For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவில் அதிகமாக வேர்ப்பது உண்மையிலே பெரும் ஆபத்தா?... எப்படி அதை தடுக்கலாம்...

இரவில் வியர்த்தலால் தினமும் நிம்மதியாக தூங்க முடியாமல் போனால் என்ன நடக்கும். கண்டிப்பாக உங்கள் உடல் நலம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி விடும். இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க ஓரே வழி நாங்கள் கூறும் ச

By Suganthi Rajalingam
|

உங்களுக்கு தொடர்ச்சியாக இரவில் வேர்த்து விறுவிறுக்குதா? பயங்கரக் கனவுகளால் வேர்த்து விழிக்கிறீர்களா? ஆம் என்றால் இந்த பிரச்சினைகளால் உங்கள் தூக்கம் கண்டிப்பாக பாதியிலேயே கெட்டு போய்விடும் அல்லவா? இப்படி தினமும் நிம்மதியாக தூங்க முடியாமல் போனால் என்ன நடக்கும்.

how to cure night sweats naturally

கண்டிப்பாக உங்கள் உடல் நலம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி விடும். இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க ஓரே வழி நாங்கள் கூறும் சில இயற்கை வழிகளை பின்பற்றினாலே போதும் இனி இரவில் நீங்களும் நிம்மதியாக உறங்குவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரவில் வியர்த்தல்

இரவில் வியர்த்தல்

இது ஒரு சாதாரண உடல் நல அறிகுறியாகும். இந்த பிரச்சினையை ஆண் மற்றும் பெண் இருபாலரும் இரவில் சந்திக்கின்றனர்.

காரணங்கள்

பெண்களுக்கு இரவில் அடிக்கடி வியர்க்க காரணம் மாதவிடாய் சுழற்சி மற்றும் முன் மாதவிடாய் சுழற்சி போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள்

பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் இந்த பிரச்சினை ஏற்பட கீழ்க்கண்ட காரணங்கள் காரணமாக அமைகின்றன

மன அழுத்த மருந்துகள், டயாபெட்டீஸ் மருந்துகள் எடுப்பது இரவில் வியர்வை உண்டாக்கும்.

காய்ச்சல்

உடல் எடை குறைதல்

நோய் தொற்று :எய்ட்ஸ்

புற்று நோய், அனிஸ்சிட்டி, நோயெதிர்ப்பு சக்தி கோளாறுகள்

பொழுதுபோக்கு மருந்துகள்

இதனால், குளிர், காய்ச்சல், வறண்ட யோனி பகுதி, மன நிலை மாறுதல் ஆகியவை உண்டாகும்.

லாவண்டர் ஆயில்

லாவண்டர் ஆயில்

4 சொட்டுகள் லாவண்டர் ஆயிலை ஒரு பரப்பும் கருவியில் (ட்வியூசர்) எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியே அறை முழுவதும் லாவண்டர் மணத்தை பரப்ப வேண்டும்.

இதை தினமும் தூங்க போவதற்கு முன் ஒரு தடவை செய்தால் போதும்

வேலை செய்யும் விதம்

இந்த லாவண்டர் ஆயில் உங்கள் மன அழுத்தத்தை குறைத்து தூக்கத்தை கொடுக்கிறது. மேலும் அமைதியான சூழலை உருவாக்கி நிம்மதியான உறக்கத்தை கொடுத்து இரவில் வியர்த்தலை தடுக்கிறது. ஹார்மோன் சமநிலையை உருவாக்குகிறது.

க்ளாரி முனிவர் ஆயில்

க்ளாரி முனிவர் ஆயில்

3-4 சொட்டுகள் க்ளாரி முனிவர் ஆயில்

சுத்தமான நாப்கின்

பயன்படுத்தும் முறை

கொஞ்சம் இந்த எண்ணெய்யை உள்ளங்கைகளில் எடுத்து தேய்த்து கழுத்து மற்றும் பாதங்களில் தடவிக் கொள்ளவும்

மேலும் இந்த ஆயிலை நாப்கினில் ஊற்றி நறுமண டிஸ்யூ மாதிரி நுகரவும்

இதை தினமும் 1-2 முறை செய்யவும்

வேலை செய்யும் விதம்

இந்த ஆயில் மன அழுத்தத்தை போக்கி தசைகளை ரிலாக்ஸ் செய்து நிம்மதியான வியர்வை இல்லாத உறக்கத்தை கொடுக்கிறது.

