For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூக்க மாத்திரைகளின் பக்க விளைவுகள்

தூக்க மாத்திரைகள் உபயோகிப்பது இப்பொழுது சாதாரண ஒன்றாகிவிட்டது. தூக்கமாத்திரைகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இங்கே தூக்கமாத்திரையால் ஏற்படும் பல்வேறு பக்க விளைவுகள் என்னவென்பதை பார்க்கலாம்.

|

இன்றைய காலகட்டத்தில் தூக்கம் என்பது இளைஞர்களுக்கு அதிசய பொருள் போல தெரிகிறது. ஒரு காலத்தில் படுத்தவுடன் தூங்கியவர்கள் இப்பொழுது பணிச்சுமை, உணவுப்பழக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றால் இரவு முழுவதும் விழித்திருந்து விட்டு நள்ளிரவு தாண்டிதான் தூங்கவே தொடங்குகிறார்கள். நாளடைவில் இதுவே அவர்களின் வழக்கமாகவும் மாறிவிடுகிறது.

Worst side effects of sleeping pills

இந்த பழக்கத்தை அவர்களே மாற்றிக்கொள்ள நினைத்தாலும் உடல் ஒத்துழைக்காமல் போவதால் தூக்க மாத்திரை எடுத்துக்கொள்ள தொடங்குகிறார்கள். தூக்கமின்மையால் பல ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படுவதற்கு இது பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் அங்குதான் அவர்கள் தவறு செய்கிறார்கள். ஏனெனில் தூக்கமாத்திரைகளும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இங்கே தூக்கமாத்திரையால் ஏற்படும் பல்வேறு பக்க விளைவுகள் என்னவென்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்போது மருத்துவர் பரிந்துரைப்பார்?

எப்போது மருத்துவர் பரிந்துரைப்பார்?

பெரும்பாலும் மருத்துவர்கள் தூக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்க மாட்டார்கள். ஏனெனில் இதில் பல பக்கவிளைவுகள் உள்ளது என்பதை மருத்துவர்கள் நனவு அறிவார்கள். இன்சோமேனியா பாதிப்பு அதிகமாக இருக்கும்போது மட்டுமே மருத்துவர்கள் தூக்க மாத்திரையை பரிந்துரைப்பார்கள். அதுவும் தற்காலிக நிவாரணியாக மட்டும்தான் உபயோகிக்க அறிவுறுத்துவார்கள்.

பகல் தூக்கம்

பகல் தூக்கம்

தூக்க மாத்திரைகள் பகல் நேர தூக்கத்தை ஏற்படுத்த கூடியது. அதுமட்டுமின்றி உங்கள் மனநிலையில் குழப்பத்தையும் ஏற்படுத்தும். பணிகளில் கவனம் செலுத்துவது உங்களுக்கு சவாலாகவே மாறும். சிலர் தூக்க மாத்திரை எடுத்துக்கொண்ட அடுத்த நாள் மயங்கியே விழுவதாகவும் தெரிவித்துள்ளனர். வயதானவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் இந்த மருந்து உங்கள் உடலில் கரைய அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் காலையில் நீங்கள் எழுவது மிகவும் சிரமமான ஒன்று. எழும்போதே உங்களுக்கு மயக்கம் போன்ற உணர்வு ஏற்படும்.

பிரம்மைகள்

பிரம்மைகள்

ஜெல்ப்ளன், ஜோபிக்லோன், ஜால்பைடம் போன்ற மருந்துகள் இரண்டு அல்லது மூன்று வாரம் போன்ற குறுக்கிய காலத்திற்கு பரிந்துரைக்க படுவதாகும். இவை சிலருக்கு வித்தியாசமான பிரம்மைகளை ஏற்படுத்தும். இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பின் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படுவதாக இதனை உபயோகப்படுத்தியவர்கள் கூறுகிறார்கள்.

தூக்கத்தில் மூச்சுத்திணறல்

தூக்கத்தில் மூச்சுத்திணறல்

நீங்கள் ஏற்கனவே தூக்கத்தில் மூச்சுத்திணறிலினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால், தூக்க மாத்திரைகள் இந்த சிக்கலை மோசமாக்கும். தூக்கமாத்திரை உபயோகப்படுத்தி தூங்குவது உங்கள் சுவாசப்பாதையில் தடையை ஏற்படுத்தி உங்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம், இதனால் உங்கள் உடலில் உள்ள ஆக்சிஜனின் அளவு குறையும். இதனால் நிம்மதியற்ற தூக்கமே கிடைக்கும். பென்சோடைப்பின்ஸ் மற்றும் பார்பிடுரேட்ஸ் போன்ற மாத்திரைகளில் இந்த பிரச்சினை உள்ளது.

