For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொழுப்பு அதிகரிப்பது மட்டுமே மாரடைப்பிற்கு காரணமா?

கொழுப்பினைப்பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை.

|

உணவு விஷயத்தில் நமக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துவது கொழுப்பு தான், பிற உணவுகளைப் பற்றி யோசிக்கிறோமோ இல்லையோ கொழுப்பு நிறைந்த உணவுகள் என்றால் இப்போதெல்லாம் ரொம்பவே யோசிக்க ஆரம்பித்துவிட்டோம்.

கொழுப்பு நிறைந்த உணவுகளை நாம் எடுக்கவே கூடாதா? அப்படி எடுக்கவில்லை என்றால் என்னாகும்? உண்மையில் கொழுப்பு நமக்கு தேவைதானா ஆனால் அவை தான் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறதே.... இன்னும் இது போன்ற சந்தேகங்கள் நம் மனதில் இருந்து கொண்டேயிருக்கிறது அல்லவா? அதற்காகத்தன இந்தக்கட்டுரை. உண்மையில் கொழுப்பு ஏன் தேவை, கொழுப்பினை ஏன் முற்றிலுமாக தவிர்க்க முடியவில்லை என்பதற்கான அடிப்படைக்காரணங்கள் என்ன என்பதை இதனைப் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயற்கை உணவுகள் :

இயற்கை உணவுகள் :

இயற்கையாகவே கிடைக்கக்கூடிய சில உணவுகளில் குறிப்பிட்ட அளவு கொழுப்புச் சத்து இருக்கும். நம் மட்டுமல்ல செடிகள் மற்றும் விலங்குகளுக்கும் கொழுப்பு தேவைப்படும், அவை தான் எனர்ஜியை சேமித்து வைக்கக்கூடிய ஓர் இடமாக இருக்கிறது. அவற்றின் வளர்ச்சிக்கு, அவற்றின் செயல்பாடுகளுக்கு எல்லாம் இந்த கொழுப்பு தான் ஆதாரம்.

அதே போலத்தான் மனிதர்களுக்கும். அடிப்படையாக சில கொழுப்பு நமக்கு தேவை தான், ஆனால் அவை அளவுக்கு மீறி நம் உடலில் சேமிக்கப்படும் போது தான் பிரச்சனை உருவெடுக்கிறது.

எனர்ஜி :

எனர்ஜி :

நமக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும் முக்கிய பணியை கொழுப்பு செய்கிறது, உடலில் உள்ளே இருக்கக்கூடிய உறுப்புகள் இயங்குவதற்கும்,நாம் சுறுசுறுப்பாக செயல்படவும் இந்த எனர்ஜி மிகவும் அவசியமான ஒன்றாகும்.

கொழுப்பு செல்கள் :

கொழுப்பு செல்கள் :

நாம் சாப்பிடுகிற உணவில் அனைத்திலும் குறிப்பிட்ட அளவு கலோரி இருக்கக்கூடும். உதாரணத்திற்கு ஒரு பழத்தை இப்போது சாப்பிடுகிறீர்கள் என்றால் பழத்திலிருந்து கிடைக்கக்கூடிய பிற நியூட்ரிசியன்கள் மற்றும் சத்துக்களுடன் சேர்ந்து குறிப்பிட்ட அளவு கலோரியும் சேரும்.

நம் உடலுக்கு தேவையான அளவின விட அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுகிற கலோரிகள் கொழுப்பாக மாறுகிறது. இவற்றை அடிப்போஸ் திசுக்கள் எனப்படுகிற கொழுப்பு செல்கள் தன்னுள் சேமித்து வைத்துக் கொள்கிறது.

ஃபேட்டி ஆசிட் :

ஃபேட்டி ஆசிட் :

சில வகை அமிலங்கள் நம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கு மிகவும் அவசியமாகப்படுகிறது, ஆனால் அதனை உடலே உற்பத்தி செய்து கொள்ளாத சூழலில் வெளியில் நாம் சாப்பிடுகிற உணவு மூலமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

இதைத் தவிர உடலில் இருக்கக்கூடிய செல்களின் துரித வளர்ச்சிக்கு கொழுப்புச் சத்து அவசியமானதாகும்.

