For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீராத இருமலையும் தீர்க்கும் கற்கண்டு... எதனுடன் கலந்து சாப்பிட வேண்டும்?

அடிக்கடி இருமல் வந்து கொண்டு இருந்தால் சிறிது மிளகு மற்றும் கற்கண்டு சேர்த்து இருமல் குணமாவது பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது.

|

கல்யாண வீடுகளில் கற்கண்டை பார்த்தால் பலர் இன்றும் குட்டிப் பிள்ளைகளாக மாறி விடுவர். ஓடிப்போய் கொஞ்சம் எடுத்து வாய்க்குள் போட்டுக் கொள்வது தனி சந்தோஷம்தான். கற்கண்டு செரிமானத்தை துரிதப்படுத்தும்;

Mishri for coughing

இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்க உதவும். உடலுக்கு ஆற்றலை தரும். இது தவிர, கற்கண்டின் இன்னொரு அருமையான பலன், தொண்டை வலி மற்றும் இருமலில் இருந்து அது தரும் விடுதலை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொண்டை வலி

தொண்டை வலி

ஆயுர்வேத மருத்துவத்தில் கற்கண்டு பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொண்டைக்குள் கட்டியிருக்கும் சளியை இளக்கி, சீக்கிரத்தில் குணத்தை தருகிறது. இது வரைக்கும் நீங்கள் தொண்டை வலி மற்றும் இருமல் ஆகிய பிரச்னைகளுக்கு கற்கண்டை பயன்படுத்தி பார்க்கவில்லையா? அதை பயன்படுத்தி நலம் பெறுவது எப்படி என்ற விளக்கத்தை வாசியுங்கள்.

இருமலின் இரு வகைகள்

இருமலின் இரு வகைகள்

சளியுடன் கூடிய இருமல், வறட்டு இருமல் என்று பொதுவாக இருமல் வகைப்படுத்தப்படுகிறது. சளியுடன் கூடிய இருமல் என்றால், இருமும்போது சளி மற்றும் கோழை வெளிப்படும். வறட்டு இருமல் என்றால் இருமும்போது சளி வெளிவராது. சளியுடன் கூடிய இருமலிலிருந்து சுகத்தை தரும் முதன்மை மருத்துவ குணம் கற்கண்டுக்கு உள்ளது. உடலிலிருந்து சளியை வெளிக்கொண்டு வரும் சளியுடன் கூடிய இருமலின்போது, கற்கண்டை பயன்படுத்தி, கபம் உருவாவதை குறைக்க முடியும். கபம், கோழை ஆகியவற்றை சுத்தப்படுத்தும் இருமலை குணப்படுத்த தேவையான சத்துகள் கற்கண்டில் காணப்படுகின்றன.

நன்மைகள்

நன்மைகள்

தொண்டையை சுத்தப்படுத்தல், தொண்டைக்கு இதம் அளித்தல் ஆகிய பண்புகளும் கற்கண்டுக்கு உண்டு. இருமலுக்கு மருந்தாக கற்கண்டை பயன்படுத்துவது எப்படி? கற்கண்டு துண்டுகள் சிலவற்றை வாய்க்குள் ஒதுக்கிக் கொண்டு, ஒவ்வொன்றாக விழுங்குங்கள். அது சிதைந்து சிறு சர்க்கரை துண்டுகளாகி, தொண்டைக்கு இதமளிக்கும்.

எப்படி சாப்பிட வேண்டும்?

எப்படி சாப்பிட வேண்டும்?

கற்கண்டு, கறுப்பு மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து நன்றாக பொடித்துக் கொள்ளுங்கள். இரவு படுக்கச் செல்லும் முன்னர், இந்தப் பொடியை வாய்க்குள் போடுங்கள். இந்தப் பொடியை உண்ட பின்னர், தண்ணீர் அருந்தக்கூடாது. அதன்பின் தண்ணீர் அருந்தினால் இருமல் அதிகப்படும். கற்கண்டும் மிளகும் கலந்த பொடியை தேநீரில் கலந்து தினமும் இருமுறை பருகலாம்.

எப்படி குணமாகிறது?

எப்படி குணமாகிறது?

ஆரோக்கிய உணவு வல்லுநர் ஷில்பா அரோரா, "கற்கண்டிலுள்ள சர்க்கரை, மூளையின் கவனத்தை திருப்புவதால் இருமல் தற்காலிகமாக நிற்கலாம். உடலில் செல்களில் சேர்ந்துள்ள வேண்டாத நச்சுப்பொருளே இருமல் மற்றும் சளி உருவாக காரணமாகிறது. ஆகவே, பூரண குணம் பெறுவதற்கு அதற்கான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்," என்று கூறுகிறார்.

கற்கண்டை காணும் இருமல், கல்லைக் கண்ட நாயாக ஓடிப்போகும். ஒருவேளை இருமல் தொடர்ந்தால், மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த இருமல் வேறு ஏதாவது ஆரோக்கிய குறைபாட்டின் அறிகுறியாக இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mishri For Coughing: Here's How You Can Bring Rock Candy To Your Rescue

Mishri For Coughing: Here's How You Can Bring Rock Candy To Your Rescue
Desktop Bottom Promotion