For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் ஏன் ஆண்களை விட எடை அதிகமாக இருக்கிறார்கள்

எடை அதிகரித்தல் என்பது இன்றயை காலகட்டத்தில் ஆண், பெண் இருவருக்குமே இருக்கும் ஒரு பிரச்சினை ஆகும். ஆனால் ஆண்களை விட பெண்கள் விரைவில் எடை அதிகரிப்பிற்கு ஆளாகின்றனர். அதற்கான காரணத்தை இங்கே பார்க்கலாம்.

|

எடை அதிகரித்தல் என்பது இன்றயை காலகட்டத்தில் ஆண், பெண் இருவருக்குமே இருக்கும் ஒரு பிரச்சினை ஆகும். ஆனால் ஆண்கள் இதில் ஒருவகையில் அதிஷ்டசாலிகள், ஏனெனில் ஆண்களை விட பெண்களின் எடை மிக வேகமாக அதிகரிக்கும். புள்ளிவிவரங்களின்படி ஆண்களை விட பெண்களுக்கு எடை அதிகரிக்கும் வேகம் 37 சதவீதம் அதிகமாக உள்ளது.

Reasons behind why women gain weight faster than men?

இதற்கு காரணம் ஆண், பெண்ணின் உடலமைப்பு மற்றும் அவர்களுக்கிடையே உள்ள ஹார்மோன் வேறுபாடுகள். அதுமட்டுமின்றி வேறுசில காரணங்களும் உள்ளது. பெண்கள் ஏன் ஆண்களை விட வேகமாக எடை கூறுகிறார்கள் என்பதையும் அதை தவிர்க்கும் முறைகளையும் இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லெப்டின்

லெப்டின்

இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமே லெப்டின் என்றழைக்கப்படும் இந்த ஹார்மோன்தான். நம்மில் பலரும் இந்த வார்த்தையை கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆண், பெண் இருவரின் உடலிலும் எடை குறைப்பை கட்டுப்படுத்துவது இந்த லெப்டின் ஹார்மோன்தான். இது கொழுப்பு திசுக்களால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோனாகும். லெப்டின்தான் கொழுப்பை எரித்து வளர்சிதை மாற்றத்திற்கு உதவி புரிகிறது. நம் உடலில் எவ்வளவு கொழுப்பு இருக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பதே இந்த ஹார்மோன்தான்.

பெண்களிடையே லெப்டின்

பெண்களிடையே லெப்டின்

பெண்களின் உடலில் ஆண்களை விட 2 மடங்கு அதிக லெப்டின்கள் சுரக்கிறது. எனவே இது வளர்ச்சிதை மாற்றத்தை பாதித்து அதிக பசியை தூண்டுகிறது. இந்த அதிகளவு லெப்டின் சுரப்பு பெண்களிடையே மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு அதிக மனஅழுத்தம், தூக்கமின்மை, அதிகளவு இன்சுலின் சுரப்பு, ஹார்மோன் சமநிலையின்மை போன்ற சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

உணவு பழக்கம்

உணவு பழக்கம்

சாப்பிடுவதை குறைப்பது மற்றும் பட்டினி கிடப்பது திடீரென லெப்டின் அளவில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த வீழ்ச்சி விகிதம் ஆண்களை விட பெண்களிடம் அதிகமாக உள்ளது. இந்த லெப்டின் வீழ்ச்சி வளர்ச்சிதை மாற்றத்தை பாதிப்பதால் உடலில் கொழுப்புகள் அப்படியே தங்கிவிடுகிறது. கர்ப்பிணி பெண்களை பொறுத்தவரையில் இது மேலும் மோசம். எனவேதான் பிரசவம் முடிந்த பின் பெண்களின் எடை மிகவேகமாக அதிகரிக்கிறது.

லெப்டினை குறைக்க இயலுமா?

லெப்டினை குறைக்க இயலுமா?

கவலைப்பட வேண்டாம் பெண்களே, லெப்டினின் அளவை குறைப்பது என்பது சாத்தியம்தான். ஆம், லெப்டின் அளவை குறைப்பதன் மூலம் நம் உடலின் செயல்பாடுகளை எப்போதும் போல மாற்றலாம். சரியான லெப்டின் அளவு என்பது உங்கள் எடையை குறைக்க இயலும். அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

சாதாரணமாகவே உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லதுதான். அதிலும் லெப்டின் அளவை குறைக்க முயற்சிக்கும்போது உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். ஏரோபிக்ஸ், எடை தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகள் உங்கள் உடலிலுள்ள கொழுப்பு செல்களை கரைக்க உதவும். இந்த கொழுப்பு செல்கள் கரையும்போது லெப்டினும் கரையும்.

லெப்டின் உணவுகள்

லெப்டின் உணவுகள்

லெப்டின் அளவை குறைப்பதில் உணவுகளும் முக்கியப்பங்கு வகிக்கிறது. குறிப்பாக எதிர் அழற்சி பண்புடைய உணவுகள் மற்றும் ஒமேகா 3 அமிலம் அதிகமுள்ள உணவுகள் உங்கள் லெப்டின் அளவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இவை மட்டுமின்றி அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்வதும் லெப்டினின் அளவை குறைக்கும்.

தூக்கம்

தூக்கம்

தூக்கமின்மை என்பது உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கும். அந்த வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நன்றாக தூங்கும் பெண்களுக்கு சுரக்கும் லெப்டினின் அளவானது சரியாக தூங்காத பெண்களின் லெப்டினின் அளவைவிட 15 சதவீதம் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் குறைந்தது 8 மணி நேரம் தூங்கவேண்டியது அவசியமாகும்.

அதிக நீர் அருந்துதல்

அதிக நீர் அருந்துதல்

நீர் அதிகமாக அருந்துவது செரிமானத்தை அதிகரிப்பது, பசியை கட்டுப்படுத்துவது மட்டுமன்றி உடலை சத்துக்களை பெற தயார் செய்கிறது. குறைந்தளவு நீர் அருந்துவது உங்கள் உடலில் லெப்டினின் அளவை அதிகரிக்கும். எனவே குறைந்தது 8 முதல் 12 கிளாஸ் தண்ணீரை தினமும் அருந்துங்கள்.

மது மற்றும் புகைப்பழக்கம்

மது மற்றும் புகைப்பழக்கம்

மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆண்களை விட பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். பெண்கள் மதுஅருந்துவதற்கும், புகைபிடிக்க தொடங்குவதற்கு முன்னும் நியாபகத்தில் கொள்ள வேண்டியது இந்த பழக்கங்கள் லெப்டின் சுரப்பை வழக்கத்தை விட அதிகரிக்கும். அதுமட்டுமின்றி இவை உங்களை அதிகம் சாப்பிட தூண்டும் எனவே உங்கள் எடை மேலும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons behind why women gain weight faster than men?

Women gain weight faster than men because of the leptin hormone. By following some methods women can easily reduce leptin level.
Story first published: Friday, August 17, 2018, 17:52 [IST]
Desktop Bottom Promotion