For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மாதிரியான வலி, எலும்பு புற்றுநோயாக கூட இருக்கலாம் தெரியுமா?

இங்கு எலும்பு புற்றுநோய் ஒருவருக்கு இருந்தால் தென்படும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

இதுவரை எத்தனையோ புற்றுநோய்களைப் பற்றி பார்த்திருப்போம். ஆனால் இன்று நாம் பார்க்கப் போவது எலும்புகளைத் தாக்கும் புற்றுநோய் குறித்து தான். எலும்பு புற்றுநோய் உடலின் எந்த பகுதியில் உள்ள எலும்புகளையும் தாக்கும். ஆனால் பெரும்பாலும் இடுப்பு எலும்பு அல்லது கை மற்றும் கால் எலும்பு பகுதியைத் தான் தாக்கும். எலும்பு புற்றுநோய் அரிதாக தாக்கும் ஒரு நோய். மற்ற வகை புற்றுநோயுடன் ஒப்பிடுகையில் இந்த நோயின் தாக்கத்தால் நிறைய பேர் பாதிக்கப்படவில்லை.

Signs and Symptoms of Bone Cancer

எலும்பு புற்றுநோய்களிலேயே வகைகள் உள்ளன. சில வகை எலும்பு புற்றுநோய்கள் குழந்தைகளையும், இன்னும் சில பெரியோர்களையும் தாக்கும். சரி, இப்போது எலும்பு புற்றுநோய்களின் வகைகள், அதன் அறிகுறிகள், தாக்குவதற்கான காரணங்கள் போன்றவற்றை விரிவாக காண்போம். அதைப் படித்து தெரிந்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலும்பு புற்றுநோயின் வகைகள்

எலும்பு புற்றுநோயின் வகைகள்

செல்களின் பிளவுகள் வைத்து எலும்பு புற்றுநோய் சில வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் சில வகையான எலும்பு புற்றுநோய்களாவன:

* காண்ட்ரோஸ்சார்கோமா

* எவிங் சார்கோமா

* ஆஸ்டியோசார்கோமா

ஆஸ்டியோசார்கோமா

ஆஸ்டியோசார்கோமா

ஆஸ்டியோசார்கோமா ஒரு பொதுவான எலும்பு புற்றுநோயாகும். இந்த வகையில் புற்றுநோய் செல்கள் எலும்புகளில் உருவாகும். இந்த வகையான எலும்பு புற்றுநோய் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் கால் அல்லது கை எலும்புகளில் தான் பெரும்பாலும் ஏற்படும். மிகவும் அரிய சூழலில், இந்த வகை எலும்பு புற்றுநோய், எலும்புகளின் வெளியே எழும்.

காண்ட்ரோசார்கோமா

காண்ட்ரோசார்கோமா

இது இரண்டாவது மிகவும் பொதுவான எலும்பு புற்றுநோய்களுள் ஒன்றாகும். இந்த வகை புற்றுநோயானது, குருத்தெலும்புகளில் புற்றுநோய் செல்களை உருவாக்கும். காண்ட்ரோசார்கோமா என்னும் புற்றுநோய் பொதுவாக நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்களின் இடுப்பு எலும்பு, கால் அல்லது கைகளைத் தாக்கும்.

எவிங் சார்கோமா

எவிங் சார்கோமா

எவிங் சார்கோமா என்னும் எலும்பு புற்றுநோய் பொதுவாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் இடுப்பு எலும்பு, கால் அல்லது கைகளில் உள்ள எலும்புகளைத் தாக்கும். எவிங் சார்கோமா வகை எலும்பு புற்றுநோய் குழந்தைகளைத் தாக்குவதால், பெரியோர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

எலும்பு புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள்!

எலும்பு புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள்!

