For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலிலிருந்து பிரியும் குசுவாசத்தை முற்றிலும் குணப்படுத்த உதவும் வழிமுறைகள்!

உடலில் தேவையற்ற, அதிகப்படியான காற்று சேரும் பொழுது, உடல் உறுப்புகள் தங்கள் செயல்பாடுகளை சீர் பிறழாது செய்ய, அதிகமான காற்றை வெளியேற்ற வேண்டி இருக்கிறது. அதற்கு வயிற்றில் சேர்ந்துள்ள அதிகப்படியான காற்றி

|

உடலில் தேவையற்ற, அதிகப்படியான காற்று சேரும் பொழுது, உடல் உறுப்புகள் தங்கள் செயல்பாடுகளை சீர் பிறழாது செய்ய, அதிகமான காற்றை வெளியேற்ற வேண்டி இருக்கிறது. அதற்கு வயிற்றில் சேர்ந்துள்ள அதிகப்படியான காற்றினை ஏப்பம் மற்றும் காற்றுப்பிரிப்பு அதாவது குசு என்ற முறைகளில் உடல் செயல்பாடே வெளியேற்றும். அப்படி காற்று பிரியும் பொழுது சத்தம் ஏதும் இன்றியும் அல்லது சாதத்துடனும் காற்று பிரியலாம். இந்த இரு வேறுபாட்டினையும், இதற்கான வீட்டு வைத்திய முறைகளையும் இந்த பதிப்பில் படித்தறிவோம்.

இந்த வேறுபாடு மோசமான மணம் ஏற்படுத்தும் மற்றும் மணமற்ற காற்று பிரிதல்களுடையே உள்ள வேறுபட்ட கருத்துக்களை எடுத்துரைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோசமான மணம் கொண்ட குசு

மோசமான மணம் கொண்ட குசு

மோசமான மணம் வீசும் குசு பொதுவாக சத்தமின்றி வெளிப்படுவதாக இருக்கிறது அல்லது நீர்க்குமிழிகள் வெடிப்பது போல் வெளிப்படும். இந்த குசுவாசம் குடலில் உள்ள உணவிலிருந்து உருவாகும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது; இந்த காற்று பிரிதலில் Indole - இண்டோல், Skatole - ஸ்கெடோல், Hydrogen sulfide (H2S) - ஹைட்ரஜன் சல்ஃபைட் போன்ற வாயுக்கள் கலந்திருக்கும். சில நேரங்களில் இந்த குசு சத்தத்துடன், நீர்குமிழிகள் வெடிப்புடன் - இரண்டும் கலந்த கலவையாக வெளிப்படலாம்.

மணமற்ற குசு

மணமற்ற குசு

இந்த வகை காற்று பிரிதல் பொதுவாக சத்தத்துடன் வெளிப்படுகிறது; இதில் 59% nitrogen - நைட்ரஜன், 29 % ஹைட்ரஜன் - hydrogen, 9 % கார்பன் ஆக்ஸைடு - carbon dioxide, 7 % மீத்தேன் - methane, 3 % ஆக்சிஜன் - oxygen போன்ற வாயுக்கள் கலந்துள்ளன. இந்த வாயுக்கள் உணவு உண்ணும் பொழுது வாயின் வழியாக உள்நுழையும் காற்று மூலமாக உருவாகி வெளியேறுபவையாக உள்ளன. இந்த பிரிதலில் உள்ள நைட்ரஜன் மற்றும் கார்பன் பின்புட்டத்தை அழுத்தி, உந்தித் தள்ளி வெளியேறுகின்றன; ஆகையால் இவை வெளியேறுகையில் மிகப்பெரிய சத்தம் ஏற்படுகிறது.

வைத்திய முறைகள்

வைத்திய முறைகள்

குசு அதிக முறை, மோசமான மணத்துடன் வெளிப்பட்டால், அது உடலின் ஆரோக்கியம் சீராக இல்லை; முக்கியமாக செரிமான உறுப்புகளின் செயல்பாடுகளில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது. எனவே, உடலில் இருந்து அதிகப்படியான குசுக்கள் மோசமான வாசத்துடன் வெளியேறினால், உடனடியாக உடலை, உடலின் ஆரோக்கியத்தை சீர் செய்ய வேண்டியது அவசியம்.

