For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்!

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னால் இதனை தெரிந்து கொள்ளுங்கள்.

|

நம் மனித உடலில் எண்ணற்ற தசை,தமனி,நரம்புகள் எலும்புகள் கொண்டு தான் இயங்குகிறது. இவற்றில் ஏதேனும் சிறு பாதிப்பு ஏற்பட்டால் கூட உங்களுக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கிடும்.

இந்நிலையில், முதியவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்சனையாக இருந்த மூட்டு வலி இன்று இளைஞர்களை தாக்கும் ஓர் நோயாக மாறிவிட்டிருக்கிறது.

Things You Should know Before Knee Replacement Surgery

மூட்டு வலியினால் பெரும் அவதிக்குள்ளான நபர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிரந்தர தீர்வாக அமையம் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் அவை தீர்வளிக்கிறதா என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடக்க முடியாத நிலை :

நடக்க முடியாத நிலை :

முழங்காலில் உள்ள மூட்டு, இரண்டு பக்க எலும்புகளுக்கு இடையே பந்துபோல உருண்டுகொண்டு இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இரு எலும்புகளுக்கும் இடையே உள்ள சவ்வு சேதம் அடைவதால், மூட்டு இயங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இது வலி, வீக்கத்தில் தொடங்கிக் கடைசியில் நடக்க முடியாத நிலையை உருவாக்கிவிடுகிறது.

காரணம் :

காரணம் :

மூட்டு எலும்பு இணைப்பைச் சுற்றி உள்ள ஜவ்வு முற்றிலும் தேய்ந்த பிறகு, அந்தக் கிண்ணம் போன்ற அமைப்பில் இருந்து எலும்பு வெளியே வர ஆரம்பிக்கும். இதனால், மாடிப்படிகளில் ஏறினாலோ, உட்கார்ந்து எழுந்தாலோ, வலி அதிக​மாக இருக்கும்.உடல் பருமன், வயது அதிகரிப்பது, அடிபடுதல், காயம், மூட்டுச் சவ்வு கிழிதல், யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகி மூட்டுகளில் படிவது, பாக்டீரியா கிருமித்தொற்று, ருமாட்டிக் நோய், காசநோய் போன்றவை முழங்கால் மூட்டுவலிக்குப் பொதுவான காரணங்கள்.

பொதுவாக கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டால், கட்டுப் போடு​கிறோம், அதனால் அசைவு இருக்காது. ஆனால், முட்டியில் அசைவு இருந்துகொண்டே இருப்பதால், கட்டுப் போட முடியாது.

வேலை செய்தால் வலி அதிகம் :

வேலை செய்தால் வலி அதிகம் :

சில நேரங்களில் சத்தம் உண்டாகும். காலை வேளையில் மூட்டு இறுக்கம் வரும், இது 30 நிமிடம்வரை காணப்படும். செயல்பாடுகள் தொடங்கத் தொடங்க இது சற்றே மாறும். வேலை செய்தால் வலி காணப்படும், ஓய்வெடுத்தால் வலி குறையும். நோய் முற்றிவிட்டால் ஓய்வெடுத்தாலும் வலி இருக்கும்.

முக்கியமான மூட்டு :

முக்கியமான மூட்டு :

மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியதுதான் என்றாலும், முழங்கால் மூட்டில் ஏற்படுகிற வலியைத்தான் ‘மூட்டுவலி' என்று பொதுவாகச் சொல்கிறோம்.

தொடை எலும்பின் கீழ்ப்பகுதியும் முழங்கால் எலும்பின் மேல் பகுதியும் இணைகின்ற இடமே முழங்கால் மூட்டு இது உடல் எடையைத் தாங்குகின்ற முக்கியமான மூட்டு.

முழங்கால் மூட்டைத் தொட்டுப் பார்த்தால், நம் கைக்குத் தட்டுப்படுவது முழங்கால் மூட்டுச் சில்லு (Knee cap). முழங்கால் மூட்டுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இயற்கை நமக்குக் கொடுத்திருக்கிற பாதுகாப்பு மூடி இது. இதற்குப் பின்னால் உள்ளதுதான் உண்மையான முழங்கால் மூட்டு.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை :

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை :

மூட்டில் தேய்மானம் மிக அதிகமாக இருந்தால், மூட்டுவலிக்கு முழுமையான தீர்வு தருவது, ‘செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை' ‘மூட்டு மாற்றம்' என்றதும் முழங்கால் மூட்டு மொத்தத்தையும் அப்படியே எடுத்துவிட்டு, உலோக மூட்டை அங்கு பொருத்தி விடுவதாக அர்த்தம் செய்துகொள்ளக்கூடாது.

