Just In
- 2 hrs ago
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- 14 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 16 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 18 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
Don't Miss
- Movies
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
- News
இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம்கள் பயப்பட தேவையில்லை.. அமித்ஷா லோக்சபாவில் பேச்சு
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- Technology
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது உங்களுக்கு ஆபத்துதான்
உணவு சமைக்க நாம் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தது மண்பானையைத்தான். மண்பானையில் சமைத்த வரை நமது ஆரோக்கியம் சீராகத்தான் இருந்தது. எப்பொழுது அதிலிருந்து மாறி அடுத்த கட்டத்திற்கு மாறினோமோ அப்பொழுது தொடங்கியது நம் தலைமுறைக்கான ஆரோக்கிய பிரச்சினை. மண்பானையிலிருந்து எப்போது குக்கருக்கும் மற்ற பாத்திரங்களுக்கும் மாறினோமோ உணவில் இருந்த ஊட்டச்சத்துக்களும் போனது, நமது ஆரோக்கியமும் போனது.
இப்பொழுது நம் வீடுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பாத்திரம் என்றால் அது இரும்பு பாத்திரம்தான். இரும்பு பாத்திரத்தில் சமைப்பது எளிது அதேசமயம் விரைவானதும் கூட. ஆனால் இதில் சில ஆரோக்கிய பாதிப்புகள் உள்ளது. குறிப்பாக சில உணவுகளை சமைக்கும்போது அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் எந்தென்ஹ் உணவுகளை இரும்பு பாத்திரத்தில் சமைக்கக்கூடாது என்பதை பார்க்கலாம்.

ஆம்லெட்
பொதுவாக நாம் ஆம்லெட் போட பயன்படுத்துவது இரும்பு பாத்திரத்தைதான். ஆனால் அதனை நான் ஸ்டிக் பாத்திரத்தில் ஆம்லெட் சமைப்பதே சிறந்தது. ஏனெனில் நீங்கள் ஆம்லெட் மற்றும் மற்ற முட்டை உணவுகளை சமைக்கும்போது அதனை திருப்பும்போது பாத்திரத்தில் உள்ள சிறிய மூலக்கூறுகள் முட்டையில் ஒட்டிக்கொள்ளும். இது உணவின் தோற்றத்தை பாதிப்பதோடு மட்டுமின்றி ஆரோக்கியத்தில் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

இறைச்சி
பொதுவாக இறைச்சி போன்ற பொருட்களை இரும்பு பாத்திரத்தில் சமைப்பது நல்லதல்ல என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக வைன் அல்லது வினிகர் போன்ற பொருட்களை இரும்பு பாத்திரத்தில் சமைக்கும்போது சேர்க்கவேகூடாது. இது போன்ற பொருட்களை இரும்பு பாத்திரத்தில் சமைக்கும்போது அதில் உள்ள இரசாயனங்கள் இரும்புடன் வினைபுரிந்து அவற்றின் சுவையில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இப்படி சமைத்து சாப்பிடுவது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மீன்
நாம் பெரும்பாலும் மீனை இரும்பு பாத்திரத்தில் சமைப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறோம். உங்களுக்கு பிடித்த மீனை சமைக்க இரும்பு பாத்திரம் எப்பொழுதும் ஏற்றதல்ல. இரும்பு இதில் கலக்கும்போது அது மீனின் சுவையை பாதிக்கும். சால்மன் மற்றும் டூனா போன மீன்களை இரும்பு பாத்திரத்தில் சமைக்கலாம். ஆனால் மற்ற மீன்களை சமைக்கக்கூடாது.

இனிப்புகள்
இனிப்பு பொருட்களை இரும்பு பாத்திரத்தில் சமைக்கும்போது அது பொருட்களின் முனைகளை மிருதுவாக மாற்றும், ஆனால் அதன் தனித்துவமான குணம் ஒன்று உள்ளது. அதாவது இரும்பு பாத்திரத்தில் சமைப்பது இனிப்பின் சுவையை குறைக்கக்கூடும். அதனால்தான் இனிப்புகளை சமைக்கும்போது நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்க அறிவுறுத்தப்படுகிறது.
MOST READ: திருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

சீஸ்
பாஸ்தா போன்ற உணவுகளில் சீஸ் சேர்த்து இரும்பு பாத்திரத்தில் சமைக்கப்படுவது வழக்கமாக செய்யும் ஒன்று. ஆனால் சீஸை இரும்பு பாத்திரத்தில் சமைப்பது நல்லதல்ல. மேலும் இது வலிமையான மற்ற பொருட்களின் தன்மையை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே இரும்பு உணவின் சுவையை மாற்றும் மேலும் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

அமிலத்தன்மை உள்ள காய்கறிகள்
நீங்கள் பார்க்கும் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அதில் சமைப்பவர்கள் நான் ஸ்டிக் பத்திரத்தில்தான் சமைப்பார்கள். அதற்கு காரணம் உணவின் சுவை மாறக்கூடாது என்பதுதான். இரும்பு பாத்திரத்தில் அமிலத்தன்மை நிறைந்த உணவுகளை சமைக்கும்போது அதில் உள்ள அமிலங்கள் இரும்புடன் வினைபுரிந்து உணவின் சுவையை மாற்றும். மேலும் அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படும்.

நூடுல்ஸ்
இரும்பு பாத்திரங்களில் சமைக்கும்போது அது உணவை வேகமாக சமைக்கும். நூடுல்ஸ் போன்ற உணவுகளை சமைக்கும்போது அது அவற்றின் உருவம் மற்றும் சுவையை மாற்றும். மேலும் அதற்காக சேர்க்கப்படும் மசாலாக்கள் இரும்பை வினைபுரிய செய்து உணவின் சுவையை மாற்றி ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது.
MOST READ:12 ராசிகளில் இந்த 8 ராசிக்காரர்கள் கடின உழைப்பால் முன்னேற கூடியவர்கள்!