For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடைக்காலத்தில் பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடக்கூடாதாம்... ஏன் தெரியுமா?

இங்கு கோடைக்காலத்தில் பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

கோடைக்காலம் ஆரம்பித்து, அக்னி வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த அக்னி நட்சத்திர காலத்தில் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உடல் சூடு அதிகரித்து, பெரும் அவஸ்தைக்கு உள்ளாகக்கூடும். மேலும் கோடைக்காலத்தில் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் உடலை குளிர்ச்சியுடனும், வறட்சியடையாமலும் தடுக்கும் உணவுகளாக இருக்க வேண்டும். இன்று பலருக்கும் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை உள்ளதால், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து தினமும் சாப்பிடுவார்கள். அதில் ஒன்று தான் பேரிச்சம் பழம்.

What Are The Benefits Of Eating Dates In Summer?

பேரிச்சம் பழம் உடலில் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியது. எனவே தான் இது குளிர்காலத்தில் சாப்பிட ஏற்ற உணவாகும். சரி, இத்தகைய பேரிச்சம் பழத்தை கோடைக்காலத்தில் சாப்பிடலாமா என்ற கேள்வி பலரது மனதில் இப்போது எழுந்திருக்கும். பேரிச்சம் பழம் அடிவயிற்று புற்றுநோயைத் தடுக்க பயன்படுவதாக கருதப்படுகிறது. இஸ்லாமியர்கள் தங்களது நோன்பை முடிக்கும் போது, பேரிச்சம் பழம் மற்றும் நீரை எடுத்து தான் நோன்பை முடிப்பார்கள்.

பேரிச்சம் பழம் இனிப்பாக இருந்தாலும், இது செரிமான செயல்பாட்டை சீராக நடைபெற உதவும். மேலும் இதை உட்கொண்ட 1/2 மணிநேரத்தில் உடலின் ஆற்றலானது அதிகரிக்கும். அமெரிக்கன் புற்றுநோய் சொசைட்டி ஒரு நாளைக்கு 20-35 கிராம் டயட்டரி நார்ச்சத்து எடுக்க பரிந்துரைக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால் கண் ஆரோக்கியம் மேம்படும் என்பது தெரியுமா? சரி, இப்போது பேரிச்சம் பழத்தை ஒருவர் தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலும்புகளை வலிமையாக்கும்

எலும்புகளை வலிமையாக்கும்

பேரிச்சம் பழத்தில் உள்ள குறிப்பிட்ட கனிமச்சத்துக்கள், எலும்புகளுக்கு நல்லது மட்டுமின்றி வலிமையாக்கி, ஆஸ்டியோபோசிஸ் போன்ற எலும்பு பிரச்சனைகளால் ஏற்படும் வலியை எதிர்க்கும். பேரிச்சம் பழத்தில் செலினியம், மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கும் தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. எனவே உங்கள் எலும்புகளை வலிமையாக்க நினைத்தால், தினமும் பேரிச்சம் பழத்தை சாப்பிடுங்கள்.

இரைப்பை கோளாறுகள்

இரைப்பை கோளாறுகள்

பேரிச்சம் பழத்தில் உள்ள நிக்கோட்டின் பல்வேறு வகையான இரைப்பை கோளாறுகளை சரிசெய்யும். தினமும் ஒருவர் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், அது உடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்ட உதவிடும். மேலும் பேரிச்சம் பழத்தில் நீரில் கரையக்கூடிய மற்றும் நீரில் கரையாத நார்ச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை உள்ளது. இவை செரிமானத்திற்கு உதவும்.

மலச்சிக்கல் நீங்கும்

மலச்சிக்கல் நீங்கும்

பேரிச்சம் பழம் மிகச்சிறந்த மலமிளக்கும் உணவுப் பொருளாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது ஆரோக்கியமான குடலியக்கத்திற்கு அத்தியாவசியமான சத்தாகும். பேரிச்சம் பழத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் பேரிச்சம் பழத்தை சாப்பிடுங்கள். இதனால் நல்ல பலனைக் காணலாம்.

