For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா?... அதுக்கு ஏன்னு தெரியுமா?

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். ஆனால் இந்த பசியே பறந்து போகாமல் திரும்பத் திரும்ப எடுத்தால் நாம் என்ன செய்வோம். ஆமாங்க உங்களுக்கு அடிக்கடி பசி எடுக்கா?

|

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். ஆனால் இந்த பசியே பறந்து போகாமல் திரும்பத் திரும்ப எடுத்தால் நாம் என்ன செய்வோம். ஆமாங்க உங்களுக்கு அடிக்கடி பசி எடுக்கா? என்ன சாப்பிட்டும் பசி அடங்கலையா? சில சமயங்களில் நாம் அப்போ தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் மறுபடியும் வயிறு பரண்டும். இதற்கு காரணம் என்ன என்று என்றாவது நாம் யோசித்து இருக்கோமா? கிடையவே கிடையாது. பசி வந்ததும் எதையாவது சாப்பிட்டு அதை அடக்கி விடுவோம். உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இப்படி உண்மையில் காரணம் என்னவென்று தெரியாமல் சாப்பிடுவதால் தான் நமக்கு நிறைய பிரச்சினைகளும் வருகிறது. அதிகமான உடல் எடை, அதிக கொலஸ்ட்ரால், நீரிழிவு நோய் என்று அடுக்கி கொண்டே போகலாம்.

சரி இனி என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? அதற்குத் தாங்க இதற்கான உண்மையான காரணத்தை தெரிஞ்சுகோங்க. வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நொறுக்கு தீனிகள்

நொறுக்கு தீனிகள்

இதற்கு காரணம் நாம் சாப்பிடும் நொறுக்கு தீனிகள் தான். ஆமாங்க இந்த செயற்கை பானங்கள், கேண்டி, பாஸ்ட்ரி போன்ற நொறுக்கு தீணிகளில் எந்த கலோரியும் நமக்கு கிடைப்பதில்லை. இதை நீங்கள் எடுத்து கொண்டாலும் திரும்பவும் உடனே பசிக்க ஆரம்பித்து விடும். எனவே இதற்கு பதிலாக நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீண்ட நேரம் பசியை உங்களால் தாங்க முடியும்.

பசி தாங்க கூடிய உணவுகள்

பசி தாங்க கூடிய உணவுகள்

தானியங்கள், பழங்கள், காய்கறிகள், சால்மன், நட்ஸ், அவகேடா, முட்டை, பீன்ஸ், சிக்கன் போன்றவை.

மன அழுத்தம்

மன அழுத்தம்

நம் பசியை அடங்க வைக்க அட்ரீனலைன் என்ற ஹார்மோன் உதவுகிறது. ஆனால் அதே சமயத்தில் நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் உங்கள் உடலில் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இந்த கார்டிசோல் ஹார்மோன் தான் நமது பசிக்கும் காரணமாக அமைகிறது. எனவே நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் உங்கள் பசியும் அதிகரிக்கும். எனவே மன அழுத்தத்தை தவிருங்கள். உங்கள் பசியும் பறந்தோடி விடும்.

தாகம்

தாகம்

சில சமயங்களில் நமக்கு எதையாவது சாப்பிட வேண்டும் போல் தோன்றும். இதற்கு காரணம் நம் உடம்பில் போதிய நீர்ச்சத்து இல்லாதது தான் காரணம். எனவே முதலில் கொஞ்சம் தண்ணீர் குடிங்க. அப்புறம் உங்கள் பசியும் அடங்கி விடும். பிறகு வேணா கொஞ்சமா எதாவது சாப்பிடுங்க.இந்த முறை நீங்கள் அதிகமா சாப்பிடுவதை தடுக்கும்.

இரத்த சர்க்கரை

இரத்த சர்க்கரை

நீங்கள் பாஸ்ட்ரி, செயற்கை பானங்கள், சோடா போன்றவற்றை எடுத்தால் இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரையால் உங்கள் உடம்பிலும் சர்க்கரை சத்து அதிகமாகும். இதனால் இன்சுலின் சுரப்பு அதிகமாக தேவைப்படும். உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அதிகமாக பசிக்கும்.

டயாபெட்டீஸ்

டயாபெட்டீஸ்

உங்கள் உடம்புக்கு போதிய ஆற்றல் கிடைக்க வில்லை என்றால் அப்பொழுது பசிக்க ஆரம்பித்து விடும். பாலிபோகியா என்பது அதிகமான பசி என்பதை குறிக்கிறது. இந்த அதிகமான பசி உணர்வு டயாபெட்டீஸ் நோயின் அறிகுறியாகும். அதே நேரத்தில் எடை இழப்பு மற்றும் சோர்வு அடைவீர்கள். இந்த மாதிரியான பிரச்சினை தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

குறைந்த சர்க்கரை சத்து

குறைந்த சர்க்கரை சத்து

இந்த மாதிரியான நிலை ஹைப்போகிளைசீமியா என்றழைக்கப்படுகிறது. உங்கள் உடம்புக்கு தேவையான எரிபொருள் அல்லது குளுக்கோஸ் இல்லை என்றால் இந்த பிரச்சினை ஏற்படும். ரெம்ப சோர்வாக, வலுவிழந்து காணப்படுவீர்கள். சில மணி நேரங்களுக்கு உணவு உண்ணவில்லை என்றால் இந்த நிலை ஏற்படும். எனவே கொஞ்சம் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடனே உங்கள் உடல் பழைய நிலைக்கு வந்து விடும்.

