For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன செஞ்சாலும் வெயிட் குறையவே மாட்டிங்குதா? அப்போ இது தான் காரணம்

உடல் எடை குறையவில்லை என்றால் நீங்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய உண்மைகள்

|

உடல் எடை குறைப்பதற்காக பயங்கர பிரயத்தனம் படுகிறவர்களா நீங்கள்? எத்தனையோ முறை முயன்றுவிட்டேன் ஆனாலும் ஒரு இன்ச் கூட குறையமாட்டேன் என்கிறது, தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன் ஆனாலும் குறையவில்லை இப்படி புலம்புபவர்களுக்காகவே இந்த கட்டுரை.

பிறர் செயல்முறைப்படுத்தி அவருக்கு நல்ல ரிசல்ட் கொடுத்தது உங்களுக்கு மட்டும் ஏன் கொடுக்கவில்லை என்று யோசித்திருக்கிறீர்களா? இதனை நாம் அன்றாடம் செய்து கொண்டிருப்போம் ஆனால் அவை தவறு என்பதை நாம் உணர்ந்திருக்கவே மாட்டோம் உடல் எடையை குறைப்பது என்பது மிக எளிதான வேலை கிடையாது. உடலும் மனமும் ஒரு சேர ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் எதிர்ப்பார்த்த பலன் கிடைத்திடும். எவ்வளவோ முயன்றும் உடல் எடை குறையாததற்கு என்னென்ன காரணங்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர் :

தண்ணீர் :

மிகவும் அடிப்படையான விஷயம் அதே நேரத்தில் முக்கியமானதும் கூட. நீங்கள் எடுத்துக் கொள்கிற தண்ணீரின் அளவு. உடலின் உள் உறுப்புகளின் செயல்பாடுகள், செரிமானம், எனர்ஜி ஆகிய பல விஷயங்களுக்கும் தண்ணீர் தான் அடிப்படையான ஓர் விஷயமாக இருக்கிறது. இதைத் தவிர உடல் எடை குறைப்பதிலும் தண்ணீரின் பங்கு அவசியமாகும். இவை பசியுணர்வு மட்டுப்படுத்தும். இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட மாட்டீர்கள்.

அதோடு உடலில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் கிட்னி மற்றும் கல்லீரல் செயல்பாடுகளை துரிதப்படுத்தும். ரத்த நாளங்களில் கொழுப்பு படியாமல் பாதுகாக்கும்.

ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் :

உடல் எடை குறைக்க நீங்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டியவை ப்ரோட்டீன். ப்ரோட்டின் கொழுப்பைக் கரைக்கவும் அதே நேரத்தில் தசைகளுக்கும் உதவிடுகிறது. டயட் என்ற பெயரில் ப்ரோட்டீன் உணவுகளை தவிர்த்தால் உங்களுக்கு உடல் எடை குறையாது.

அதனால் டயட் இருப்பதற்கு முன்னால் உங்களுடைய உடல்வாகுக்கு ஏற்படி உங்களுக்கு தேவைப்படுகிற சத்துக்கள் என்ன அவற்றை எப்படி பெறுவது என்பதை மருத்துவ ஆலோசனை மூலமாக தெரிந்து அதன் பிறகு டயட் இருப்பது தான் நல்லது.

வாழ்க்கை முறை :

வாழ்க்கை முறை :

இதுவும் முக்கியமான ஒன்று தான்.இன்றைக்கு பெரும்பாலானோர் ஒரேயிடத்தில் உட்கார்ந்து பணியாற்றும் வேலை தான் வாய்க்கிறது.பல மணி நேரங்கள் ஒரே பொசிசனில் உட்காருவதினால் அவர்களின் உடல் இயக்கமே முற்றிலுமாக மாறிடுகிறது. இவர்கள் மிகத் தெளிவாக டயட் இருப்பார்களே தவிர உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க மாட்டார்கள். இதனால் உடல் எடை குறையாமல் இருக்க வாய்ப்புண்டு.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

உடலுக்கு பயிற்சி மிகவும் அவசியமாகும். ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரம் வரையாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

முடியாத பட்சத்தில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் வாக்கிங் சென்று வாருங்கள். நீண்ட நேரம் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக ஒரேயிடத்தில் உட்கார்ந்திருப்பது போலத் தோன்றினால் உடனேயே எழுந்து சின்ன வாக் சென்று விட்டு வரலாம்.

