For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைப்பை உபயோகிக்கும் பெண்ணா நீங்கள்? எச்சரிக்கை

பெண்கள் அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆரோக்கியத்திற்கு கொடுப்பதில்லை. தங்கள் தினசரி வாழ்வில் தங்களுக்கே தெரியாமல் செய்யும் தவறுகளால் தங்களின் உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் இழந்து வ

|

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள் பணிக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். அலுவலக பணியையும் செய்து, வீட்டையும் கவனித்து கொள்வது மிகவும் கடினமானது. அதிக பணிச்சுமை பெண்களை தங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை இல்லாமல் செய்துவிடுகிறது. உங்களின் ஆரோக்கியம்தான் உங்கள் குடும்பத்தின் பலம் அதனை மறந்துவிடாதீர்கள்.

Health

இங்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று உடற்பயிற்சியை ஒதுக்குபுவர்களும், ஆரோக்கியத்திற்காக நண்பர்களின் அறிவுரையை கேட்டு தவறான உணவுமுறையை பின்பற்றுபவர்களுமே அதிகம். இவர்கள் மட்டுமின்றி பெரும்பாலான பெண்கள் தங்களுக்கே தெரியாமல் தங்களுடைய ஆரோக்கியத்தை தங்கள் தினசரி பழக்கவழக்கங்கள் மூலம் இழந்து கொண்டுவருகின்றனர். பெண்களுடைய எந்த பழக்கவழக்கங்கள் அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்று இங்கு பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்கமின்மை

தூக்கமின்மை

அலுவலக பணிக்கு செல்லும் பெண்கள் அவர்களின் உடலுக்கு தேவைப்படும் தூக்கத்தை விட குறைவாகவே தூங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஆண்களை விட பெண்களுக்கு தூக்கம் வருவதில் நிறைய பிரச்சினைகள் உள்ளது. அது மட்டுமின்றி பகலில் தூங்கிவிழுவதும் ஆண்களை விட பெண்களே அதிகம். இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருப்பது உங்களுக்கு பிடித்ததாய் கூட இருக்கலாம் ஆனால் போதிய தூக்கமின்மை பகல் முழுவதும் சோர்வு, தேவையற்ற எடை அதிகரிப்பு, பணிகளில் கவனக்குறைவு என பலவழிகளில் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே உடலுக்கு தேவையான அளவு ஓய்வு கொடுப்பதில் உறுதியாய் இருங்கள்.

உடற்பயிற்சி செய்யாமலிருத்தல்

உடற்பயிற்சி செய்யாமலிருத்தல்

பெரும்பாலும் பெண்கள் எளிதான உடற்பயிற்சிளையே செய்ய விரும்புவார்கள், வெகுசில பெண்கள் மட்டுமே கடினமான உடற்பயிற்சிகள் செய்வதில் ஆர்வம் செலுத்துவார்கள். அப்படி கடின உடற்பயிற்சி செய்யும் பெண்கள் மற்ற பெண்களைவிட தனித்துவமாய் இருப்பார்கள். உணவுமுறை, யோகா போன்றவற்றின் மூலம் உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்களே தவிர உடலை வலிமையாக்குவதில் கவனம் செலுத்துவதில்லை. கடின உடற்பயிற்சிகள் உங்கள் எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுவதோடு உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.

இதயத்தை பராமரிக்காமலிருத்தல்

இதயத்தை பராமரிக்காமலிருத்தல்

மாரடைப்பால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இருப்பினும் ஆண்கள் இதயத்தின் மீது செலுத்தும் அக்கறை அளவிற்கு பெண்கள் செலுத்துவதில்லை. உண்மையில் அவர்களுக்கு மாரடைப்பு பற்றிய அறிகுறிகளே முழுமையாக தெரிவதில்லை. எனவே உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும்போது அதனை அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள். மாரடைப்பு ஏற்பட ஒரு மாதத்திற்கு முன்னரே அதிகப்படியான சோர்வு, மார்பு தசைகளில் வலி, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால் பெண்கள் அதனை அலட்சியமாக கருதி தங்கள் வேலையில் மூழ்கிவிடுகிறார்கள். உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் அனைத்தையும் மறந்து உழைக்கலாம் ஆனால் மறந்துவிடாதீர்கள் உங்கள் ஆரோக்கியம்தான் நீங்கள் உழைக்க அடிப்படை. உடலில் சிறிதேனும் மாற்றம் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