கருவுறுதல்

கருவுறுதல்

கருவுற்ற பெண்களுக்கு முதல் சில வாரங்கள் அதிக பசி எடுக்க ஆரம்பித்து விடும். நிறைய வித விதமான உணவுகளை சாப்பிடுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். எனவே உடனே இந்த மாதிரியான பசி நீடித்தால் நீங்கள் கருவுற்று இருக்கிறீர்களா என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள். இல்லையென்றால் மருத்துவரை அணுகி இது குறித்து ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.

வேகமாக சாப்பிடுதல்

வேகமாக சாப்பிடுதல்

நீங்கள் வேகமாக சாப்பிட்டாலும் உங்கள் வயிறு நிறையாது. காரணம் உங்கள் வயிறு நிறைந்து விட்டது என்பதை உணர சில கால அவகாசம் தேவை. எனவே நீங்கள் வேகமாக சாப்பிடும் போது அந்த உணர்வு ஏற்படாது. எனவே உணவை மெதுவாக மென்று விழுங்கி சாப்பிடுங்கள். நமது உணவை 20 நிமிடங்களாவது ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்கின்றனர். இப்படி சாப்பிட்டால் தான் உங்கள் வயிறும் நிறையும் பசியும் எடுக்காது.

உணவில் திருப்தி இல்லை

உணவில் திருப்தி இல்லை

திருப்தி குறியீட்டு எண் என்ற ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதில் உங்களுக்கு சாப்பிட்ட திருப்தி அளிக்கக் கூடிய உணவுகள் கண்டிப்பாக உங்கள் பசியையும் போக்கி விடும். அதே நேரத்தில் உங்களுக்கு தேவையான கலோரிகளும் கிடைக்கும். எண்ணெய்யில் பொரித்த உருளைக்கிழங்கை விட வதக்கிய உருளைக்கிழங்கு வயிற்றை நிரப்பும்.

பார்த்தல், மணம் மற்றும் சுவை

பார்த்தல், மணம் மற்றும் சுவை

நீங்கள் ரோட்டோரம் நடந்து செல்லும் போது ஐஸ் க்ரீம் கடையை கண்டாலே போதும் உள்ளுக்குள் பசிக்க ஆரம்பித்து விடும். உங்கள் கண், மூக்கு மற்றும் வாயில் ஏற்படும் உணர்வுகளான காணுதல், மணம் மற்றும் உணவின் சுவை உங்கள் பசியை தூண்டி விடும். எனவே உங்கள் வயிறு நிஜமாகவே பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள். இல்லையென்றால் அந்த மாதிரியான சமயங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. நறுமணம் மற்றும் சுவைக்கு அடிமையாகி அதிகமாக சாப்பிடாதீர்கள்.

மனநிலை உணர்வுகள்

மனநிலை உணர்வுகள்

உங்கள் சோகம், சந்தோஷம், மனச் சோர்வு இவைகள் கூட உங்களுக்கு கற்பனை பசியை ஏற்படுத்தி விடும். நீங்கள் இந்த மாதிரியான உணர்வுகள் பசிக்கு அடிமையாகி விடுவது நல்லது கிடையாது. உண்மையாகவே உங்களுக்கு பசிக்கிறதா? என்பதை சோதித்து கொள்ளுங்கள். எனவே உங்கள் மனக் கவலை, அனிஸ்சிட்டி போன்ற பிரச்சினைகளை சமாளிக்க உணவுகளை சாப்பிடுவதை விடுத்து மருத்துவரை நாடி சிகச்சை பெறுவது நல்லது.

தைராய்டு பிரச்சினை

தைராய்டு பிரச்சினை

உங்களுக்கு சோர்வு, படபடப்பு, மன நிலை மாற்றம் அடிக்கடி பசித்தல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். இவை உங்களுக்கு தைராய்டு பிரச்சினை உள்ளதை கூறுகிறது. இதை மருந்து மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ சரி செய்யலாம்.

மருந்துகள்

மருந்துகள்

சில சமயங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட பசியை தூண்டி விடும். மன அழுத்தம், மனநிலை கோளாறுகளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளான ஆன்டிஹிஸ்டமைன், ஆன்டிசைகோடிக்ஸ், மற்றும் கார்டிகோஸ்டீராய்டுகள் போன்றவைகள் பசியை தூண்டும். எனவே இது குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.

போதுமான தூக்கமின்மை

போதுமான தூக்கமின்மை

இரவில் தாமதமாக தூங்குவது உங்கள் பசிக்கு காரணமான ஹார்மோன்களான லெப்டின் மற்றும் கோர்லின் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி பசியை தூண்டும். இதனால் நீங்கள் அதிகமான நொறுக்கு தீணிகளை நாடிச் செல்வீர்கள். இதனாலும் உங்கள் உடம்பில் அதிகப்படியான கொழுப்புகள் சேர்ந்து பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது அமிர்தத்திற்கு மட்டுமல்ல பசிக்கும் சேர்த்து தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Am I Always Hungry?

Your body relies on food for energy, so it's normal to feel hungry if you don't eat for a few hours.
Desktop Bottom Promotion