Latest Updates
-
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
விந்தணுக்கள் வெளியேறும்போது உடலில் உள்ள சத்துக்களும் சேர்ந்து வெளியேறுமா?
விந்தணுக்கள் பற்றி உங்களுக்குத் தெரியாத வில உண்மைகளை இந்த கடடுரை எடுத்துரைக்கிறது.
சில ஆண்கள் விந்தணுக்களை வெளியேற்றுவதால் உடல் பலவீனமாகிவிடும் என்று நினைக்கின்றனர். இன்னும் சிலரோ விந்தணுக்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், விந்து வெளியேறும்போது ஏராளமான ஊட்டச்சத்துக்களும் உடலில் இருந்து வெளியேறுகின்றன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுபற்றிய கட்டுக் கதைகளையும் உண்மைகளையும் பற்றி மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இங்கு பார்ப்போம்.

விந்து வெளியேற்றம்
சுய இன்பம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்றும், ஒவ்வொரு துளி விந்துவிலும் 90 துணிகள் ரத்தம் உறைந்திருக்கும். அதனால் விந்துவை அடிக்கடி வெளியேற்றினால் உடலில் உள்ள ரத்த அளவும் குறைகிறது என்று பயப்படுகிறார்கள்.
ஆனால் இவை அனைத்துமே கட்டுக்கதைகள் தான். அதனால் விந்து வெளியேறுவது அதன் தன்மை மற்றும் விளைவுகள் பற்றி இங்கே சில உண்மைகளைக் காணலாம்.

அளவு
சாதாரணமாக ஒரு ஆண் சுய இன்பத்தின் வழியாக விந்தணுக்களை வெளியேற்றுகின்ற பொழுது, ஒவ்வொரு முறையும் குறைந்தது ஒரு டீஸ்பூன் அளவாவது இருக்கும். ஆனால் இந்த விந்துவின் அளவானது, வயது, முந்தைய விந்து வெளியேற்றம், பிறப்புறுப்பு கிளர்ச்சி நிலை ஆகியவற்றைப் பொறுத்தும் மாறுபடும்.

ஊட்டச்சத்துக்கள்
ஆண்கள் வெளியேற்றுகின்ற ஒரு டீஸ்பூன் விந்து திரவத்தில் மட்டும் சுமார் 200 முதல் 500 மில்லியன்கள் வரை விந்தணுக்கள் (செல்கள்) இருக்கும். இந்த எண்ணிக்கையும் ஆணின் வயது, உடல்நிலை மற்றும் இதர சில காரணிகளைப் பொறுத்து எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யும்.
ஆண்கள் வெளியேற்றும் விந்துவில் சுமார் ஒரு சதவீதம் மட்டுமே விந்து செல்கள் இருக்கும். எஞ்சியவற்றில் ஃபுரோக்டோஸ், அக்சாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், புரோட்டீன், ஜிங்க் மறறும் பாஸ்புட் போன்றவை இருக்கும்.

கலோரிகள்
ஆண்களில் பெரும்பாலானோர் விந்துக்களில் அதிக கலோரிகள் இருப்பதாக நம்புகின்றனர். அது உண்மையல்ல. ஒரு டீஸ்பூன் அளவு விந்துவை எடுத்துக் கொண்டால், அதில் ஐந்திலிருந்து 6 கலோரிகள் வரை தான் இருக்கின்றன.

பாலுணுர்வுத் தூண்டல்
விந்துவை உற்பத்தி செய்வதற்கென்று சில குறிப்பிட்ட போதுமான நேரம் உடலுக்குத் தேவைப்படுகிறது என்று கருதுகிறோம். இன்னொன்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். விந்துப்பையானது நிரம்பி வழிந்து, நீங்கள் விந்துவை வெளியேற்றாமல் இருந்தால், உடல் உங்களுடைய மூளைக்கு சிக்னல் கொடுக்கும். அதனால் உடலினுள் பாலுணர்ச்சி தூண்டப்பட்டு, சுய இன்பத்தில் ஈடுபடவோ அல்லது உடலுறுவு கொள்ளவோ மனம் துடிக்கிறது

விந்து உற்பத்தி
உண்மையாகச் சொல்லப்போனால் குறிப்பிட்ட இடைவெளியில் விந்துவை வெளியேற்றுவது நல்லது தான். ஏனெனில், விந்து வெளியேற்றம் நடப்பதால், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட விந்து வெளியேற்றப்பட்டு, மீண்டும் புதிய விந்துக்கள் உற்பத்தி தொடங்கும்.

கால இடைவெளி
சில ஆண்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை என்ற வீதத்திலும் சிலர் வாரம் ஒரு முறையும், சிலரோ மாதக்கணக்கில் விட்டுவிட்டும் விந்துவை சுய இன்பத்தின் மூலமோ அல்லது உடலுறவின் மூலமோ வெளியேற்றுவார்கள்.

தூங்கும்பொழுது
நிறைய ஆண்களுக்கு துக்கத்திலேயே விந்து வெளியேறும். விந்துப்பை நிரம்பி வழியும்போது உடல் தானாகவே விந்துவை வெளியுற்ற முயுலும். அதனுடைய விளைவால் தான் தூக்கத்தில் விநது வெளியேறுகிறது.



Click it and Unblock the Notifications