எனவே, இந்தக் குசுக்களை உடலில் இருந்து முற்றிலும் அகற்றும் வழிமுறைகளை குறித்து மேலும் படித்து அறியலாம்.

பெப்பர்மிண்ட்

பெப்பர்மிண்ட்

பெப்பர்மிண்ட் வகை புதினாவை உணவு உண்ட பின் உட்கொள்ளல் வேண்டும். சராசரியாக ஒரு மனிதன் 12 முறை உடலில் இருந்து காற்றைப் பிரிக்கிறான்; அதாவது குசு போடுகிறான். அந்த சமயத்தில், இம்மாதிரியான உடல் நிலை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு நன்கு முதல் ஐந்து முறை பெப்பர்மிண்டை உணவின் மூலமாக, பெப்பர்மிண்ட் கலந்த பானமாகவோ, இனிப்பாகவோ உட்கொள்ள வேண்டும். மருத்துவரிடம் உடல் நிலை குறித்து ஆலோசித்து, பெப்பர்மிண்ட் உட்கொள்வது உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தாது என அறிந்து இதை உட்கொள்ளல் வேண்டும். இது வாயுத்தொல்லையை உடனடியாக நீக்கி, வாயுத்தொல்லையில் இருந்து முற்றிலுமாக நிவாரணம் தரும்.

காற்றை குறை

காற்றை குறை

நம் தினசரி வாழ்க்கையில் மூச்சுவிடும் காற்றை தவிர மற்ற வகையில் காற்று உடலில் புகுவதை, உள்ளிழுக்கப் படுவதை தவிர்க்க வேண்டும். இதற்கு எந்நேரமும் எதையாவது அசைபோட்டுக் கொண்டு இருப்பது, பப்ளிகம் மெல்லுவது, மிட்டாயை வெகுநேரம் மென்று கொண்டிருப்பது போன்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும். உண்டு முடித்தவுடன் உடனடியாக உறங்காமல், படுக்கையில் வீழமால் 10-15 நிமிடங்கள் நடக்க வேண்டும். பற்களில் கிளிப் அல்லது செயற்கை பற்கள் பொருந்தியவர்கள் உடல் அதிகப்படியான காற்றை உள்ளிழுக்கிறது; இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து, சரியான ஃபிட்டான அளவுள்ள பல்செட்டுகளி, கிளிப்களை பயன்படுத்த வேண்டும்.

உணவு முறை

உணவு முறை

உட்கொள்ளும் உணவு அதீத மணம் கொண்டதாக இருந்தால், அது மோசமான மணம் கொண்ட குசுவாசத்தை ஏற்படுத்தி விடும். அதிலும் புரோக்கலி, பூண்டு போன்ற உணவுப் பொருட்கள் எளிதில் வாயுத்தொல்லையை உடலில் ஏற்படுத்தி விடும். முட்டைக்கோஸ், பீன்ஸ், கார்ன், சிட்ரஸ் பழங்கள், உருளை மற்றும் மேலும் பல உணவுப் பொருட்கள் குசுவாசத்தை ஏற்படுத்துகின்றன. இம்மாதிரியான உணவுப் பொருட்களை உட்கொள்வதை குறைத்து, தகுந்த உணவு முறையை பின்பற்றி இந்த குசுத் தொல்லையிலிருந்து விடுபட முயல வேண்டும்; இதுவும் ஒரு வகை கொடிய நோய் தான் என்பதை மறவாதீர்; இந்த நோயால் நீங்கள் மட்டும் அல்லாமல், உங்களைச் சுற்றியுள்ள மக்களும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர் என்ற தகவலையும் நினைவில் கொண்டு குசு அதாவது பாம் போடுங்கள் மற்றும் அதைக் குணப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.!

மேலும் படிக்க: நம் உடலிலிருந்து காற்று பிரியும் பொழுது "குசு வாசம்" ஏற்படுவதேன்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remedies to stop stinky, smelly fart and flatulence

Remedies to stop stinky and smelly fart and flatulence
Story first published: Wednesday, August 1, 2018, 16:45 [IST]
Desktop Bottom Promotion