Just In
- 11 hrs ago
இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி?
- 14 hrs ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 14 hrs ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 16 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
Don't Miss
- News
நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு
- Automobiles
2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...
- Movies
இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்!
- Finance
எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..!
- Technology
ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு
- Sports
நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்!
- Education
பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்கள் கண்கள் உங்களை பற்றி கூறும் மர்ம உண்மைகள் என்னென்ன...?
"தானத்தில் சிறந்த தானம் கண் தானம்" என்பார்கள். இந்த உலகை நம்மிடம் அறிமுகப்படுத்தும் மிக முக்கியமான உறுப்பு கண் தான். மற்ற உறுப்புகளை விட கண்ணிற்கு என்று தனித்துவம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.
இந்த முக்கிய உறுப்பு கூட உங்களை பற்றி தெளிவாக சொல்கிறது. கண்ணை வைத்தே நம்மை அறிந்து கொள்ள முடியுமா..? என்ற சதேகம் உங்களுக்கு இருந்தால், "முடியும்" என்பதே இதற்கான பதிலாக இருக்கும். எப்படி இது சாத்தியம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கண்கள் பேசிடும் வார்த்தைகள்..!
பொதுவாக காதலர்கள் என்றாலே கண்களால் பேசி கொள்பவர்கள் என்கிற வழக்கு மொழி பல காலமாக இருந்து வருகிறது. இது உண்மையும் கூட. நமது விருப்பங்களை கண்களால் எளிதில் புரிய வைக்க முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். நாம் பிறந்தது முதலே வளர்ச்சி அடையாத ஒரே உறுப்பு கண்ணின் விழித்தான்.

பனிமூட்டமா..?
சிலருக்கு கண்களில் ஒரு விதமான பனிமூட்டமாகவும், வெள்ளை படலமாகவும், வானத்தை போன்றும் தெரியும். இது போன்று உங்களுக்கு இருந்தால் நிச்சயம் பிரச்சினை உள்ளது என அர்த்தம். கருவிழியில் ஏற்பட கூடிய பிரச்சினைகளை இது குறிக்கிறது. ஆதலால் மருத்துவரை அணுகுங்கள்.

காணாமல் போய்விடுகிறதா..?
நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சிகளில் இருந்து இதே ஒன்று மறைந்து போவது போன்று உங்களுக்கு தோன்றுகிறதா..? இது போன்ற அறிகுறி கொஞ்சம் மோசமானது தான். பொதுவாக இது போன்று ஏற்படுவதற்கு முன்னரே கண்களில் வலி அல்லது தலைவலி ஏற்படும். மேலும், இது நரம்பு மண்டல பிரச்சினையாகவும் பார்க்கப்படுகிறது.

சிறிது மஞ்சளா..?
உங்கள் கண்களின் கருவிழி மேற்பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஏதாவது உருவாக தொடங்கினால் சற்றே ஜாக்கிரதையாக இருங்குங்கள். இவை புற ஊதா கதிர்களால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
MOST READ: இந்த 4 பொருட்களை சேர்த்து சாப்பிட்டால், ஒரே வாரத்தில் தொப்பையை குறைத்து விடலாம்..!

தானாகவே கண்ணீர் வருதா..?
நீங்கள் எதுவும் செய்யாமல் தானாகவே உங்களுக்கு கண்ணில் கண்ணீர் வந்தால் அதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதிக நேரம் தொலைக்காட்சி, ஸ்மார்ட் போன் ஆகியவற்றை பயன்படுத்தினால் நரம்புகள் விரைவிலே பாதிப்படைய தொடங்கும். குறிப்பாக கண்களுக்கு வறட்சியை தந்து தசைகளை பலவீனப்படுத்துவதால் இது போன்று ஏற்படுகிறது.

மங்கிய பார்வை
உங்கள் பார்வை எப்போதும் மங்கிய நிலையிலும், பார்ப்பவை அனைத்துமே மிகவும் மங்களாகவும் இருந்தால் இவை சர்க்கரை நோயிற்கான அறிகுறியாகும். அத்துடன் கண்ணில் புரை விழுந்துள்ளதை இது குறைகிறதாம். இது போன்று இருந்தால் சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் மருத்துவரிடம் பரிசோதித்து கொள்ளுங்கள்.

புள்ளி புள்ளியாக தெரிகிறதா..?
உங்கள் கண்களில் புள்ளி புள்ளியாக தெரிகிறதென்றால், சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என உங்களது கண்கள் எச்சரிக்கிறதாம். கண்களில் ரத்த ஓட்டம் குறைந்தாலோ, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ இது போன்று பின் புலத்தில் புள்ளி புள்ளியாக தெரிய வாய்ப்புகள் உள்ளது.

மஞ்சள் கண்கள்
கண்கள் மஞ்சளாக இருந்தால் கல்லீரல் அல்லது பித்தப்பை சம்பந்தமான கோளாறு உள்ளது என அர்த்தமாம். அதாவது இது போன்ற உறுப்புகளின் செயல்திறன் குறைந்துள்ளதை இவை குறிக்கிறது. மேலும், மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி போன்ற நோய்களுக்கான அறிகுறியாகவும் இது இருக்கலாம்.

சிவந்த கண்கள்
கண்கள் சிவப்பாக இருந்தால் அதற்கு பல காரணிகளை நாம் கூறலாம். இது கூட உங்களை பற்றி விளக்குகிறது. அதிக வேலை பளு, தூக்கமின்மை, மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற அறிகுறியால் இது போன்று ஏற்படலாம்.

அழியாத சின்னம்..!
மேற்சொன்ன அறிகுறிகளை உங்கள் கண்கள் உங்களுக்கு கொடுத்தால் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அத்துடன் கண்களை எப்போதும் பாதுகாப்பாக பார்த்து கொள்ளுங்கள். மேலும், நாம் இறந்தாலும் நமது கண்ணை வைத்து இந்த உலகத்தை பிறரால் பார்க்க முடியும் என்கிற எண்ணத்தால்தான் கண் தானம் செய்ய வேண்டும் என பலர் சொல்கின்றனர்.
கண் தானம் செய்வோம்..! பிறருக்கு வாழ உதவுவோம்..!