For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சைனஸ் பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த மூலிகை பற்றி தெரியுமா?

சைனஸ் பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த மூலிகை பற்றி தெரியுமா?

By Lakshmi
|

சைனஸ் பிரச்சனையானது இப்போது பெரும்பாலரை தாக்கியுள்ள ஒரு நோயாகும். அதுவும் குறிப்பாக பனிக்காலத்தில் இதனால் பலர் அவதிப்படுகின்றனர். இது நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் ஒன்றாகவும் உள்ளது.

நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையில் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்றறைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது.

நமது தினசரி வாழ்க்கையில் பெரும் தொல்லை தரும் இந்த சைனஸ் பிரச்சனையிலிருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றியும், இதற்கான சித்த மருத்துவ தீர்வுகள் என்ன என்பது பற்றியும் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்:

அறிகுறிகள்:

இந்த சைனஸ் பிரச்சனைக்கான அறிகுறிகளாவன, காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல் போன்றவையாகும்.

துளசி

துளசி

துளசி நமக்கு நன்றாக தெரிந்த ஒரு மூலிகையாகும். இந்த துளசி சளி, இருமல், சைனஸ் போன்ற பிரச்சனைகளுக்கு கை கண்ட ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. துளசியை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் பல வகையான பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். சைனஸ் பிரச்சனைக்கு 15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து உண்ணலாம். இதனை தொடந்து செய்து வர சைனஸ் பிரச்சனை குணமாகும்.

பேரரத்தை

பேரரத்தை

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த பேரரத்தை ஆனது அதீத மருத்துவ குணங்களை கொண்டது ஆகும். சைனஸ் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம்.

ஆடாதொடை

ஆடாதொடை

ஆடாதொடை இலைகள் மற்றும் வேர் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இது கிராமப்புறங்களில் பெரும்பாலும் கிடைக்க கூடியது. அல்லது இதனை நாட்டு மருத்துவ கடைகளில் பெறலாம். இந்த ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம்.

கசகசா

கசகசா

கசகசா நமது வீட்டிலேயே இருக்கும் ஒரு சிறந்த மருத்துவ பொருளாகும். இந்த கசகசாப் பொடியில் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.

கண்டங்கத்திரி

கண்டங்கத்திரி

கண்டங்கத்திரியை சைனஸ் பிரச்சனைகளை தீர்க்க பயன்படுத்தலாம். கைப்பிடி அளவு கண்டங்கத்திரிச் செடியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்ற வைத்து அருந்தலாம்.

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம்

சைனஸ் பிரச்சனைகளுக்கு நமது வீட்டிலேயே இருக்கும் சில சமையல் அறை பொருட்கள் மருந்தாக பயன்படுகிறது. பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.

தும்பை பூ

தும்பை பூ

தும்பை பூவை சைனஸ் பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன்படுத்தலாம். இந்த தும்பை பூவானது சாலை ஓரங்களிலே காணப்படும் ஒன்றாகும். ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

தூதுவாளை

தூதுவாளை

சளி, சைனஸ் போன்ற பிரச்சனைகளுக்கு துதுவளையை விட சிறந்த தீர்வு எதுவும் இருக்க முடியாது என்று கூறலாம். அரை ஸ்பூன் தூதுவளைப் பொடியில் தேன் கலந்து உண்ணலாம்.

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி ஆனது சைனஸ் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. 15 மிலி. கற்பூர வள்ளிச் சாறைக் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

ஊமத்தை

ஊமத்தை

ஆதண்டைக் காயை வற்றலாகச் செய்து சாப்பிடலாம். ஊமத்தையும் சுக்கையும் சம அளவு எடுத்துப் பொடித்து, அதை அரை ஸ்பூன் தேனில் கலந்து உண்ணலாம்.

மணத்தக்காளி

மணத்தக்காளி

மணத்தக்காளி ஆனது நமக்கு எளிதாக கிடைக்க கூடிய ஒன்றாகும். 50 கிராம் மணத்தக்காளி வற்றலை, 200 மிலி வெந்நீரில் ஊறவைத்து வடித்து அருந்தலாம்.

திப்பிலி

திப்பிலி

திப்பிலி மற்றும் பனங்கற்கண்டு ஆகிய இரண்டுமே மிக சிறந்த மருத்துவ பொருள்களாகும். திப்பிலிப் பொடியுடன் பனங்கற்கண்டு சம அளவு சேர்த்து, அரைஸ்பூன் பாலில் கலந்து உண்ணலாம்.

வெற்றிலை சாறு

வெற்றிலை சாறு

வெற்றிலை நெஞ்சு சளி பிரச்சனைகளுக்கு மிக சிறந்த ஒரு தீர்வாக உள்ளது. வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.

சுக்கு

சுக்கு

சுக்கை களியாகச் செய்து நெற்றியில் பற்று போடலாம். மேலும் லவங்கத்தை நீர்விட்டு மைபோல் அரைத்து நெற்றியிலும், மூக்கின் மேலும் பற்று இடலாம்.

அகிற்கட்டை

அகிற்கட்டை

அகிற்கட்டைத் தைலத்தைத் தலையில் தேய்க்கலாம். கண்டுபாரங்கியைக் கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்த்து அரைத்துப் பற்று போடலாம்.

சுக்கு

சுக்கு

சுக்கு நமது வீட்டில் எப்போதும் இருக்கும் ஒரு பொருளாகும். இதனை பற்றாக போட்டால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நீர்க்கட்டு நீங்கும். சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும்படி லேசாகக் காட்டலாம். இதனால் சைனஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

சேர்க்க வேண்டியவை:

சேர்க்க வேண்டியவை:

தேன், மிளகு, பூண்டு, முட்டை, கோழி போன்ற உணவுகளை தினசரி சேர்க்க வேண்டியது அவசியமாகும். இதனால் சைனஸ் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெற முடியும்.

தவிர்க்க வேண்டியவை:

தவிர்க்க வேண்டியவை:

குளிர்ச்சியான உணவுகள், குளிரூட்டப்பட்ட அறை, வாழைப்பழம், திராட்சைப் பழம், தர்பூசணி, ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை உணவில் சேர்த்துவதை தவிர்ப்பதை தடுப்பதால் சைனஸ் பிரச்சனை அதிகரிப்பதை தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Use These Herbs for Sinus Problem

Use These Herbs for Sinus Problem
Story first published: Friday, January 12, 2018, 9:53 [IST]
Desktop Bottom Promotion