மது அருந்துதல்

மது அருந்துதல்

இப்போது சில பெண்களிடையே காணப்படும் பழக்கம் மது அருந்துவது. மதுஅருந்தும் பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவே என்றாலும் அவர்களும் சேர்ந்ததுதான் நமது சமூகம். ஆண்களை காட்டிலும் பெண்களிடையே மதுவானது மோசமாக செயல்படக்கூடியது. பெண்களின் உடலமைப்பும், அவர்கள் உடலில் உள்ள நீரின் குறைவான அளவும் பெண்கள் மது அருந்தும்போது அவர்களின் ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிக்கிறது. எனவே முடிந்தளவு மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

கைப்பை உபயோகித்தல்

கைப்பை உபயோகித்தல்

பெண்களின் அடையாளமாக மாறிவிட்டது கைப்பை உபயோகிப்பது. ஒருவகையில் இது உங்களுக்கு வசதியாக இருந்தாலும் பல வழிகளில் இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுதான். அதிக எடையுள்ள கைப்பையை உபயோகிக்கும்போது ஒருபுறமுள்ள கை மீது மட்டும் அதிக எடை செலுத்தப்படுவது உங்களின் கை தசைகள், மூட்டுகள் மற்றும் எலும்புகளை பாதிக்கும். மேலும் கழுத்து வலி மற்றும் முதுகுவலி ஏற்படவும் வழிவகுக்கும். எனவே குறைவான எடை உள்ள பொருட்களை மட்டும் கைப்பையில் வைத்துக்கொள்வது நல்லது.

ஹீல்ஸ் அணிதல்

ஹீல்ஸ் அணிதல்

ஹீல்ஸ் அணிவது இப்போது பெரும்பாலான பெண்கள் கடைபிடிக்கும் பழக்கமாகும். இதனால் சில தீமைகள் ஏற்படுவதை அவர்களே உணர்ந்திருப்பார்கள். இருப்பினும் உயரமாய் காட்டிக்கொள்வதற்காகவும், நாகரிகம் என கருதியும் பெண்கள் இப்போதும் இதை அணிந்து கொண்டுதான் இருக்கின்றனர். இது மூட்டு வலியை மட்டுமே ஏற்படுத்தும் என்று நினைக்கும் பெண்களுக்கு ஹீல்ஸ் அணிவது முதுகுவலி, வாதம், தசைநாண் சிதைவு என தொடங்கி எலும்பு சிதைவு வரை ஏற்படக்கூடும் என்று தெரிய வாய்ப்பில்லை. நாங்கள் ஹீல்ஸ் அணிய வேண்டாம் என்று கூறவில்லை, பெரிய ஹீல்ஸ் அணிந்து ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் கூறுகிறோம்.

தவறான உள்ளாடை அணிதல்

தவறான உள்ளாடை அணிதல்

இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். பொருத்தமில்லாத பிரா அணியும்போது அது உங்கள் உடலின் ஒட்டுமொத்த மேல்பாகத்தையும் பாதிக்கக் கூடும். இதனால் மார்பக வலி, முதுகு வலி மற்றும் கழுத்து வலி போன்றவை ஏற்படலாம். நினைத்து பாருங்கள் பொருத்தமில்லாத உள்ளாடையை அணிந்து கொண்டு நல் முழுவதும் எவ்வாறு சாதாரணமாக வேலை செய்ய இயலும். எந்நேரமும் அது உறுத்திக்கொண்டே இருப்பது உங்களை பணியில் கவனம் செலுத்த விடாது. எனவே மனரீதியாவும் இந்த தவறான உள்ளாடை உங்களை பாதிக்கும்.

உணவு

உணவு

நண்பர்கள் சொல்கிறார்கள், உறவினர்கள் சொல்கிறார்கள் என்று தவறான உணவுமுறையை பின்பற்றாதீர்கள். வெறும் பச்சை காய்கறிகளும், கீரைகளும் உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுத்துவிட இயலாது. எனவே மருத்துவரிடம் ஆலோசித்து உங்கள் உடலுக்கு ஏற்ற உணவுமுறையை பின்பற்றுங்கள். சில பெண்கள் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என்ற மூடநம்பிக்கையில் சாப்பாட்டை புறக்கணிப்பார்கள். இது மிகவும் தவறான ஒன்று. சொல்லப்போனால் சாப்பிடாமல் இருக்கும்போதுதான் உங்கள் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் மிக அதிகம். எனவே சரியான உணவை, சரியான அளவில் சாப்பிட்டு வளமாக வாழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 mistakes which affect women health badly

Women are always less conscious about their health compared to men. They always concentrate on beauty more than health.
Story first published: Wednesday, July 18, 2018, 12:58 [IST]
Desktop Bottom Promotion