For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் சத்துக்கள் குறைய இதுவும் ஓர் காரணம்!

நம் உடலில் சத்துக்கள் குறைய இவை தான் காரணம்

|

நம் உடலின் இயக்கத்திற்கு அவசியமான பல சத்துக்கள் அவசியமாய் தேவைப்படுகிறது. இந்த சத்துக்கள் பெரும்பாலானவை நாம் எடுத்துக் கொள்கிற உணவின் வழியாக கிடைக்கிறது சிலவற்றை நம் உடல் தாமாகவே தயாரித்துக் கொள்ளும். கால்சியம்,பொட்டாசியம்,மக்னீசியம்,இரும்பு,ஜிங்க் மற்றும் மக்னீசியம் ஆகியவை மிக அடிப்படையான மினரல்ஸ்கள் ஆகும்.

இவை குறைந்தால் உடல் இயக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். உதாரணத்திற்கு உங்கள் உடலில் மக்னீசியம் குறைந்தால் மன அழுத்தம் ஏற்படும். இரும்புச் சத்து குறைந்தால் உங்கள் உடலின் ஹீமோக்ளோபின் அளவு குறையும் என்பதால் சோர்வாக உணர்வீர்கள். கால்சியம் சத்து குறைந்தால் பல் வலி, கை கால் வலி ஆகியவற்றை உணர்வீர்கள். உடலில் ஏற்பட்ட காயம் விரைவில் ஆற ஜிங்க் அவசியமாகும். இப்படி நம் உடலில் நடக்கிற ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு சத்து காரணமாக இருக்கிறது.

இது மிகவும் அத்தியாவசியமானது, இந்த சத்துக்கள் நிறைந்திருக்கும் உணவுகள், இந்த மினரல்ஸ் குறைந்துவிட்டதென்றால் அதன் அறிகுறி எப்படியிருக்கும் போன்ற பல கட்டுரைகளை படித்திருப்போம். அதற்கு இது முற்றிலும் வேறானது. மினரலஸ் குறைகிறது என்றால் அதற்கான காரணம் என்ன? எதனால் நம் உடலில் சத்து குறைகிறது என்பதைத் தான் இந்த கட்டுரை பேசப்போகிறது.

குறையும் வழியை குறைத்தாலும் அதுவும் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது தானே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விளைச்சல் :

விளைச்சல் :

விவசாயமே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நிலையில் இதுவும் ஓர் தவிர்க்க முடியாத காரணமாகத்தான் இருக்கிறது. விளையும் போதே சில சத்துக்கள் காய்கறிகளுக்கு கிடைக்கிறது. ஆனால் குறுகிய காலத்தில் கிடைக்க வேண்டும் என்று சொல்லி மருந்துகளை பயன்படுத்துவது, ஒரே இடத்தில் தொடர்ந்து ஒரே பொருளையே விளைவிப்பது ஆகிய காரணங்களால் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய சத்துக்கள் குறைகின்றன.

அதனை சாப்பிடும் நமக்கும் அதனால் எந்த பலனும் இருக்காது.

மருந்துகள் :

மருந்துகள் :

இப்போதெல்லாம் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு கூட உடனடியாக மாத்திரை சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து ஏன்டாசிட் மருந்துகளை எடுத்துக் கொள்பவராக இருந்தால் உங்கள் உடலில் அலுமினியம் ஹைட்ராக்சைடு அதிகரிக்கவும். இது நம் உடலில் கால்சியத்தை குறைக்கும்.

கருத்தடை மாத்திரை அடிக்கடி எடுத்துக் கொள்வீர்களானால் உங்களுக்கு மக்னீசியம் மற்றும் ஜிங்க் குறைந்திடும். இது போல நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளுக்கும் உங்கள் உடலிலிருந்து குறைகிற சத்துக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

அமிலம் :

அமிலம் :

நாம் சாப்பிடும் உணவை செரிக்கவைக்கவும், இன்ன பிற தேவைகளுக்காகவும் வயிற்றில் எப்போதும் அமிலம் இருக்கும். அந்த அமிலங்கள் சரியாக இருந்தால் மட்டுமே உணவுகளிலிருந்து சத்துக்கள் பிரித்தெடுக்க முடியும், அதோ அந்த சத்துக்களை உரிய இடத்திற்கு கொண்டு சேர்க்கும்.