இஞ்சி

இஞ்சி

தேவையான பொருட்கள்

1-3 அங்குலம் துருவிய இஞ்சி

1 கப் சூடான நீர்

தேன்

பயன்படுத்தும் முறை

2 அங்குல இஞ்சியை துருவி ஒரு கப் சூடான நீரில் சேர்க்கவும்

5-10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்

கொஞ்சம் அதனுடன் தேன் சேர்த்து குடித்தால் நிம்மதியான உறக்கம் வரும்.

இந்த டீயை தினமும் மூன்று தடவை குடித்தால் போதும்.

வேலை செய்யும் விதம்

இது ஒரு இயற்கை பைட்டோ ஈஸ்ட்ரோஜன் ஆகும். இது உங்கள் ஹார்மோனை சமநிலையாக்கி இரவில் வியர்த்தல், மன நிலை மாறுதல் போன்ற பிரச்சினைகளை தடுத்து நிம்மதியான உறக்கத்தை தருகிறது. மேலும் அழற்சி எதிர்ப்பு பொருளாகவும் செயல்படுகிறது.

மாதுளை பழ ஜூஸ்

மாதுளை பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்

1 கப் மாதுளை பழ ஜூஸ்

பயன்படுத்தும் முறை

1 கப் மாதுளை ஜூஸை தினமும் குடிக்க வேண்டும்

இதை தினமும் 1-2 தடவை குடித்து வர வேண்டும்

வேலை செய்யும் விதம்

இதில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பைட்டோ பினோல்ஸ், எலகிட்டானின்ஸ், ஆந்தோசைனின்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் ஹார்மோனை சமநிலையில் வைக்கின்றன. கரு வளத்தை மேம்படுத்தும் பொருட்கள், ஹார்மோன் சமநிலை பொருட்கள் இரவில் வியர்த்தலை எதிர்த்து போரிடுகிறது.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ்

1 கப் கற்றாழை ஜூஸை தினமும் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

வேலை செய்யும் விதம்

இதிலுள்ள பைட்டோ நியூட்ரியன்ஸ், பைட்டோ ஈஸ்ட்ரோஜன் மன அழுத்தத்தை குறைத்தல், ஹார்மோன் சமநிலை செய்தல் போன்றவற்றின் மூலம் நிம்மதியான உறக்கத்தை தருகிறது. அழற்சி எதிர்ப்பு பொருள் உங்கள் உடலில் உள்ள அழற்சியை போக்குகிறது.

பிளாக் கோஹோஷ்

பிளாக் கோஹோஷ்

காலையில் மற்றும் இரவில் 20 மில்லி கிராம் பிளாக் கோஹோஷ் மாத்திரைகளை எடுத்து வர வேண்டும்.

வேலை செய்யும் விதம்

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சினைகளை சரி செய்ய பயன்படும் இயற்கை மூலிகை மருந்தாகும். இதிலுள்ள பைட்டோ கெமிக்கல்கள் ஈஸ்ட்ரோஜன் செயல்பாட்டை சரி செய்தல், ஹார்மோன் சமநிலை செய்தல் போன்றவற்றின் மூலம் இரவில் வியர்வை இல்லாத ஆழ்ந்த உறக்கத்தை தருகிறது.

ஜின்ஸெங்

ஜின்ஸெங்

தேவையான பொருட்கள்

1-2 டீ ஸ்பூன் ஜின்ஸெங் டீ

1 கப் தண்ணீர்

தேன்

பயன்படுத்தும் முறை

1-2 டீ ஸ்பூன் ஜின்ஸெங் டீ தூளை ஒரு கப் நீரில் சேர்க்கவும்

நன்றாக கொதிக்க விடவும். 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வைக்கவும்

நன்றாக ஆறிய பிறகு அதனுடன் தேன் சேர்க்கவும்

உடனே இந்த டீயை பருகவும்

சில வாரங்களுக்கு தினமும் 2-3 தடவை இதை குடித்து வர வேண்டும்.