இது உங்களுக்கு புத்துணர்சியை அளிக்கும் என்பதால் வேலையையும் மிக வேகமாக செய்வீர்கள்.

உணவு :

உணவு :

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டப் பிறகு உடல் எடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு உணவிலும் இருக்கக்கூடிய கலோரி அளவினைப் பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பசிக்காக, இன்னக்கி ஒரு நாள் மட்டும்,ஸ்நாக்ஸ்,வேற உணவு இல்ல என்று எந்த சாக்கு போக்கு சொல்லியும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டு விடாதீர்கள்.

கவனம் :

கவனம் :

உடற்பயிற்சி செய்கிறீர்கள், வாக்கிங் செல்கிறீர்கள் எனும் பட்சத்தில் நீங்கள் எடுத்துக் கொள்கிற நீராகங்களின் அளவையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமானாலோ அல்லது தேவைவையை விட குறைவாக எடுத்துக் கொண்டாலோ அது வயிற்றுப் பிரச்சனையை உருவாக்கும். தண்ணீரைத் தவிர இளநீர், மோர், பழச்சாறு,சூப் போன்ற நீராகரங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

பாட்டில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்திடுங்கள்.

 மன அழுத்தம் :

மன அழுத்தம் :

மன அழுத்தம் இல்லாத மனதிர்களே இல்லை என்றே சொல்லலாம். உங்களுடைய ஸ்ட்ரஸ் ஹார்மோன் அதிகமாக வேலை செய்வதினாலும் உடல் எடை காரணமே இல்லாமல் அதிகரிக்கலாம் அல்லது குறையாமல் இருக்கலாம்.

இதைத் தவிர மன அழுத்தம் இருக்கும் நபர்களுக்கு சாப்பிடும் உணவு அளவு தெரியாது.இதனால் அளவுக்கதிகமான உணவினை உட்கொள்வது தொடரும்.

கலோரி :

கலோரி :

பெரும்பாலும் செய்கிற தவறு இங்கே தான். ஒவ்வொரு உணவிலும் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதை அறியாமல் தொடர்ந்து அதிகப்படியான கலோரி இருக்கிற உணவுகளையே எடுத்துக் கொள்கிறார்கள். தொடர்ந்து அந்த கலோரிகளை எரிக்க போதிய உடற்பயிற்சி போன்றவை இல்லாததினால் உடல் எடை குறையாமல் இருக்கிறது.

எடை :

எடை :

உங்களுடைய தசைகளுக்கும் நீங்கள் வலுவூட்ட வேண்டும். தசைகள் தொங்கிப் போய் கிடக்கும் பட்சத்தில் அதனை தவிர்க்கவும் இந்த பயிற்சி உதவிடும். அதாவது நீங்கள் உங்களால் முடிந்தளவு வெயிட் தூக்க வேண்டும். உள்ளே கொழுப்பு குறைந்தாலும் வெளியில் நமக்குத் தெரியாது. உள்ளே குறைவதும் மிகக் குறைவான அளவு தான். இதனை தொடரும் பட்சத்தில் தான் உடல் எடை கனிசமாக குறையும்.

சர்க்கரை :

சர்க்கரை :

சர்க்கரை நிறைந்த பானங்கள் கண்டிப்பாக உடல் எடையை அதிகரிக்கும். அதிலிருந்தே உங்களுக்கு அதிகப்படியான கலோரி கிடைத்திடும். நீங்கள் தொடர்ந்து இரண்டு வேலை காபி, வெளியில் செல்லும் போதெல்லாம் டீ என்றால் உடல் எடை குறைக்க வேண்டும் என்ற கனவை மறந்திட வேண்டும்.

