For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன செஞ்சாலும் கொலஸ்ட்ரால் குறையவே மாட்டீங்குதா? இதப் படிங்க!

|

நம் அன்றாட சமையலில் பயன்படுத்தக்கூடிய ஒன்றி பச்சைப் பயிறு. அதனை பல பெயர்களில் வழங்குகிறார்கள். இதனை முதலில் உருவாக்கியவர்கள் ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த பச்சைப்பயிறு இந்தியாவில் பிரபலமாவதற்கு முன்பாகவே வெளிநாடுகளில் அதனை அழகிற்காக பயன்படுத்த துவங்கிவிட்டனர். அந்த அளவிற்கு இந்த பயிறு உடல் நலத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் பயன்படுகிறது. இந்த பச்சைப் பயிறு பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கே பட்டியலிட்டிருக்கிறோம் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெட்டபாலிக் :

மெட்டபாலிக் :

நம் உடலின் சீரான இயக்கத்திற்கு மெட்டபாலிசம் அவசியம். அவை சரியாக இல்லையென்று சொன்னால் உங்களுடைய செரிமானம் முதலில் தடை விழும். அதோடு உடலில் இருக்கக்கூடிய அமிலத்தன்மை அதிகரிக்கும்.

இந்த பச்சைப் பயிறில் நிறைய ஃபைபர் இருக்கிறது. இதனை நீங்கள் சேர்த்துக் கொள்வதால் உங்களுடைய செரிமானம் துரிதமாக நடைபெறும்

கொலஸ்ட்ரால் :

கொலஸ்ட்ரால் :

இன்றைய நவீனப் பிரச்சனையாக கொலஸ்ட்ரால், ஒபீசிட்டி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. நாளடைவில் அதுவே சர்க்கரை நோய், இதய நோய் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. பச்சைப் பயிறு நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது அது செரிமானத்தை வேகமாக செய்வதால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தவிர்க்கப்படுகிறது. இதைத் தவிர உடலில் இருக்கிற கெட்டக் கொழுப்பினை கரைக்கவும் இது மிகவும் உதவுகிறது.

காய்ச்சல் :

காய்ச்சல் :

காய்ச்சல் வயிற்று வலி ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் போது எந்த உணவையும் சாப்பிடப் பிடிக்காது. அதோடு சோர்வும் அதிகரிக்கும். இவற்றை சரி செய்ய நீங்கள் செய்ய வேண்டியது. பச்சைப் பயிறை எடுத்துக் கொள்ளுங்கள்.

பச்சைப் பயிறு எளிதாக செரிக்கும் அதோடு அவை எனர்ஜியையும் கொடுக்கும். வழக்கமாக கஞ்சியை சாப்பிடுவதற்கு பதிலாக பச்சைப் பயிறு வேக வைத்து சாப்பிடலாம்.

எலும்புகளுக்கு :

எலும்புகளுக்கு :

நம்முடைய எலும்புகளுக்கும் பற்களுக்கும் அவசியமானது கால்சியம். இந்த பச்சைப் பயிற்சில் கால்சியம் அதிகமாகவே இருக்கிறது. அதைத் தவிர இதில் சோடியமும் அதிகம். சோடியம். நம்முடைய பற்கள் மற்றும் ஈறு ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. பல் வலி, வாய் துர்நாற்றம்,ஆகியவை இருந்தால் பச்சைப் பயிறு உங்களுக்குப் பயன்படும்.

ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டியது அவசியம். அவை குறைந்தாலும் பிரச்சனை தான் அதிகரித்தாலும் பிரச்சனை தான். ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் பச்சை பயிறு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் மக்னீசியம் இருக்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க மக்னீசியம் உதவிடுகிறது.

நினைவுத் திறன் :

நினைவுத் திறன் :

பச்சைப் பயிறு மாணவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுவதற்கு இது தான் முக்கிய காரணம். பச்சைப் பயிறு நம்முடைய கூர்ந்து கவனிக்கும் திறனை அதிகப்படுத்தும்.

இதில் இரும்புச் சத்து அதிகம். அதனை சாப்பிடுவதால் ரத்தத்தில் ஆகிஸ்ஜனை அதிகப்படுத்தவும் அதனை உடலின் பிற பாகங்களுக்கு கொண்டு செல்லவும் உதவிடுகிறது. இது உங்களுடைய நினைவுத் திறனையும் அதிகரிக்கும்.