அடிமையாகுதல்

அடிமையாகுதல்

காலப்போக்கில் உங்கள் உடல் தூக்க மாத்திரைகளுக்கு பழகி விட்டதால் உங்கள் உடலுக்கு அதிக அளவு மருந்து தேவைப்படும். இந்த அளவு அதிகரிப்பது உங்களுக்கு அனைத்து பக்க விளைவுகளும் ஏற்பட வழிவகுக்கும். நாளடைவில் நீங்கள் அதற்கு அடிமைபோல மாறி அது இல்லாவிட்டால் தூங்க இயலாது என்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள். மாத்திரை சாப்பிட்டவுடன் வாந்தி, குமட்டல், வேர்வை போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அந்த மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை நிறுத்தவும்.

தலை மற்றும் முதுகுவலி

தலை மற்றும் முதுகுவலி

மேலோட்டினின் உள்ள தூக்க மாத்திரைகள் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இன்சோமேனியாவை குறைக்கிறது. இருந்தாலும் இது தலைவலி மற்றும் முதுகுவலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வலி நிவாரணிகளை பயன்படுத்துபவர்கள் தூக்க மாத்திரைகளை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இரண்டு மருந்துகளும் இணையும்போது அது உங்கள் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

டிமென்ஷியா

டிமென்ஷியா

பென்சோடைப்பின்ஸ் உள்ள தூக்க மாத்திரைகள் அல்சைமர் போன்ற டிமென்ஷியா நோயை ஏற்படுத்தக்கூடியது. இது போன்ற மருந்துகள் நீண்ட கால பயன்பாட்டிற்கு பரிந்துரைக்க படக்கூடாதென மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி மொன்று மாதங்களுக்கு மேல் பென்சோடைப்பின்ஸ், ஹிப்னோடிக்ஸ் போன்ற மருந்துகள் எடுத்துக்கொள்வது வயதானவர்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

புற்றுநோய்

புற்றுநோய்

தூக்க மாத்திரை நீண்ட காலம் எடுத்துக்கொள்வது புற்றுநோயை உண்டாக்கும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. இதிலுள்ள பல்வேறு வகையான சேர்மங்கள் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி நுரையீரல் புற்றுநோயை ஏற்படத்தலாம்.

கோமா

கோமா

ஒரே நேரத்தில் அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை எடுத்துக்கொள்வது கோமா அல்லது மரணத்தை கூட ஏற்படுத்தலாம். தூக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் உடலில் ஆக்சிஜன் அளவு குறையும் நிலை ஏற்படுகிறது. இதனால் கோமா நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஆஸ்துமா போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தூக்க மாத்திரைகளிடம் இருந்து தள்ளி இருப்பதே நல்லது.

இறப்பு அபாயம்

இறப்பு அபாயம்

அதிர்ச்சியூட்டும் விதத்தில், தூக்க சிக்கல்களுக்கு உதவ ஹிப்னாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வது உங்கள் இறப்பு அபாயத்தை உயர்த்தக்கூடும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அவை ஆண்டிஹிஸ்டமின்கள், பாட்யூட்டேட்ஸ், பென்சோடைசீபீன்கள் சோல்பிடிம், தமேசெபம், ஸலேப்ளோன் மற்றும் எஸோபிக்லோன் போன்றவை. இந்த மருந்துகளை வருடத்திற்கு 132க்கும் குறைவாக எடுத்துக்கொள்பவர்களுக்கு பாதிப்புகள் குறைவாய் இருக்கும். 132 அதிகமாக எடுத்துக்கொள்பவர்களின் இறப்பு விகிதம் இரட்டிப்பாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seious side effects of sleeping pills

Popping a sleeping pill seems easy enough if you're having trouble sleeping. Unfortunately, sleeping pills have many side effects that make them risky to take. You could end up experiencing daytime drowsiness, nightmares, hallucinations, or even headaches and aches and pains.
Story first published: Tuesday, August 21, 2018, 18:00 [IST]
Desktop Bottom Promotion