வேலை செய்யும் விதம்

ஜின்ஸெங் ஈஸ்ட்ரோஜெனிக் பண்புகளை தடுக்கிறது. மாதவிடாய் சுழற்சி யின் போது ஏற்படும் இரவில் வியர்த்தலை சரி செய்கிறது ஆனால் இதை அதிகமாக எடுத்தால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆளி விதைகள்

ஆளி விதைகள்

தேவையான பொருட்கள்.

1 டேபிள் ஸ்பூன் ஆளிவிதை பொடி

1 கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது பால்

தேன் (விருப்பத்திற்கிணங்க)

பயன்படுத்தும் முறை

1 டேபிள் ஸ்பூன் ஆளி விதை பவுடரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அல்லது பாலில் சேர்க்கவும்

நன்றாக கலந்து ஆறியபின் கொஞ்சம் தேன் சேர்க்கவும்

உடனே இதை பருகவும்

தினமும் ஒரு தடவை பயன்படுத்தவும்.

வேலை செய்யும் விதம்

இதில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, லிக்னன்ஸ் போன்றவை உள்ளன. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரவில் வியர்த்தல் மற்றும் உடல் சூடு போன்றவற்றை போக்குகிறது.

விட்டமின்கள்

விட்டமின்கள்

விட்டமின் ஈ மற்றும் பி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வியர்த்தல், உடல் சூடு போன்றவற்றை தடுக்கிறது. விட்டமின் பி பற்றாக்குறை இருந்தாலும் இரவில் வியர்த்தல் ஏற்படும். அதையும் சரி செய்கிறது.

உணவுகள்

கீரைகள், பருப்பு வகைகள், மீன், இறைச்சி, முட்டை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பாதாம், வெண்ணெய் போன்றவற்றில் விட்டமின்கள் அடங்கியுள்ளன. இதைத் தவிர மருத்துவரின் ஆலோசனை பேரில் விட்டமின் மாத்திரைகள் கூட எடுத்து கொள்ளலாம்.

ப்ரைம்ரோஸ் ஆயில்

ப்ரைம்ரோஸ் ஆயில்

தேவையான பொருட்கள்

500 மில்லி கிராம் இந்த மாத்திரையை தினமும் ஒரு நாளைக்கு 2-3 தடவை எடுத்து கொள்ளுங்கள்.

வேலை செய்யும் விதம்

பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும், உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருதல், இரவில் வியர்த்தலை தடுத்தல் போன்றவற்றிற்கு உதவுகிறது. ஈஸ்ட்ரோஜன் அளவை சமநிலையாக்குகிறது.

தடுக்கும் முறைகள்

தடுக்கும் முறைகள்

காஃபைன் அளவை குறைத்து கொள்ளுங்கள்

இரவில் இறுக்கமான ஆடைகளை தவிருங்கள்

இரவில் தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள். இது உடல் சூட்டை தணிக்க உதவும்.

குளிர்ந்த நீரில் கூட குளிக்கலாம். உடனடியாக சூடு குறையும்

காலையில் உடற்பயிற்சி செய்துதல் மன அழுத்தத்தை குறைக்கும்

மதுப்பழக்கத்தை தவிருங்கள்

புகைப் பிடித்தலை தவிருங்கள்

படுப்பதற்கு முன் பேன், குளிர் சாதனம் மூலம் அறையின் வெப்பநிலையை குறைத்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Night Sweats – Causes, Symptoms, And Home Remedies

we have unearthed some natural home remedies to combat night sweats condition. All you have to do is keep reading to find answers to all your questions essential oils, ginger tea, Ginseng tea, pomegranates juice, aloe vera juice these are used for treating night sweats.
Desktop Bottom Promotion