மூட்டில் குருத்தெலும்பு உள்ள மேல்தளத்தை மட்டுமே இதில் மாற்றுகிறார்கள். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னதாக நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

#1

#1

இந்த மூட்டு வலி உங்களது அன்றாட வாழ்க்கையையே சீர்குலைப்பதாக இருக்கிறதா? சரியாக நடக்க முடியுமால், உட்கார முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? மிக முக்கியமாக வலியினால் உங்களது தூக்கம் கெடுகிறதா என்று பாருங்கள்.

#2

#2

மூட்டுப்பகுதி வீங்கியிருப்பதோ அல்லது ஸ்டிஃப்ஃபாக இருக்கிறதா என்று பாருங்கள். அதோடு வீக்கமோ மூட்டினை அசைக்கும் போது சத்தம் வருகிறதா என்று பாருங்கள்.

ஆரம்ப நிலையில் சில எளிய உடற்பயிற்சிகளை செய்வது, பிஸியோதெரபி பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதையும் தாண்டி உங்களுக்கு வலி அதிகரித்தால் மட்டும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு செல்லலாம்.

மெட்டல் :

மெட்டல் :

உலோகமும் பாலிஎதிலீனும் கலந்து தயாரிக்கப்படுகிற செயற்கை மூட்டைப் தான் உங்களுக்கு பொருத்துவார்கள். தேய்ந்த எலும்பின் அடி பாகத்தை மட்டும் எடுத்துவிட்டு புதிய இணைப்பு போடப்படும். இரு எலும்புகளும் சேரும் இடத்தில் மெட்டல் வைத்து, சவ்வுக்கு பதிலாக ஒரு வகையான பிளாஸ்டிக் வைப்பது பழைய தொழில்நுட்பம்.

புது வரவு :

புது வரவு :

தற்போது மூட்டு மாற்று சிகிச்சையில் புது வரவாக ஆக்ஸீனியம் எனும் மெட்டல்ப யன்படுத்தப்படுகிறது. முதல் நிலையில், மெட்டலில் உராய்வுகளும் கீறல்களும் உண்டாகும் ஆனால் இவற்றில் அது நடக்காது.

அதனால் இது நிண்ட காலங்களுக்கு பயன் தரும்.

முற்றிலும் தவிர்க்க :

முற்றிலும் தவிர்க்க :

மூட்டு தேய்மானத்தை நம்மால் முற்றிலும் தடுக்க முடியாது. ஆனால் மூட்டு தேய்மானம் ஆவதை சில காலங்கள் தவிர்க்கலாம். ளம் வயதிலிருந்தே புரதச் சத்து நிறைந்த பால், பால் பொருட்கள், பருப்பு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடர் பச்சைநிறக் காய்கறிகள், கீரைகளைச் சாப்பிட வேண்டும். தினமும் சிறிது நேரம் உடலில் சூரிய ஒளி படும்படி நிற்க வேண்டும். சூரிய ஒளி படுவதன் மூலம் வைட்டமின் டி கிடைக்கும். இது எலும்புக்கு பலம் தரக்கூடியது.

இளமையிலிருந்தே :

இளமையிலிருந்தே :

சிறு வயதிலிருந்தே நடைப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மூட்டுத் திசுக்கள் பலம் பெறும். மூட்டுத் தேய்மானம் ஆவது தள்ளிப்போகும். நடக்கும்போது நம் உடல் எடையைப்போல இரண்டு மடங்கு எடையை கால் மூட்டு தாங்குகிறது.

உடல் எடை அதிகரித்தால், மூட்டுக்கு அதிகப்படியான வேலை உண்டாகிறது. இதனால் மூட்டு சீக்கிரமே தேய்ந்துவிடுகிறது. எனவே, எடை சரியாக இருந்தால் மட்டுமே மூட்டுவலியைத் தவிர்க்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Should know Before Knee Replacement Surgery

Things You Should know Before Knee Replacement Surgery
Story first published: Wednesday, January 10, 2018, 9:42 [IST]
Desktop Bottom Promotion