For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே!பீர் குடித்ததால் வந்த தொப்பையை குறைக்க ஈஸி வழி! !

பீர் குடிப்பதினால் உண்டாகும் தொப்பையை குறைக்க சில ஈஸி டிப்ஸ்

|

இன்றைக்கு மொடா குடிகாரார்களை விட சோசியல் டிரிங்கர் என்று சொல்லிக் கொண்டு வார இறுதி நாட்களில் பார்ட்டி கொண்டாடும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. டிரிங்க்ஸ் எல்லாம் எப்பையாவது... அதுவும் பீர் மட்டும் தான் என்று தப்பித்துக் கொள்ளும் ஆண்மகன்கள் எல்லாம் சிக்குவது எந்த இடம் தெரியுமா?

தொப்பை. ஆம், பீர் குடித்ததினால் உண்டாகிற தொப்பை தனியாக தெரியும் அளவிற்கு இருக்கிறது, பீர் குடித்தால் தொப்பை உண்டாகிறது சரி. அதை எப்படி தீர்ப்பது மீண்டும் பழைய உடலமைப்பை கொண்டு வர முடியாதா என்று கவலைப்படும் ஆண்களுக்காக இந்த கட்டுரை .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீர் :

பீர் :

பொதுவாக எல்லாரிடமும் இந்த எண்ணம் இருக்கிறது, மிக அதிகமாக, வயிறு முட்ட சாப்பிட்டால் தான் தொப்பை ஏற்படும் என்று, அதே போலத் தான், நிறைய பீர் குடித்தால் தான் தொப்பை வரும், வெறும் இரண்டு அல்லது குறைவான பெக் அடித்தால் தொப்பை எல்லாம் ஏற்படாது என்று சொல்லி சொல்லியே பானை வயிற்றை கொண்டிருப்பார்கள்.

தொப்பை :

தொப்பை :

பீர் என்றல்ல அதிக கலோரி கொண்டுள்ள எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் தொப்பை ஏற்படுவது நிச்சயம். உங்கள் உடலுக்கு போதுமான கலோரியைத் தாண்டி அடுத்து நீங்கள் சாப்பிடுகிற ஒவ்வொன்றும் கொழுப்பாகவே உங்கள் உடல் எடுத்துக் கொள்ளும், முதலில் அது சேமிக்கும் இடம் வயிறு அதனால் தன தொப்பை அதிகரிக்கிறது.

மது :

மது :

பொதுவாக மது வகைகளில் பிற உணவு வகைகளை விட அளவுக்கு அதிகமான கலோரி இருக்கும். தொடர்ந்து அதை குடிப்பதனால் உங்களது உணவுப்பழக்கம் முதலில் மாறும், அதனால் உடல் இயக்கத்திற்கு போதுமான சத்துக்கள் கிடைக்காது, கிடைத்ததையெல்லாம் எடுத்து சாப்பிட ஆரம்பிப்பீர்கள், தேவையான நியூட்ரிசியன்கள் இல்லாது கொழுப்பு மட்டுமே இருப்பதால் எப்போதும் சோர்வாக உணர்வீர்கள்.

அதை சரி செய்கிறேன் என்று சொல்லி நீங்கள் கூடுதலாக எடுக்கும் ஒவ்வொரு உணவும், தொப்பைக்கு தான் வழி வகை செய்யும்.

வயது :

வயது :

பெண்களுக்கு உடலின் பிற பாகங்களில் கொழுப்பை சேமிக்கும் அதே நேரத்தில் ஆண்களுக்கு வயிற்று பகுதி தான் முதன்மையான இடமாக இருக்கிறது. அதனால் பீர் குடிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே தொப்பை எட்டிப் பார்க்கிறது.

அதோடு வயது ஏற ஏற.... ஜீரண சக்தி குறைந்திடும், தொடர்ந்து ஒரேயிடத்தில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் உண்டாகும் இதுவும் தொப்பை அதிகரிக்க ஓர் காரணியாக பார்க்கப்படுகிறது.

இது நல்லது? :

இது நல்லது? :

தொப்பை இருந்தாலும், இது தொப்பையினால் வந்தது தான்.... அதனால் தான் எந்த ஆபத்தும் இல்லை.... பீர் குடிப்பதை நிறுத்தி விட்டால் தொப்பை மறைந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் பீர் குடித்து உண்டாகும் தொப்பையினாலும் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏன் உயிருக்கே கூட ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புண்டு.

