முழுவதுமாக பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. முக்கியமாக நமது அன்றாட செயல்கள், பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் ஆகியவற்றை கூறலாம். காலையில் எழுந்து கொள்ளும் முறை முதல் படுக்கும் முறை வரை நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.

படுக்கையில் இந்த 8 விஷயங்களையும் செய்யவே கூடாதாம்! மீறினால் இந்த விளைவுகள் நிச்சயம்!

உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை இதன் தாக்கம் இருக்க கூடும். முக்கியமாக படுக்கையில் நாம் செய்கின்ற சில விஷயங்கள் நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இது எந்த வகையில் நமக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதை பற்றி இனி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தட்பவெப்பம்

தட்பவெப்பம்

நமது உடல் தட்பவெப்பம் சீராக இல்லையென்றால் உடல் நலத்திற்கு மிக பெரிய அளவில் கேடை ஏற்படுத்தி விடும். அதுவும் தூங்கும் போது சரியான முறையில் தூங்கவில்லையெனில் அதனால் சரும பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

அவை தூக்கத்தின் தன்மையை கெடுக்க கூடும். உடலில் அதிக தட்பவெப்பம் கூடினால் அதிக அளவில் வியர்க்க ஆரம்பிக்கும். இதனால் உங்களது உடலில் அதிக அளவில் கிருமிகளின் தாக்கம் உற்பத்தியாகும்.

மெத்தை விரிப்புகள்

மெத்தை விரிப்புகள்

அடிக்கடி உங்களது போர்வை, மெத்தை விரிப்புகளை மாற்றி இருக்க வேண்டும். இல்லையெனில் இதனால் பாதிப்புகள் ஏற்படும்.

பாக்டீரியாக்கள் போன்ற நுண் கிருமிகள் இவற்றில் அதிக அளவில் இருக்கும். ஆதலால், இவை சருமத்தில் பாதிப்பை உண்டாக்கும்.

நீண்ட முடியா?

நீண்ட முடியா?

பலர் முடியை அப்படியே விரித்தபடியே தூங்கி விடுவர். இது முடிக்கும் நல்லது இல்லை, அதே போன்று சருமத்திற்கும் நல்லது கிடையாது.

எனவே, தூங்கும் போது முடியை கட்டி விட்டு தூங்கினால் எந்த வித பாதிப்புகளும் முடிக்கு உண்டாகாது. அதே போன்று முடியின் வேர்களும் பாதிப்பை சந்திக்காது.

MOST READ: 114 வயது வரை வாழ்ந்ததற்கான இரகசியத்தை கூறி, அதிர வைத்த மனிதர்! என்னனு நீங்களே பாருங்க..

தூங்கும் முறை

தூங்கும் முறை

பொதுவாக தூங்கும் போது அன்னார்ந்தோ, அல்லது குப்பறை அடித்தோ தூங்க கூடாது. இடது பக்கம் படுத்து உறங்குவது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மற்ற திசைகளில் தூங்கும் முறை உடலுக்கு நல்லதல்ல. இவை முக அமைப்பையும் பாதிக்க செய்யும்.

குடிக்கும் பழக்கம்

குடிக்கும் பழக்கம்

தூங்குவதற்கு முன்னர் ஒரு சிப் மதுவை அருந்தி விட்டு சிலர் தூங்குவார்கள். இது போன்ற பழக்கங்கள் நல்ல தூக்கத்தை உண்டாக்கும் என நம்பப்படுகிறது.

ஆனால், அது அப்படி கிடையாது. மதுவை அருந்தி விட்டு உறங்கினால் அவை உங்களது சருமத்திற்கு தான் பாதிப்புகளை ஏற்படுத்தும். கூடவே தூக்கத்தையும் கெடுத்து விடும்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

போதுமான அளவு தூக்கம் இல்லாமல் இருப்போருக்கு பலவித பாதிப்புகள் உடலில் உண்டாகும். இவை நமது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் முக அழகையும் கெடுக்கும். ஆதலால் 7 மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியமானது.

உணவு

உணவு

பலருக்கு சாப்பிட்ட உடன் தூங்கும் பழக்கம் உள்ளது. பொதுவாக சாப்பிட்டவுடன் தூங்கும் பழக்கம் இருந்தால் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். அதன் பின் ஒவ்வொரு பாதிப்புகளாக நமக்கு ஏற்படும். எனவே, சாப்பிட்ட உடனே தூங்கும் பழக்கத்தை தவிர்த்து விடுங்கள்.

MOST READ: மீன், சிக்கன், இறைச்சி- இவற்றில் எது ஆரோக்கியமானது? எதை சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படாது

முகப்பூச்சுகள்

முகப்பூச்சுகள்

தூங்கும் போது முகத்தில் முகப்பூச்சுகளை பூசி கொண்டு தூங்குவதை தவிர்த்து விடுங்கள். இது முகத்தில் உள்ள செல்களை முழுவதுமாக பாதித்து விடும். எனவே, முகத்தில் கண்ட கிரீமையும், பவடரையும் பூசி கொள்ளாமல் இருப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bedtime Habits That Are Bad For Skin

Here we listed some of the bedtime habits that are bad for your skin.
Desktop Bottom Promotion