For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேங்காய் அதிகமாக சேர்த்து கொண்டால் எத்தகைய விளைவை ஏற்படுத்தும்னு தெரியுமா..?

|

நாம் சாப்பிட கூடிய எல்லா வகையான உணவிலும் பல்வேறு நலன்கள் இருக்கின்றன. எந்த அளவுக்கு அவற்றில் நன்மை இருக்கிறதோ, அதே அளவிற்கு அவற்றில் தீங்கும் இருக்கத்தான் செய்கின்றன. உணவை பொருத்த வரையில் அவற்றை எடுத்து கொள்ளும் அளவே மிக முக்கியமாகும். அதே நேரத்தில் அவை இயற்கை ரீதியாக தயாரிக்க பட்டுள்ளதா..? என்பதையும் நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

Major Side Effects Of Eating Too Much Cocounts

அந்த வகையில் நம்ம ஊரில் அதிகம் பயன்படுத்தும் தேங்காயிலும் சில வகையான சர்ச்சைக்குரிய உண்மைகள் உள்ளது. இந்த பதிவில் தேங்காயை அதிகம் சாப்பிட்டாலோ, அல்லது தேங்காய் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்தினாலோ எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இனிமை தரும் தேங்காய்..!

இனிமை தரும் தேங்காய்..!

தென்னிந்திய பிரசித்தி பெற்ற மிக முக்கிய உணவு பொருளில் தேங்காய் முதன்மையான ஒன்றாகும். இவற்றில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. பொருளாதார ரீதியாக பல நன்மைகளை தேங்காய் தருகிறது. நார்சத்து, புரசத்து, வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், கார்போஹைட்ரெட் போன்றவை அதிகம் இதில் உள்ளது.

உண்மையில் பக்க விளைவா..?

உண்மையில் பக்க விளைவா..?

ஒரு சில உணவு பொருட்களை அதிகம் நாம் சாப்பிட்டால் கட்டாயம் அவை உயிருக்கே ஆபத்து தர கூடிய விளைவுகளை தரும். அந்த வகையில் தேங்காயும் அடங்கும். சில மாதங்களுக்கு முன் நடந்த ஆய்வில் தேங்காய் அதிகமாக எடுத்து கொள்வோருக்கு உடல்நல குறைவு ஏற்படுவதாக கூறுகின்றனர். தேங்காயின் நலன்கள் பற்றி தெரிந்த நமக்கு இவற்றின் மறுபக்கம் தெரியாமலே போய்விட்டது.

அதிக கொலெஸ்ட்ரோல்..!

அதிக கொலெஸ்ட்ரோல்..!

உங்களுக்கு தெரியுமா, நாம் பயன்படுத்தும் தேங்காயில் நிறைய கெட்ட கொலெஸ்ட்ரோல் இருக்கிறதாம். ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சிகள், மற்ற எண்ணெய்யை விட தேங்காய் எண்ணெய் பல வித உடல்கெடுகளை ஏற்படுத்தும் என ஆய்ந்துள்ளனர். இதில் LDL என்ற கெட்ட கொலெஸ்ட்ரோல் இருப்பதால் பல்வேறு கோளாறுகள் உடலுக்கு தருமாம்.

இதய கோளாறுகள்...

இதய கோளாறுகள்...

அமெரிக்கன் இதய ஆய்வு குழுமம் நடத்திய ஆய்வில், தேங்காய் அதிகமாக சாப்பிடுவோருக்கு பல விதமான இதய கோளாறுகள் ஏற்பட கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். ஏனெனில் தேங்காயில் நிறையுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதாம். எனவே, இவை இதய நலனை பாதிக்கும்.

செரிமான கோளாறு..!

செரிமான கோளாறு..!

தேங்காயை அதிகம் சேர்த்து கொண்டால் உங்களுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படும். தேங்காய் எண்ணெய், தேங்காய் பால் அல்லது வெறும் தேங்காய் போன்ற எந்த ஒன்றை அதிகமாக சாப்பிட்டாலும் அது எண்ணற்ற விளைவுகளை வயிற்று மண்டலத்தில் ஏற்படுத்தும். இதய நோயாளிகள் தங்கள் மருத்துவரை அணுகிய பின்னரே தேங்காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

முகப்பருக்கள் தரும் தேங்காய்..!

முகப்பருக்கள் தரும் தேங்காய்..!

தேங்காயில் லாரிக் அமிலம் அதிகம் உள்ளது. எனவே, இவற்றை நிறைய உண்பதால் எண்ணெய் சுரப்பிகளை அதிகம் சுரக்க செய்து பருக்களை உருவாக்கும். மேலும், முகத்தில் அதிகமாக எண்ணெய் பசை தந்து முக பொலிவை முற்றிலுமாக கெடுக்கும்.

உடலுக்கு ஒவ்வாமை தருமா..?

உடலுக்கு ஒவ்வாமை தருமா..?

தேங்காயை நீங்கள் அதிகம் உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். குறிப்பாக அரிப்புகள், தேம்பல், வாந்தி போன்றவை ஏற்பட கூடும். மேலும் குழந்தைகளுக்கு தேங்காய் சார்ந்த பொருளை அதிகம் கொடுக்க வேண்டாம். உங்களுக்கு உடலில் ஏற்கனவே அலர்ஜி இருந்தால் நீங்கள் தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதை தவிர்த்து விடுங்கள்.

கல்லீரல் பாதிப்பு..!

கல்லீரல் பாதிப்பு..!

தேங்காய் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்தினால், அவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மோசமான வேதி வினையை உடலில் நடைபெற துணை புரியும். இதனால், கல்லீரல் பாதிப்பு கூட ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சர்க்கரை நோயாளிகள் மற்றும் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் தேங்காய் சார்ந்த எல்லாவித பொருளையும் தவிர்ப்பது நல்லது.

வயிற்றுப்போக்கு ஏற்படுத்துமா..?

வயிற்றுப்போக்கு ஏற்படுத்துமா..?

தேங்காயை அதிகம் உணவில் சேர்த்து கொள்வோருக்கு வயிற்று போக்கு ஏற்படுமாம். அதாவது, வயிற்றில் பாக்டீரியல் தொற்றை இவை ஏற்படுத்த கூடுமாம். இவை டையரியா போன்றவற்றை தர கூடியதாம். மேலும், உடல் நல குறைபாடும் இதனால் ஏற்பட கூடும்.

தைராய்டு பிரச்சினைக்கு எப்படி..?

தைராய்டு பிரச்சினைக்கு எப்படி..?

தைராய்டு பிரச்சினையை தேங்காய் குணப்படுத்துவதாக ஒரு கட்டுக்கதை சொல்லப்படுகிறது. ஆனால், இவற்றை சாப்பிடுவதால் எந்த வித நலனும் தைராய்டு உள்ளவர்களுக்கு ஏற்படாது என ஆய்வுகள் சொல்கிறது.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Major Side Effects Of Eating Too Much Cocounts

Coconut is the fruit of the coconut palm. It can be eaten as food or used as medicine. Also it has some side effects.
Story first published: Saturday, September 15, 2018, 16:54 [IST]
Desktop Bottom Promotion