For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவை மீண்டும் சூடுபண்ணி சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் புற்றுநோய் வரும்...!

நீங்கள் சாப்பிடும் சில மீதமான உணவுகள் உங்களின் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

|

மீதமான உணவுகளை சாப்பிடுவது என்பது நமது சமூகத்தில் மிகவும் வழக்கமான ஒன்றாகும். இது பழங்காலம் முதலே நமது சமூகத்தில் இருக்கும் ஒரு வழக்கம்தான். நம் முன்னோர்கள் காலத்தில் நீண்ட காலத்திற்கு தேவையான உணவுகளை சமைத்து வைத்துக்கொள்வதை அவர்கள் வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாக வைத்திருந்தனர். இப்படி மீதமான உணவுகளை சாப்பிடுவது பெரும்பாலும் நம் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது.

9 leftovers that can make you sick

ஆனால் நீங்கள் சாப்பிடும் சில மீதமான உணவுகள் உங்களின் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த மீதமான உணவுகள் நஞ்சாக மாறி உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது. மீதமான எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை

முட்டை

முட்டை எப்போதும் சால்மோனெல்லாவைக் கொண்டிருக்கிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். பொதுவாக முட்டை மிதமான வெப்பத்திலேயே சமைக்க படுகிறது. இதனால் அதிலுள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்படுவதில்லை. சமைத்த முட்டையை அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருக்கும் போது அதில் உள்ள பாக்டீரியாக்கள் பன்மடங்கு பெருகிவிடும். இந்த நிலையில் உள்ள முட்டையை சாப்பிடுவது உங்களுக்கு பல வயிறு தொடர்பான பிரச்சினைகளை உண்டாக்கும்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரிக் ஆக்சைடுகள் உங்களுக்கு வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். ஆனால் இதே பொருள் வெப்பத்தால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். நைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை சமைத்து அதன்பின்னர் சரியாக குளிர வைக்கவேண்டும். அவ்வாறு குளிர்விக்கப்படாத நைட்ரேட் உணவுகள் மீண்டும் சூடுபடுத்தும் போது நைட்ரேட்டுகள், நைட்ரைட்டுகளாக மாறிவிடும் அதன்பின்னர் நைட்ரோசமைனாக மாறிவிடும். இவை கார்சினோஜெனிக் பொருட்கள் ஆகும். இந்த பொருள் உள்ள உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு சிலவகை புற்றுநோய்களை உண்டாக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

அனைவருக்கும் பிடித்த இந்த உணவு முட்டையை விட அதிகளவு வெப்பத்தில் சமைக்கப்படுகிறது. அவை அறைவெப்பநிலையில் நீண்ட நேரம் வைக்கப்படும்போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறு செய்யும்போது, க்ளோஸ்டிரீடியம் போட்லினின் வளர்ச்சியை, பௌலலிஸத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை வளர்க்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உங்கள் க்ளெசமிக் அமைப்பின் மீது பாதிப்பை உண்டாக்கும்.

கீரை

கீரை

பீட்ரூட்டை போலவே கீரையும் நைட்ரேட்டுகள் அதிகமுள்ள உணவுப்பொருளாகும். நைட்ரேட்டுகள், கார்சினோஜெனிக்கை உருவாக்காமல் இருக்க வேண்டுமென்றால் முடிந்தளவு கீரையை பச்சையாக சாப்பிட முயற்சி செய்யுங்கள். மேலும் நைட்ரேட் உணவுகளை சூடுபடுத்தி நைட்ரைட் உணவுகளாக மாற்றி ஆறு மாதத்திற்கு குறைவான குழந்தைகளுக்கு ஒருபோதும் கொடுக்கக்கூடாது. கீரைகள் சேர்க்கப்பட்ட உணவுகளை கூட சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது.

MOST READ: கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கூறிய மரணம் பற்றிய மூன்று ரகசியங்கள் இதுதான்...!

தாய்ப்பால்

தாய்ப்பால்

குழந்தைகளுக்கு கொடுக்கும் ஆரோக்கியமான இயற்கை உணவுகளில் மிகவும் முக்கியமானது தாய்ப்பாலாகும், ஆனால் இதனை ஒருபோதும் சூடுபடுத்தக்கூடாது. தாய்ப்பால் குடிக்கும் போது அதில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான பாக்டீரியாக்கள் இருக்கிறது. இதை சூடுபடுத்தும் போது அதில் உள்ள ஆரோக்கியமான நுண்ணுயிர்களும், பாக்டீரியாக்களும் அழிக்கப்படுகிறது. இது குழந்தைகளின் செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அரிசி

அரிசி

1970ல் சீன உணவங்களில் மீதமான சாதத்தை சூடுபடுத்தி பரிமாறியதால் பல மக்கள் பாதிக்கப்பட்டனர். அதற்கு காரணம் அறை வெப்பநிலையில் சாப்பாட்டை வைக்கும்போது அதில் பேசிலஸ் செரெஸ் என்னும் பாக்டீரியா அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பொதுவாக 140 F மேல் இருக்கும் உணவையும், 40 F கீழ் இருக்கும் உணவையும் இரண்டு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லையெனில் அதனால் பல ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படலாம்.

சிக்கன்

சிக்கன்

முட்டையை போலவே சிக்கனிலும் சால்மோனெல்லா குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. மீதமான சிக்கனை சாப்பிடுவது உங்கள் உடலில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் அதற்கு காரணம் அதில் அதிகரிக்கும் பாக்டீரியாக்கள்தான். சிக்கனை மீண்டும் சூடுபடுத்தும் போது அதனை 165 டிகிரி அளவிற்கு வெப்பப்படுத்துவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். ஒருமுறைக்கு மேல் சிக்கனை சூடுபடுத்தும்போது அதில் உள்ள கெட்ட கொழுப்புகள் மாரடைப்பை கூட உண்டாக்கும்.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள் ஆரோக்கியமானவை அல்ல, அதனை தவிர்ப்பதற்கு இது மேலும் ஒரு காரணமாகும். உணவுகள் எண்ணெயில் வறுக்கப்படும் போது அவை உணவின் ஊட்டச்சத்துக்களை மட்டும் குறைப்பதில்லை அவற்றின் பண்புகளையும் மாற்றுகிறது. இந்த உணவுகள் மீண்டும் வறுக்கப்படும்போது அதனால் ஏற்படும் புகை உணவில் மீது நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது, இதனால் ஏற்படும் சேர்மங்கள் வயிற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும்.

MOST READ: சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடலாமா? என்ன சாப்பிடலாம்?

கடல் உணவுகள்

கடல் உணவுகள்

மீனை அப்போழுதே சமைத்து சாப்பிடுவது என்பது மிகவும் ஆரோக்கியமானதாகும், ஆனால் சமைக்கப்பட்ட மீனை மீண்டும் சமைத்து சாப்பிடுவதை போன்ற மோசமான உணவு வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. 40 முதல் 140 டிகிரிக்கு கீழே வைக்கப்பட்டிருக்கும் கடல் உணவுகளில் பாக்டீரியாக்கள் அதிகளவில் பரவும். அதுமட்டுமின்றி எந்த வெப்பநிலையில் இருந்தாலும் மீண்டும் கடல் உணவை சூடுபண்ணி சாப்பிடுவது என்பது ஒருபோதும் ஆரோக்கியமான தேர்வாக இருக்கமுடியாது. இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health health food
English summary

9 leftover foods that can make you sick

Think twice before eat these leftover foods because these kind of foods will make you sick.
Desktop Bottom Promotion