 நரம்புகளுக்கு :

நரம்புகளுக்கு :

நரம்புகளைச்சுற்றி மெய்லின் எனப்படுகிற ஒரு திசு பாதுகாப்பு அரணாக இருக்கும். இது ஒரு வகை கொழுப்பினால் உருவானது. நரம்புகளில் ஏற்படுகிற மாற்றங்கள், சின்ன சின்ன மிகவும் நுணுக்கமான அசைவுகளை கூட அடையாளம் கண்டு மூளைக்கு தகவல் அனுப்புவதில் முக்கியப்பங்காற்றுகிறது மெய்லின்.

சருமத்திற்கு :

சருமத்திற்கு :

ஆரோக்கியமான சருமம் வேண்டுமென்றால் வெளியில் தெரிகிற சருமத்தை மட்டும் பராமரித்தால் போதாது, உடலுக்கு உள்ளேயும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். செல்களின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய செல் மெம்ப்ரைன்களுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியமானது.

அவை இருந்தால் தான் செல்கள் ஆரோக்கியமாக இருக்கும், உள்ளேயிருக்கும் செல்கள் ஆரோக்கியமாக இருந்தால் நம் சருமம் பொலிவுடன் இருந்திடும்.

சத்துக்கள் :

சத்துக்கள் :

நம் சாப்பிடுகிற உணவிலிருந்து கிடைக்கக்கூடிய பெரும்பாலான சத்துக்கள் தண்ணீரில் கரைந்திடக்கூடிய சத்தாகவே இருக்கிறது. அதனால் சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டாலும் அவை, நம் உடலில் சேராமல் இருக்கிறது.

விட்டமின் ஏ, டி, இ மற்றும் கே ஆகியவற்றை ரத்த நாளங்கள் வழியாக உடல் முழுவதற்கும் கொண்டு சேர்ப்பதில் கொழுப்பு முக்கியப் பணியாற்றுகிறது.

ஸ்டிராய்டு ஹார்மோன் :

ஸ்டிராய்டு ஹார்மோன் :

பெயரைப் பார்த்ததும் ஏதோ போதை மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் என்று நினைத்து விடாதீர்கள். வெளியில் நாம் செய்கிற செயல்கள், சாப்பிடுவது, நிற்பது,நடப்பது, ஓடுவது, பேசுவது,சிரிப்பது,போன்றவை மட்டுமே நாம் செய்கிறோம் நம்முடைய உடல் செய்கிறது என்று நினைத்துவிடாதீர்கள்.

தொடர்ந்து 24 மணி நேரமும் ஒருத் துளி இடைவேளி விடாமல் நமது உடல் இயங்கிக் கொண்டேயிருக்கிறது, அப்படியான தொடர் இயக்கத்திற்கு தேவைப்படுகிற எனர்ஜி மற்றும் உடலாகவே மேற்கொள்ள வேண்டிய சில இயக்கங்களுக்கு கொழுப்பு அவசியமான ஒன்றாகும். இதனை செய்ய தூண்டுவது தான் ஹார்மோன்கள்.

 மூன்று பங்கு :

மூன்று பங்கு :

நாம் சாப்பிடும் உணவுகள் எல்லாம் பெரும்பாலும் ட்ரைக்ளைசிரைட்ஸ் வகை கொழுப்பு தான் இருக்கும். இவை மூன்று வகை ஃபேட்டி அமிலத்தை க்ளைசிரால் என்ற மூலக்கூறுடன் இருக்கும், நம் உடலுக்கு அவசியமான சாச்சுரேட்டட் கொழுப்பு பெரும்பாலும் விலங்குகளிடமிருந்து கிடைக்கக்கூடிய பொருட்களில் தான் அதிகமிருக்கும்.

ஏன் விலங்குகளில் ? :

ஏன் விலங்குகளில் ? :

விலங்குகள் தங்கள் உடலை அதிகப்படியான ஸ்டிஃப்னஸ்வுடன் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதனால் சாச்சுரேட்டட் கொழுப்பு அதற்கு அவசியமாகும். மீன், செடிகள் அதிகம் நெகிழ்வுத்தன்மையுடன் தான் இருக்கும் அதனால் அவற்றின் உடலில் நல்ல கொழுப்பான சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகளவு இருக்காது.

பாலி அன் சாச்சுரேட் :

பாலி அன் சாச்சுரேட் :

இந்த வகை கொழுப்பானது பெரும்பாலும் நட்ஸ், விதைகள், கடல் உணவுகள்,காய்கறிகளில் இருக்கும். இயற்கையாக கிடைக்கும் உணவுகளில் இருக்கும் கொழுப்புகளுடன் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் விட்டமின்ஸ் சேர்ந்திருக்கும்.