இரத்த சோகை குணமாகும்

இரத்த சோகை குணமாகும்

பேரிச்சழம் பழத்தில் ஏராளமான அளவில் இரும்புச்சத்து உள்ளது. எனவே உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள், தினமும் பேரிச்சம் பழத்தை தவறாமல் சாப்பிட்டு வந்தால், இரும்புச்சத்து குறைபாட்டில் இருந்து விரைவிர் விடுபடலாம். மேலும் பேரிச்சம் பழம் இரத்த சோகை அறிகுறிகளான உடல் சோர்வு, ஆற்றலின்மை போன்றவற்றைக் குறைக்க உதவும்.

உடல் பருமன் மேம்படும்

உடல் பருமன் மேம்படும்

பேரிச்சம் பழம் புரோட்டீன், சர்க்கரை மற்றும் பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை உள்ளடக்கியது. 1 கிலோ பேரிச்சம் பழத்தில் 3000 கலோரிகள் உள்ளன.இவ்வளவு கலோரிகள் உடல் எடையை அதிகரிக்கும். அதிலும் ஒருவர் பேரிச்சம் பழத்தை வெள்ளரிக்காயுடன் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.

ஆற்றல் அதிகரிக்கும்

ஆற்றல் அதிகரிக்கும்

பேரிச்சம் பழத்தில் உள்ள சர்க்கரை புருக்டோஸ், க்ளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்றவை, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். எனவே நீங்கள் மிகவும் களைப்புடன் இருந்தால், பேரிச்சம் பழத்தை சாப்பிடுங்கள். உடற்பயிற்சிக்கு பின் நீங்கள் மிகவும் களைப்பை உணர்ந்தால், 2 துண்டு பேரிச்சம் பழத்தை சாப்பிடுங்கள்.

இதய ஆரோக்கியம் மேம்படும்

இதய ஆரோக்கியம் மேம்படும்

பேரிச்சம் பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது பக்கவாதம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் பேரிச்சம் பழம் உடலில் கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமன் மற்றும் இதய நோய்களைத் தடுக்கும். எனவே தினமும் தவறாமல் பேரிச்சம் பழம் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான நரம்பு மண்டலம்

ஆரோக்கியமான நரம்பு மண்டலம்

பேரிச்சம் பழத்தில் உள்ள வைட்டமின்கள், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை சிறப்பாக பராமரிக்கும். இதில் உள்ள பொட்டாசியம் தான் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தையே மேம்படுத்துகிறது. அதோடு பேரிச்சம் பழத்தை ஒருவர் சாப்பிட்டு வந்தால், அது மூளையின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.

வயிற்றுப் போக்கை சரிசெய்யும்

வயிற்றுப் போக்கை சரிசெய்யும்

பேரிச்சம் பழத்தில் இருக்கும் பொட்டாசியம், வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும். இது எளிதில் செரிமானவதோடு, நாள்பட்ட வயிற்றுப் போக்கை குணமாக்கும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து தான் வயிற்றுப் போக்கில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

ஒரு நாளைக்கு எத்தனை பேரிச்சம் பழம் சாப்பிடலாம்?

ஒரு நாளைக்கு எத்தனை பேரிச்சம் பழம் சாப்பிடலாம்?

பேரிச்சம் பழம் உடல் எடையை அதிகரிக்கும் என்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் பேரிச்சம் பழத்தை மிதமான அளவில் தான் சாப்பிட வேண்டும். அதிலும் வாரத்திற்கு 1-2 முறை 3-4 பேரிச்சம் பழத்தை சாப்பிடுவது சிறந்தது.

கோடைக்காலத்தில் பேரிச்சம் பழத்தை சாப்பிடலாமா?

கோடைக்காலத்தில் பேரிச்சம் பழத்தை சாப்பிடலாமா?

பேரிச்சம் பழம் உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியது. பொதுவாக ஒரு நாளைக்கு 2-3 துண்டுகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது. ஒரு வேளை இரத்த சோகை அல்லது இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், அவர்கள் ஒரு நாளைக்கு 2-3 பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம். இருப்பினும் பேரிச்சம் பழம் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பதால், கோடைக்காலத்தில் மிதமான அளவில் சாப்பிடுங்கள். அதோடு நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களையும் அதிகம் சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Are The Benefits Of Eating Dates In Summer?

Can you eat dates in summer? Read this article to find out the benefits of eating dates in summer.
Desktop Bottom Promotion