For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுத்தம், சுகாதாரம் என்ற பெயரில் பெண்ணுறுப்பில் செய்யக் கூடாத விஷயங்கள் - நிபுணர்கள்!

சுத்தம், சுகாதாரம் என்ற பெயரில் பெண்கள் பெண்குறியில் செய்யக் கூடாத விஷயங்கள் - நிபுணர்கள்!

By Staff
|

அழகு என்ற பெயரில் நாம் செய்யும் பல விஷயங்கள் அபாயமானதாக தான் முடிகின்றன. முக்கியமாக பெண்கள் பின்பற்றும் சில அழகியல் விஷயங்கள் அவர்களது ஆரோக்கியத்திற்கு எமனாக மாறிவிடுகிறது.

இன்று உலக அளவில் பெண்களை அச்சம் கொள்ள வைக்கும் நோய் மார்பக புற்றுநோய் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்தும் அழகு சாதான பொருட்களில் இருக்கும் முக்கிய கெமிக்கல்கள் தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Six things that should NEVER go near your vagina

அதே போல, அந்தரங்க பகுதிகளை சுத்தமாக, சுகாதாரமாக, அழகாக வைத்துக் கொள்ள பெண்கள் கடைப்பிடிக்கும் சில விஷயங்களும், பயன்படுத்தும் சில பொருட்களும் கூட அவர்களது ஆரோக்கியத்திள் எதிர்வினை தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

முக்கியமாக இவை எல்லாம் ஈஸ்ட் மற்றும் சிறுநீர் பாதை தொற்று அதிகரிக்க முக்கிய காரணிகளாக அமைகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுத்திகரிப்பு திரவங்கள் (Gel sanitisers)

சுத்திகரிப்பு திரவங்கள் (Gel sanitisers)

ஆய்வொன்றின் மூலமாக, யாரெல்லாம் சுத்திகரிப்பு திரவங்களை பயன்படுத்துகிறார்களோ, அவர்களிடம் ஈஸ்ட் தொற்று ஏற்படும் அபாயம் எட்டு மடங்கு அதிகமாக இருக்கிறது என்றும். பாக்டீரியல் இன்பெக்ஷன் ஏற்படும் அபாயம் இருபது மடங்கு இருக்கிறது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஃபெமினைன் வாஷஸ் (Feminine washes)

ஃபெமினைன் வாஷஸ் (Feminine washes)

ஃபெமினைன் வாஷஸ் என்ற பெயரில் விற்கப்படும் இந்த கழுவும் பொருட்களானது பிறப்புறுப்பில் தொற்று ஏற்படாமல் தடுக்கும் என கூறி விற்கப்படுகின்றன. ஆனால், இவற்றை பயன்படுத்துவதன் மூலமாக தான் மூன்று மடங்கு அதிகமாக பாக்டீரியல் தொற்று மற்றும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

துடைப்பான்கள் (Wipes)

துடைப்பான்கள் (Wipes)

துடைப்பான்கள் என்பது நாம் சாதாரணமாக கைத்துடைக்க பயன்படுத்தும் டிஷ்யூ போன்றது தான். ஆனால், இது குழந்தைகளுக்கு, அந்தரங்க பாகங்களில் பயன்படுத்த என தனித்தனி தன்மையில் கிடைக்கிறது.

பெண்கள் தங்கள் அந்தரங்க பாகங்களை துடைக்கவும் இப்படியான துடைப்பான்கள் பயன்படுத்துவது உண்டு. ஆனால், இவற்றால் தான் இரண்டு மடங்கு அதிகம் சிறுநீர் பாதை தொற்று அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மாய்ஸ்ச்சரைசர் (Moisturisers)

மாய்ஸ்ச்சரைசர் (Moisturisers)

மாய்ஸ்ச்சரைசர் சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் இருக்க பயன்படுத்த படுகிறது. இதனால் சரும வறட்சி, வறண்டு காணப்படுதல் போன்றவை இருக்காது, சரும எரிச்சல் உண்டாகாது என்று நம்பப்படுகிறது. இதேப போல பெண்குறி அந்தரங்க இடத்திலும் பயன்படுத்த மாய்ஸ்ச்சரைசர்கள் விற்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தவதால் 2.5 மடங்கு ஈஸ்ட் இன்பெக்ஷன் அதிகரிக்கிறதாம்.

பெண்ணுறுப்பு நாற்றம் நீக்கி

பெண்ணுறுப்பு நாற்றம் நீக்கி

Vaginal douches என்ற பெயரில் விற்கப்படும் இந்த பொருளானது பெண்ணுறுப்பில் ஏற்படும் நாற்றத்தை போக்க போன்படுத்தப்படுகிறது. இது பல கலவை கொண்ட நீர்ம பொருளாகும். ஆனால், ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகளின் முடிவுகளில் இதை பயன்படுத்துவதால் புற்றுநோய் அபாயம் தான் அதிகைக்கிறது என்று கூறியுள்ளனர். இதனால் பல அபாயமான ஆரோக்கிய பிரச்சனைகளும் உண்டாகின்றனவாம்.

நம் உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் பலவன நம் உடலுக்கு நன்மை ஏற்படுத்துபவையும் கூட. இதுப் போன்ற பொருட்கள் பயன்படுத்துவது கருப்பையில் கூட தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மயிர் நீக்கி பொருட்கள் (Hair Removal Products)

மயிர் நீக்கி பொருட்கள் (Hair Removal Products)

ஷேவிங், வாக்ஸிங் என பெண்ணுறுப்பு பகுதியில் எதை செய்வதும் அது ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்று கூறுகிறார்கள். மயிர்களை முற்றிலும் நீக்குவதால், மயிர்கால்கள் வழியாக நிறைய தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் சருமத்திற்கு ஊடுருவி தீயத் தாக்கங்களை உண்டாக்குகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே, இவற்றை எல்லாம் பெண்கள் தவிர்க்க வேண்டும். குறையாக அந்தரங்க பகுதியில் வளரும் முடிகளை ட்ரிம் செய்தால் மட்டும் போதுமானது என்று கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six things that should NEVER go near your vagina

YOUR vagina is self-cleaning and using these hygiene products increases your risk of infection.
Story first published: Saturday, April 21, 2018, 17:45 [IST]
Desktop Bottom Promotion