செயற்கை குளிர்பானங்கள் என்றில்லை. நீங்கள் குடிக்கிற ஆரோக்கியமான, சத்தான இயற்கை குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிற சர்க்கரை பிற உணவுப் பொருட்களில் சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரை பொருட்கள் எல்லாமே இதற்கு காரணம்.

 தூக்கம் :

தூக்கம் :

மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க தூக்கம் என்பது மிகவும் அவசியமாகும். அதிக வேலைப் பளு மற்றும் குறைவான தூக்கம் கூட உடல் எடை அதிகரிக்க ஓர் காரணமாக அமைந்திடும். போதிய தூக்கம் இல்லாததினால் மூளையின் செயல்பாடுகள் எல்லாம் மந்தமாக இருக்கும். துணிந்து எந்த விஷயத்தையும் முன்னெடுக்க மாட்டீர்கள்.

இவை எல்லாவற்றையும் விட இதனால் ஒபீசிட்டி பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புண்டு.

கார்போஹைட்ரேட் :

கார்போஹைட்ரேட் :

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற காரணம் மட்டுமல்ல உங்களுக்கு டைப் 2 டயாப்பட்டீஸ் இருக்கிறது அல்லது ப்ரீ டயப்பட்டீஸ் பிரச்சனை இருக்கிறது என்று சொன்னால் கார்போஹைட்ரேட் உணவினை குறைத்துக் கொள்வது அவசியமாகும்.

இவற்றின் அறிகுறியாக கூட உடல் எடை அதிகரிப்பு என்பது இருக்கலாம். தைராய்டு பாதிப்பு இருப்பவர்களுக்கு முக்கிய அறிகுறியே உடல் எடை அதிகரிப்பது தான்.

 உணவு இடைவேளை :

உணவு இடைவேளை :

இந்த புரளியை இன்னும் எவ்வளவு காலம் தான் நம்பிக் கொண்டிருப்போம் என்று தெரியவில்லை. குறைவான உணவை குறிப்பிட்ட நேர இடைவேளியில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி எடுப்பதினால் உணவு எளிதாக செரிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காது என்று சொல்வார்கள்.

ஒரு வேலை ரெகுலராக நீங்கள் சாப்பிடும் உணவை இரண்டு வேலையாக அல்லது மூன்று வேலையாக பிரித்து உண்பதினால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடப்போவதில்லை. முக்கியமாக கொழுப்பு கரையும் என்பதெல்லாம் பொய். அதே போல காலையும் இரவும் சாப்பிட மாட்டேன் மதியம் மட்டும் நன்றாக சாப்பிட்டுக் கொள்வேன் என்று சொல்வதும் முட்டாள்தனமானது. டயட் என்பதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

உண்மை :

உண்மை :

உடல் எடை குறைப்பது என்பது நீண்ட காலம் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு நடைமுறையாகும். உடனே நடந்திட வேண்டும், நினைத்த மாத்திரத்தில் ஐந்து கிலோ முதல் பத்து கிலோ அல்லது அதற்கும் மேலே குறைந்திட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது எப்போதும் ஏமற்றமாகவே இருக்கும்.

இதைத் தவிர நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயங்களை எல்லாம் எதிர்ப்பார்ப்புகளாக கொண்டிருக்கிறார்கள். திரையில் பார்க்கிற தங்களுடைய அபிமானிகளைப் போலவே தானும் மாற வேண்டும் என்று கனவு கொண்டிருக்கிறார்கள். இதுவும் தவறானது. ஒல்லியாக இருப்பது தான் ஆரோக்கியம் என்ற எண்ணத்தை நீங்கள் முதலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons For Not Losing Weight

Reasons For Not Losing Weight
Story first published: Thursday, May 3, 2018, 12:22 [IST]
Desktop Bottom Promotion