For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதுகெலும்பின் பலத்தை இரட்டிப்பாக மாற்றும் உணவுகள்..! எவ்வளவு சாப்பிடணும்...?

|

நமது உடலில் இருக்க கூடிய முதன்மையான உறுப்புகளில் முதுகெலும்பும் ஒன்று. முதுகெலும்பு பாதிக்கப்பட்டால் நமது உடலில் உயிர் இருந்தும் இறந்ததற்கு சமமாகும். இன்றும் மருத்துவமனையில் பலர் முதுகு தண்டில் ஏற்பட்ட சிறிய நரம்பு பாதிப்பால் கோமா நிலையில் உள்ளனர்.

முதுகெலும்பின் பலத்தை இரட்டிப்பாக மாற்றும் உணவுகள்..! எவ்வளவு சாப்பிடணும்..?

எனவே, முதுகெலும்பின் ஆரோக்கியம் மிக முக்கியமானதாகும். முதுகெலும்பை எவ்வாறு பாதுகாப்பது என்பதற்கான விடையே இந்த பதிவு. முதுகெலும்பை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் உணவுகள் என்னென்ன என்பதையும் இதில் அறிந்து கொண்டு, நீண்ட நாட்கள் நோய்கள் இன்றி வாழ்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முக்கிய உறுப்பு...

முக்கிய உறுப்பு...

மற்ற முதன்மையான உறுப்புகளை போன்றே இந்த முதுகெலும்பையும் நாம் பாதுகாக்க வேண்டும். இதில் சிறிய பாதிப்பு ஏற்பட்டால் கூட நாம் அவ்வளவுதான். மேலும், பலர் சத்தற்ற உணவுகளை சாப்பிடுவதால் முதுகு வலியால் துடிக்கின்றனர். இந்த நிலையை நம்மால் எளிதில் மாற்றி விட முடியும்.

எது முதலில் தேவைப்படுகிறது..?

எது முதலில் தேவைப்படுகிறது..?

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தான் முதுகெலும்பை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது. இந்த வகையான ஊட்டச்சத்துக்களில் முதல் இடத்தில் இருப்பது கால்சியம் தான். எனவே, முதுகெலும்பை எளிதில் நாம் பாதுகாக்க கால்சியம் நிறைந்த உணவுகள், காய்கனிகளை சாப்பிட்டாலே போதும்.

தாவர புரதங்கள்...

தாவர புரதங்கள்...

நம் சாப்பிட கூடிய உணவுகளில் அதிக புரதச்சத்துக்கள் கொண்ட உணவை சேர்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக பருப்பு வகைகள், நட்ஸ்கள், ஆகியவற்றை நிறைய சாப்பிட வேண்டும். ஏனெனில், இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் முக்கிய தாதுக்கள் முதுகெலும்பை நலமாக வைத்து கொள்ளும்.

மீன் வகைகள்

மீன் வகைகள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். இவை மீன்களில் பெரிதும் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக சால்மன், கடல் பாசிகள் போன்றவற்றில் உள்ளது. எனவே, உணவில் மீன்களை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

MOST READ: இதையெல்லாம் செய்தால் உடல் எடை நிச்சயம் குறையாது..? அது என்னென்னனு தெரிஞ்சிக்கோங்க...

மூலிகை டீ

மூலிகை டீ

மூலிகை டீ உங்களின் எலும்புகளுக்கு இரட்டிப்பான பலத்தை தரும். எனவே, கிரீன் டீ, ஊலங் டீ ஆகியவற்றை தினமும் குடித்து வந்தாலே முது வலிகள், தண்டுவட வலிகள் ஆகியவை குணமாகும். மேலும், இந்த டீயை குடிப்பதால் உங்களின் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

இந்திய மசாலாக்கள்...

இந்திய மசாலாக்கள்...

நமது இந்திய நாட்டிற்கென்றே பெருமை பெற்ற மசாலா பொருட்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். குறிப்பாக மஞ்சள், இலவங்கம், இஞ்சி, ஓரிகானோ போன்ற மசாலா பொருட்கள் நமது முதுகெலும்பின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும், இவை சிதைவடைந்த திசுக்களையும் சரி செய்ய பயன்படும்.

எண்ணெய்யில் கவனம்..!

எண்ணெய்யில் கவனம்..!

முதுகெலும்பு பலமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் கொண்ட எண்ணெய்யை உணவில் சேர்த்து கொள்ளவும். ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் இந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே, இது போன்ற எண்ணெய்யில் உணவை சமைத்து சாப்பிடலாம்.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி

முதுகெலும்பை அதிக பாதுகாப்புடன் கவனித்து கொள்ளும் உணவுகளில் இந்த ப்ரோகோலியும் அடங்கும். முதுகு தண்டை வலுவாகவும், வீக்கம் ஏற்படாதவரும் இவை பார்த்து கொள்ளும். மேலும், முது வலி உள்ளவரக்ளுக்கும் இதுசிறந்த உணவாகும்.

MOST READ: பொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்ங்க..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க..

சீரான ரத்த ஓட்டமில்லையா...?

சீரான ரத்த ஓட்டமில்லையா...?

உடலில் எல்லா வகையான உறுப்புகளுக்கும் ரத்தம் இன்றியமையாததாகும். முதுகெலும்பு பகுதி பாதிப்படைவதற்கு அந்த இடத்தில் இரத்த ஓட்டம் சீராக இல்லாததும் காரணமே. எனவே, கேரட், குடை மிளகாய் ஆகிய உணவை சாப்பிட்டு வந்தால் முதுகெலும்பு பகுதியில் சீரான ரத்த ஓட்டம் ஏற்படும்.

முளைக்கீரை

முளைக்கீரை

பொதுவாக கீரை வகைகளை நாம் இப்போதெல்லாம் தவிர்த்து வருகின்றோம். ஆனால், இது முற்றிலும் தவறான ஒன்றாகும். எனவே, முளைக்கீரை, காலே போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அப்போதுதான், அவை முதுகெலும்பில் ஏற்பட கூடிய வீக்கத்தை குறைத்து பலமாக வைத்து கொள்ளும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் குடிக்காமல், கால்சியம் நிறைந்த உணவுகளை தவிர்ப்பவர்களுக்கு இந்த முதுகெலும்பு பிரச்சினை அதிகரிக்க கூடும். ஜீஸ், பால், யோகர்ட் ஆகியவற்றில் அதிக கால்சியம் நிறைந்துள்ளது. எனவே, இவற்றை சரியான அளவில் உண்ணுங்கள்.

மேற் சொன்ன உணவுகளை உண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள் நண்பர்களே...! இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் பிறருடன் பகிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Super Foods for Spinal Health

Most of us can cure or even avoid back pain and surgery by taking a few daily preventive foods.
Desktop Bottom Promotion