என்ன பிரச்சனைகள் :

என்ன பிரச்சனைகள் :

அது எந்த வகையால் உருவான தொப்பை என்பது இங்கே பிரச்சனை என்பதைத் தாண்டி, தொப்பை என்பதே உடல் நலனுக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தொப்பை அதிகமாக அல்லது பெரிதாக இருப்பவர்களுக்கு, அவர்களின் இடுப்பின் சுற்றளவு பெரிதாகும். இவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புள்ளது, ரத்த அழுத்தம் தாறுமாறாக இருக்கும், இதன் விளைவாக இதயம் தொடர்பான பிரச்சனைகள், பக்கவாதம் ஆகியவை ஏற்படக்கூடும்.

இடுப்புச் சுற்றளவு பெண்களுக்கு 35 இன்ச்சும் ஆண்களுக்கு 40 இன்ச்சும் இருக்கலாம்.

தவிர்க்க :

தவிர்க்க :

வழக்கமாக நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல பீர் குடிப்பதை நிறுத்தி விட்டால் தொப்பை தானாக மறைந்து விடும் என்று நீங்கள் நினைப்பது மிகவும் தவறானது. தொப்பையை மட்டும் குறைக்க என்று சொல்லி எந்த ஒரு குறிப்பிட்ட பயிற்சியோ அல்லது உணவோ இல்லை.

உங்களது ஒட்டுமொத்த வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியது அவசியம்.

எனர்ஜி :

எனர்ஜி :

இன்னொரு மிக முக்கியமான வேலை உங்கள் உடலில் எனர்ஜி பேலன்ஸ் செய்வது, குறைவான கலோரிகளை எடுத்து அதிகப்படியான கலோரியை எரிக்க வேண்டும். அதற்கான ஓர் வழி தான் டயட் மற்றும் உடற்பயிற்சி.

கலோரி குறைவான உணவுகளை எடுத்துக் கொள்வது, தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்வது ஆகியவை உங்கள் உடலில் அதிகப்படியாக இருக்கும் கொழுப்பை கரைக்க உதவிடும்.

குறைக்க :

குறைக்க :

தொப்பையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்ட பிறகு எந்த வகை மதுவையும் நினைத்துக் கூட பார்க்க வேண்டும், குறிப்பாக இன்னக்கி ஒரு நாள் மட்டும், பீர் மட்டும் என்று சொல்லி எதுவும் எடுக்கக்கூடாது.

பீருடன் ஒப்பிடுகையில் வைனில் குறைந்த கலோரி தான் இருக்கிறது.

உணவு :

உணவு :

உங்களது உடல் நலனுக்கு ஏற்ப, தேவைப்படுகிற சத்துக்கள் என்னென்ன என்று மருத்துவரிடம் ஆலோசித்து, உங்களுக்கான டயட் ஒன்றினை பின்பற்றிடுங்கள். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஸ்நாக்ஸ் என்ற பெயரில் எடுத்துக் கொள்ளக்கூடிய எண்ணெயில் பொறித்த உணவுகளை அறவே தவிர்த்திடுங்கள்.

காபி டீ :

காபி டீ :

நீங்கள் குடிக்கிற மது வகைகள் மட்டுமல்ல அன்றாடம் குடிக்கக்கூடிய பல பானங்களிலும் அதிகப்படியான கலோரியிருக்கிறது அதனால் அதிலும் விழிப்புடன் செயல்பட்டு தவிர்ப்பது நல்லது.

காபி,டீ ஆகியவற்றில் அதிகப்படியான கலோரி இருக்கிறது அதனை தவிர்க்க வேண்டியது அவசியம்.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

தொப்பையை குறைக்க பெரும்பாலானோர் க்ரன்சஸ் எனப்படக்கூடிய ஒரு வகை பயிற்சியை மேற்கொள்கிறார்கள். இது உங்களது வயிற்றின் தசையை வலுப்படுத்த பயன்படுமே தவிர தொப்பையை குறைக்க பயன்படாது.

க்ரன்சஸ் தெரியாமல் செய்தாலோ அல்லது அதிக முறை தவறான பொசிசனில் செய்தாலோ பின் இடுப்பு வலியெடுக்கும்.

ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.ப்ரோடீன் உணவை செரிக்க அதிக கார்போஹைட்ரேட் தேவைப்படும், இதன் போது குறைவான கார்போ எடுக்கும் பட்சத்தில் உடலில் இருக்கும் கொழுப்பு கரைய ஆரம்பிக்கும்.

இதனால் தொப்பையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் ப்ரோட்டீன் டயட் பின்பற்ற வலியுறுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Reduce Beer Belly

Tips To Reduce Beer Belly
Story first published: Wednesday, March 7, 2018, 18:01 [IST]
Desktop Bottom Promotion