எலும்பு புற்றுநோய் ஒருவருக்கு வருவதற்கான சரியாக காரணிகள் இன்னும் எதுவென்று கண்டுபிடிக்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட சில காரணிகள் எலும்பு புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பரம்பரை மரபணுக்கள்

பரம்பரை மரபணுக்கள்

ஒருவரது பரம்பரையில் யாருக்கேனும் எலும்பு புற்றுநோயின் தாக்கம் இருந்தால், அந்த பரம்பரையில் பிறந்தவர்களுக்கு எலும்பு புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புற்றுநோய்க்கான கதிரியக்க தெரபி

புற்றுநோய்க்கான கதிரியக்க தெரபி

ஏற்கனவே ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு கதிரியக்க சிகிச்சையின் மூலம் சிகிச்சை அளிக்கும் போது, அளவுக்கு அதிகமாக கதிரியக்கத்தின் தாக்கம் இருக்கும் போது, அவர்களுக்கு எதிர்காலத்தில் எலும்பு புற்றுநோயின் தாக்கத்திற்கான அபாயம் அதிகம் உள்ளது.

இப்போது எலும்பு புற்றுநோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று காண்போம்.

வலி

வலி

எலும்பு புற்றுநோய் இருந்தால் தென்படும் பொதுவான அறிகுறிகளுள் ஒன்று வலி. ஆரம்பத்தில் வலியானது தொடர்ச்சியாக இருக்காது. ஆனால் இரவு நேரத்தில் கடுமையான எலும்பு வலியை சந்திக்கக்கூடும் அல்லது எலும்புகளின் உதவியுடன் ஒரு வேலையை செய்யும் போது, அதாவது நடந்தால் கடுமையான கால் வலியை சந்திக்க நேரிடும். அதிலும் எலும்பு புற்றுநோய் தீவிரமாக இருந்தால், எந்நேரமும் வலியை மோசமாக சந்திக்க வேண்டியிருக்கும்.

வீக்கம்

வீக்கம்

கால் அல்லது கைகளில் வீக்கம் இருந்து, அவ்விடத்தில் ஒரு வாரத்திற்கு மேல் வலி இல்லாமல் இருந்தால், எலும்பு புற்றுநோய் இருப்பதற்கான அபாயம் அதிகம் உள்ளது. அதுவும கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகளில் புற்றுநோய் இருந்தால், தொண்டையின் பின்புறத்தில் கட்டிகள் உருவாகி, எந்த ஒரு உணவுப் பொருளையும் விழுங்குவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும் அல்லது மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்கக்கூடும்.

எலும்பு முறிவு

எலும்பு முறிவு

பொதுவாக எலும்புகள் அவ்வளவு எளிதில் முறிவடையாது. ஆனால் எலும்பு புற்றுநோய் இருந்தால், அது எலும்புகளை பலவீனமடையச் செய்து, எளிதில் எலும்பு முறிவு ஏற்படச் செய்யும். இதைக் கொண்டும் ஒருவருக்கு இருக்கும் எலும்பு புற்றுநோயைக் கண்டறியலாம்.

இதர அறிகுறிகள்

இதர அறிகுறிகள்

தண்டுவட எலும்புகளில் புற்றுநோய் இருந்தால், அது நரம்புகளில் அழுத்தத்தைக் கொடுத்து, அடிக்கடி கை அல்லது கால்களை மரத்துப் போகச் செய்யும். மேலும் புற்றுநோய் ஒருவருக்கு இருந்தாலே, அவர்களது உடல் எடை திடீரென்று குறைவதோடு, மிகுந்த களைப்பையும் உணரக்கூடும். பொதுவாக புற்றுநோய் ஒருவரது உடலில் இருந்தால், அதற்கு சரியாக சிகிச்சை அளிக்காமல் இருந்தால், அது உடலில் அப்படியே பரவும். அதுவும் புற்றுநோய் செல்கள் நுரையீரலில் பரவினால், சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்க வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs and Symptoms of Bone Cancer

Here are some of the signs and symptoms of bone cancer. Read on to know more...
Story first published: Saturday, April 28, 2018, 11:30 [IST]
Desktop Bottom Promotion