For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த வகை உள்ளாடை விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது?

பாக்ஸர் உள்ளாடை அணியலாமா அல்லது சாதாரண உள்ளாடை அணியலாமா என்பது பல ஆண்டுகளாய் நடந்துவரும் விவாதமாகும். ஆய்வுகளின்படி பாக்ஸர் உள்ளாடைகள் விந்தணுக்களின் உற்பத்திக்கு சிறந்தது என கூறப்பட்டுள்ளது.

|

கருவுறுதலில் பிரச்சினை என்பது ஆண் மற்றும் பெண் இருவரையுமே சார்ந்ததுதான். பெண்களுக்கு கருவுறுதலில் பல

பிரச்சினைகள் இருக்கலாம் ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சினை விந்தணுக்களின்

Underwear affects sperm

எண்ணிக்கையும், உற்பத்தியும் குறைவாய் இருப்பதுதான். இதற்கு உணவுப்பழக்கம், மது மற்றும் புகைபிடித்தல் போன்ற பல

காரணங்கள் இருக்கிறது.

இவற்றுடன் மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது அதுதான் ஆண்கள் அணியும் உள்ளாடை. ஆம் ஆண்கள் அணியும் உள்ளாடை

கூட அவர்களுடைய விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். பாக்ஸர் உள்ளாடை அணியலாமா அல்லது சாதாரண உள்ளாடை

அணியலாமா என்பது பல ஆண்டுகளாய் நடந்துவரும் விவாதமாகும். இங்கே எந்த வகை உள்ளாடை உங்கள் விந்தணுக்களின்

ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாக்ஸர் உள்ளாடை

பாக்ஸர் உள்ளாடை

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பாக்ஸர் மற்றும் தளர்வான உள்ளாடை அணியும் ஆண்களின்

விந்தணுக்களின் எண்ணிக்கையும், ஆரோக்கியமும் சீராக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் தளர்வான உள்ளாடைகள்

உடல் மற்றும் பிறப்புறுப்பை சுற்றி வெப்பநிலை அதிகரிப்பதை தடுக்கிறது.

வெப்பநிலை

வெப்பநிலை

உயிரியல்ரீதியாக பார்க்கும்போது அதிக வெப்பநிலை விந்தணுக்களின் ஆரோக்கியதத்திற்கு ஏற்றதல்ல. உயிரணு என்பது மனித

உடலின் மிகவும் தனித்துவம் வாய்ந்த மூலக்கூறு ஆகும். எனவே அதிக வெப்பநிலை விந்தணுக்களின் வேகம், தரம் மற்றும்

உற்பத்தியை பாதிக்கலாம். இதன் விளைவாக விந்தணுக்கள் கருமுட்டையை அடைவது தடுக்கப்படலாம்.

மருத்துவ ஆய்வு

மருத்துவ ஆய்வு

2017 ஆம் ஆண்டு ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மைக்குறைவை பற்றி ஆய்வு செய்ய மருத்துவ நிறுவனம் ஒன்று 700 ஆண்களின்

விந்தணுக்களின் மாதிரியை சேகரித்தது. அவர்களின் வயது 35 வயதிற்குள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடும் விதித்தது.

ஏனெனில் ஆண்களின் வயதும் விந்தணுக்களின் தரத்தை முடிவு செய்யும். அதேபோல அவர்களின் எடையும் கவனத்தில்

கொள்ளப்பட்டது.

ஆய்வு முடிவு

ஆய்வு முடிவு

ஆய்வின் முடிவில் இறுக்கமான உள்ளாடைகளை அணிபவர்களை காட்டிலும் பாக்ஸர் போன்ற தளர்வான உள்ளாடை

அணிபவர்களின் விந்தணுக்களின் தரம் 25 சதவீதம் அதிகமாய் இருந்தது மேலும் அவர்களின் விந்தணுக்களின் உற்பத்தியும் 17

சதவீதம் அதிகமாக இருந்தது. இந்த ஆய்வின் முடிவின்படி இறுக்கமான உள்ளாடைகளை விட பாக்ஸர் உள்ளாடைகளே சிறந்தது என

அறிவிக்கப்பட்டது. அதேசமயம் உங்கள் வயதும், எடையும் கூட விந்தணுக்களின் தரத்தை குறைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

மற்ற காரணிகள்

மற்ற காரணிகள்

இவை மட்டுமின்றி போதைப்பொருட்கள், சசுடுதண்ணீர் நிரம்பிய பாத் டப், மின்சார போர்வை என போன்றவற்றையும் உங்களின்

விந்தணுக்களின் தரத்தையும், உற்பத்தியையும் பாதிக்கும். இது ஆண்களை பயமுறுத்துவதற்காக கூறுவது அல்ல அவர்களின்

ஆரோக்கியத்திற்காக கூறபடுவது.

ஏன் விந்தணுக்களின் தரம் முக்கியம்?

ஏன் விந்தணுக்களின் தரம் முக்கியம்?

விந்தணுக்களின் தரம் என்பது கருவுறுதலுக்கு மட்டும் முக்கியமல்ல ஆண்களின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. எனவே

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் மட்டுமில்லை அனைத்து ஆண்களுமே விந்தணுக்களின் தரத்தை உயர்த்துவதில்

அக்கறை செலுத்த வேண்டும்.

தரம் உயர்த்துவது எப்படி?

தரம் உயர்த்துவது எப்படி?

விந்தணுக்களின் தரத்தை உயர்த்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையே அடிப்படை வழியாகும். சத்தான உணவு, போதுமான

அளவு உடற்பயிற்சி, எடை குறைத்தல், குறைவான மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம், மனஅழுத்தத்தை குறைத்தல் என பல

வழிகள் இருக்கிறது. முக்கியமாக உங்கள் உள்ளடையை தளர்வாக அணியபழகுங்கள். அதனை செய்யாமல் நீங்கள் வேறு எதனை

செய்தாலும் " விழலுக்கு இரைத்த நீர் போல் " வீண்தான்.

இரவு நேரத்தில் உள்ளாடை அணியலாமா?

இரவு நேரத்தில் உள்ளாடை அணியலாமா?

தளர்வான உள்ளாடைகளோ அல்லது இறுக்கமான உள்ளாடைகளோ இரண்டுமே உங்கள் பிறப்புறுப்பின் மீது ஒருவித அழுத்தத்தை

ஏற்படுத்தக்கூடும். அழுத்தம் அதிகமோ, குறைவோ நிச்சயம் அவை பாதிப்பை உண்டாக்கக்கூடியதுதான். எனவே முடிந்தவரை இரவு

தூங்கும்போது உள்ளாடை அணிவதை தவிர்த்து விடுங்கள். அதேபோல ஜீன்ஸ் அணிந்துகொண்டு உறங்குவதையும் தவிர்த்து

விடுங்கள். இரவு நேர தளர்வான ஆடை உங்கள் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

boxers or briefs which is good for sperm health

Men who reported wearing boxers more frequently had a higher sperm concentration, higher sperm count and higher motile count, than the men who wear tight briefs.
Desktop Bottom Promotion