கல்லீரல் :

கல்லீரல் :

பச்சைப் பயிறில் ப்ரோட்டீன் இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்வதினால் கல்லீரலுக்கு நன்மை கிடைக்கும். ப்லிருபின் மற்றும் பிலிவெர்டின் ஆகியவை சுரக்க இது உதவுவதினால் கல்லீரல் பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.

ரத்த உறைவு :

ரத்த உறைவு :

உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று ரத்த ஓட்டம். அதே நரத்தில் எங்கேனும் காயமேற்பட்டு ரத்தம் வந்தால் அது உடனடியாக உறைந்திட வேண்டும். இல்லையென்றால் அது உயிரை எடுத்திடும் பெரிய பிரச்சனையாக கூட மாறிடும்.

அதனை தவிர்க்கவும் நீங்கள் பச்சைப் பயிறு சாப்பிடலாம். இதிலிருக்கக்கூடிய விட்டமின் கே ரத்த உறைவினை கட்டுப்படுத்துகிறது.

சர்க்கரை :

சர்க்கரை :

உடலுக்கு நன்மை கொடுக்கிற சர்க்கரை தீமை ஏற்படுத்துகிற சர்க்கரை என இரண்டு வகைகள் இருக்கின்றன. நன்மை கொடுக்கிற சர்க்கரை எளிதாக செரித்து விடும். அது எந்த தீங்கையும் நம் உடலுக்கு ஏற்படுத்தாது. அதோடு இந்த சர்க்கை உங்கள் ரத்ததில் கலந்திடாது அதனால் சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் இதனை தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்ந்து இதனை எடுத்துக் கொள்வதினால் உடலில் நன்மை தரக்கூடிய சர்க்கரை உருவாக்க வைத்திடும்.மேலும் இதில் விட்டமின் ஏ மற்றும் சி இருக்கிறது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

ஆண்ட்டி ஏஜிங் :

ஆண்ட்டி ஏஜிங் :

இந்த பச்சைப் பயிறில் ஏரளமான ஆண்ட்டி ஏஜிங் துகள்கள் இருக்கிறது. இதில் நிறைந்து காணப்படுகிற காப்பார் தான் இதனுடைய பலமே. இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் சரும சுருக்கங்கள் இன்றி தப்பிக்கலாம். அதைத் தவிர சருமத்தில் ஏற்படுகிற கரும்புள்ளிகள், அடையாளங்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.

ஃபேஸ் பேக் :

ஃபேஸ் பேக் :

இதனை நீங்கள் ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம். பச்சைப் பயிறை வெறும் சட்டியில் வறுத்து அரைத்துக் கொள்ளுங்கள், நல்ல பவுடராகவும் வரை அரைக்க வேண்டும். பின்னர் உங்களுக்கு தேவையான அளவு மாவு தனியாக எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் சற்று வெது வெதுப்பான நீரைக் கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

சுமார் பத்து நிமிடங்கள் கழித்து அதனை கழுவிடலாம்.

தலைமுடி :

தலைமுடி :

தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு காப்பர் மிகவும் அவசியம்.முடியின் வேர்கால்களுக்கு வலுவூட்ட காப்பர் அவசியம். காப்பர் இருந்தால் மட்டுமே நம் உணவிலிருந்து கிடைக்ககூடிய இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை தலைமுடிக்குப் போய்ச் சேரும்.

அதனால் காப்பர் அதிகமிருக்கக்கூடிய பச்சைப் பயிறு நீங்கள் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.

முடி வறட்சி :

முடி வறட்சி :

இன்றைக்கு பலருக்கும் முக்கியமான பிரச்சனையாக இருப்பது முடியில் அதீத வறட்சி ஏற்படுவது. வறண்ட முடியிருந்தால் அது சீக்கிரம் உதிரத் துவங்கிடும். அதனை தவிர்க்க வேண்டுமானால் முடியை வறட்சியின்றி நாம் பாதுகாக்க வேண்டும்.

அதற்கும் இந்த பச்சைப் பயிறு பயன்படுகிறது. பச்சைப் பயிறு மாவுடன், க்ரீன் டீ, பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன், தயிர் ஒரு ஸ்பூன் எல்லா சேர்த்து ஹேர் பேக் போட்டுக் கொள்ளுங்கள். இது முடிக்கு ஈரப்பதத்தை கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Control Cholesterol Using Mung Beans

Tips To Control Cholesterol Using Mung Beans
Story first published: Wednesday, May 16, 2018, 15:46 [IST]
Desktop Bottom Promotion