இந்த அமிலம் குறைவாக இருந்தால் ஜீரணம் சரியாக நடக்காது. இதனால் சத்தான காய்கறி மற்றும் பழங்களை தேடித்தேடி சாப்பிட்டாலும் அவை பலன் தராது.

காபி :

காபி :

காபி,சோடா மற்றும் மது ஆகியவற்றை அடிக்கடி குடிப்பவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கும். தொடர்ந்து மது குடிப்பவர்களுக்கு மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் குறையும். சோடா, மற்றும் கேஃபைன் நிறைந்த பானங்களை குடிப்பவர்களுக்கு கால்சியம் குறைந்திடும்.

சர்க்கரை :

சர்க்கரை :

நம் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய சர்க்கரையின் அளவை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இது நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதுடன் பிற தொல்லைகளையும் ஏற்படுத்தும். சர்க்கரை ஜீரணமாவதற்கு அதிக சத்துக்கள் தேவைப்படும். அதோடு நம் உடலில் இருக்கக்கூடிய பொட்டாசியம், ஜிங்க், க்ரோமியம் ஆகியவற்றையும் குறைக்கும்.

ஹார்மோன் :

ஹார்மோன் :

அதிகளவு இன்ஸுலின் அல்லது ஈஸ்ட்ரோஜென் சுரப்பதற்கான மாத்திரைகள் அல்லது ஊசி தொடர்ந்து பயன்படுத்தினாலும் நம் உடலில் இருக்கும் மினரல்ஸ்கள் வெகுவாக குறைகின்றன. இவை நம் உடல் கால்சியம் உறிவதை தவிர்க்கச் செய்திடும். இதனால் நாம் கால்சியம் நிறைந்த உணவு எடுத்துக் கொண்டாலும் அதற்குரிய பலன் கிடைக்காது.

ஹைப்பர் தைராய்டு :

ஹைப்பர் தைராய்டு :

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்களுக்கும் கால்சியம் சத்து பிறரைவிட மிக வேகமாக குறையும்.அடிக்கடி சோர்ந்து உட்கார்ந்து விடுவர். அடிக்கடி கால் வலி இருந்து கொண்டேயிருக்கும்.

இவர்கள் கால்சியம் உணவுகளை சேர்த்துக் கொள்ளும் அதே நேரம் மக்னீசத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜங்க் ஃபுட் :

ஜங்க் ஃபுட் :

இன்றைக்கு நாகரிகம் என்ற பெயரில் நொறுக்குத்தீனிகள் உண்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே காய்கறிகளில் முன்பை விட குறைவான சத்துக்கள் தான் கிடைக்கிறது எனும் பட்சத்தில் அதையும் தவிர்ப்பதால் அதிகளவிலான சத்துக்கள் சேர்ந்திடாது.

கெமிக்கல்கள் :

கெமிக்கல்கள் :

இன்றைக்கு பெரும்பாலான பொருட்களில் கெமிக்கல்கள் நிறைந்திருக்கிறது. உணவுப்பொருளிலும் கூட கெமிக்கல் கலப்படங்கள் நிறைய வந்துவிட்டிருக்கிறது. இவை தவிர நாம் பயன்படுத்தும் பொருட்கள், ஆடைகள், க்ரீம் என நம் உடலோட தொடர்புடைய எல்லா பொருட்களிலும் கெமிக்கல்கள் நிறைந்தே இருக்கிறது.

இதுவும் நம் உடலில் மினரல்ஸ்களை குறைக்கக்கூடும்.

ரேடியேசன் :

ரேடியேசன் :

இன்றைய நவீனயுகத்தில் எலக்ட்ரோ மேக்னட்டிக் ரேடியேசன் தவிர்ப்பது என்பது முடியாத காரியம். இன்றைக்கு நாம் பயன்படுத்துகிற ஸ்மார்ட் போனில் இருந்து இந்த ரேடியேசன் அதிகளவு வெளியாகிறது. இதுவும் நம் உடலிலிருந்து பல்வேறு சத்துக்களை குறைக்கக்கூடும்.

தொடர்ந்து இந்த ரேடியசனைச் சுற்றியே இருப்பவர்களுக்கு சத்துக்களை கிரகித்துக் கொள்ளும் வேகம் கணிசமாக குறைந்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons for Mineral Deficiencies

Reasons for Mineral Deficiencies
Story first published: Thursday, April 19, 2018, 18:18 [IST]
Desktop Bottom Promotion