இந்த பாலியன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இரண்டு வகைகள் இருக்கின்றன. அவை ஃபேட்டி ஆசிட், மற்றும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6.

ட்ரான்ஸ் ஃபேட் :

ட்ரான்ஸ் ஃபேட் :

இந்த வகை கொழுப்பு இயற்கையாகவும் மற்றும் செயற்கையான உணவுகளிலும் கிடைக்கும். இவற்றின் அதிகபட்சமாக செயற்கையான உணவுகளிலிருந்து தான் அதிகம் கிடைத்திடும். துரித உணவுகள்,எண்ணெயில் பொறித்த உணவுகள், பாக்கெட்டி அடைக்கப்பட்ட உணவுகள், பிஸ்கட் போன்றவற்றில் எல்லாம் இந்த ட்ரான்ஸ் ஃபேட் அதிகமிருக்கும் .

கொலஸ்ட்ரால் :

கொலஸ்ட்ரால் :

கொலஸ்ட்ரால் என்று சொல்லும் போதே அவற்றை மாரடைப்புடன் தொடர்புபடுத்தி பார்க்கும் வழக்கம் இன்றைக்கு அதிகரித்து விட்டது. கொலஸ்ட்ரால் என்றாலே அது நம் இதயத்திற்கு எதிரி என்ற ரீதியில் தான் அணுகுகிறோம்.

ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது, நம் உடலுக்கு கொலஸ்ட்ராலும் மிகவும் அவசியமான ஒன்று.

அசைவ உணவுகள் :

அசைவ உணவுகள் :

அசைவ உணவுகளில் இருக்கக்கூடிய கொழுப்புகளில் குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ராலும் இருக்கும். பெரும்பாலும் நம் உடலுக்கு தேவைப்படுகிற கொலஸ்ராலை நம் உடலே தயாரித்துக் கொண்டு விடும், மிகவும் குறைந்த அளவிலான கொலஸ்ட்ரால் மட்டுமே உணவுகளிலிருந்து தேவைப்படும்.

சைவ உணவுகள் :

சைவ உணவுகள் :

அசைவ உணவுகளிலிருந்து மட்டுமே சாச்சுரேட்டட் ஃபேட் எனப்படுகிற நல்ல கொழுப்பு இருக்கும் எனும் பட்சத்தில் சைவ உணவுகளை எடுக்கவே தேவையில்லையா என்கிற கேள்வியெழுகிறது.

ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல, சைவ உணவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய கொழுப்பும் நமக்கு அவசியம். பெரும்பாலும் இதனை நம் உடல் கிரகித்துக் கொள்ளாது.

கொழுப்பு அளவீடு :

கொழுப்பு அளவீடு :

நம் உடலில் குறிப்பாக ரத்தத்தில் கலந்திருக்கும் கொழுப்பினை மூன்று வகைகளாக பிரிக்கிறார்கள்.

1.ஹை டென்சிட்டி லிப்போ ப்ரோட்டீன்ஸ்(HDL)

2.லோ டென்சிட்டி லிப்போ ப்ரோட்டீன்ஸ் (LDL)

3. வெரி லோ டென்சிட்டி லிப்போ ப்ரோட்டீன்ஸ் (VLDL)

இந்த லிப்போ ப்ரோட்டீன்ஸ் என்பது கொழுப்பும் ப்ரோட்டீனும் இணைந்த கலவையாக இருக்கும். இவை தான் கொலஸ்ட்ராலை ரத்த நாளங்களில் கொண்டு போக உதவிடுகிறது.

கொழுப்பு அதிகரித்தால் :

கொழுப்பு அதிகரித்தால் :

நம் உடலுக்கு தேவையானதை விட அதிகமாக கொழுப்பு இருக்கிறது என்றால், இந்த எல் டி எல் மற்றும் வி எல் டி எல் ஆகியவை தான் கொலஸ்ட்ராலை ரத்த நாளங்களில் படியச் செய்கிறது. இதனால் தான் சில நேரங்களில் அடைப்பு ஏற்படுகிறது.

ரத்தம் ஊடுருவிச் செல்ல முடியாத அளவிற்கு கொலஸ்ட்ரால் அடைத்துக் கொள்ளும் போது தான் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Remember About Fat

Things You Remember About Fat
Story first published: Monday, March 5, 2018, 11:45 [IST]
Desktop Bottom Promotion