For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கழுத்தின் இடது பக்கம் மட்டும் அடிக்கடி வலிக்கிறதா? அப்போ இது தான் காரணம்!

இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் நீண்ட நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்து பணியாற்றக்கூடிய சூழல் வாய்த்திருக்கிறது. இதனால் ஏராளமான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இடது பக்கம் மட்டும் கழுத்து வலி ஏற்பட்டால் அ

|

இன்றைய நவீன யுகத்தில் பலரது வாழ்க்கை முறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் உண்டாகியிருக்கிறது. நாள் முழுவதும் ஒரேயிடத்தில் உட்கார்ந்து பார்க்ககூடிய வேலை, அதை விட கணினி முன்பாக மணிக்கணிக்கில் உட்கார்ந்திருக்கிற வேலை தான் இன்றைக்கு பெரும்பாலானோரால் விரும்பப்படுகிறது.

இதனால் பல இளைஞர்களுக்கு முதுகு வலி, கழுத்து வலி ஆகியவை ஏற்படுகிறது. டெஸ்க் ஜாப் என்று தேடித் தேடி தேர்ந்தெடுப்பதினால் உண்டாகும் சோம்பேறித்தனத்தினால் ஏராளமான உடல் நல ஆபத்துக்கள் ஏற்படுகிறது என்பதை இறுதியில் தான் தெரிந்து கொள்ளப்படுகிறது.

இவற்றில் முதன்மையானதும், பெரும்பாலான மக்களால் அவதிக்குள்ளாகும் பிரச்சனை என்றால் அது கழுத்து வலி தான். கழுத்து வலி தானே என்று நாம் சாதரணமாக எடுத்து கொள்வது உடல் நலனில் பெரும் பிரச்சனையை உருவாக்கிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போஸ்ச்சர் :

போஸ்ச்சர் :

நாம் உட்காரும் பொசிசன் மற்றும் கணினி வைத்திருக்கும் பொசிஷன் இரண்டுமே கழுத்து வலிக்கு மூலக் காரணி.

கழுத்து நரம்புகள் முதுகுத்தண்டுடன் இணைந்திருப்பதால், கழுத்து வலியுடன் சேர்ந்துமுதுகுத் தண்டு வலி மற்றும் பிடிப்பு ஆகியவை ஏற்படக்கூடும்.

சில நேரங்களில் கழுத்து வலி தோல்பட்டை வலியாகவும் அடையாளப்படுத்தப்படும். இவற்றில் இடது பக்கம் மட்டும் நீண்ட நாட்கள் கழுத்து வலி இருந்தால் என்ன காரணி, அதற்கு மருந்தாக என்ன எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ளாம்.

பொதுவான காரணங்கள் :

பொதுவான காரணங்கள் :

இடது பக்க கழுத்து வலிக்கு முக்கிய காரணியாக சொல்லப்படுவது உள்ளுருப்புகள் ஏதேனும் பாதிக்கப்பட்டிருக்கும்.

குறிப்பாக இதயம்,ரத்த நாளங்கள், கணையம் மற்றும் பித்தப்பையில் உண்டாகிற ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கூட இடது பக்கம் கழுத்து வலி ஏற்படும்.

இதைத் தவிர ஏதேனும் நரம்புக் கோளாறு இருந்தாலோ அல்லது முதுகுத்தண்டு பகுதியில் கட்டி ஏற்பட்டிருந்தால் கூட இடது பக்க கழுத்தில் வலி ஏற்படக்கூடும்.

அதை விட உங்களது அன்றாட வழக்கம் எப்படியிருக்கிறது என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

அன்றாட வேலை :

அன்றாட வேலை :

நீண்ட நேரம் கணினி முன்பாக உட்கார்ந்திருப்பது, அதிக நேரம் குனிந்து படித்துக் கொண்டேயிருப்பது, தூங்கும் போது ஒரே நிலையில் நாள் முழுவதும் ஈடுப்பட்டிருப்பதால் வயிற்றை அழுத்தி படுத்திருப்பது கூட இந்த பிரச்சனையை உண்டாக்கிடும்.

தசை டென்சன் :

தசை டென்சன் :

கழுத்து தசைகளுக்கு அதிக டென்ஷன் ஏற்படும் போது அதீத கழுத்து வலி ஏற்படும். தவறான பொசிசனில் நீண்ட நேரம் தூங்கும் போது உங்களையும் அறியாமல் வலி ஏற்பட்டிடும்.

நீண்ட நேரம் ஒரே பொசிசனில் இருப்பதால் கழுத்து தசை டெம்ப்பராக ஒரே நிலையில் வைத்திருப்பதாலும் தசை சோர்வடையும்.

காயங்கள் :

காயங்கள் :

ஏதேனும் காயத்தினால் அதுவும் உள் காயம் ஏற்பட்டிருந்தால் கூட கழுத்து வலி ஏற்படக்கூடும்.குறிப்பாக விப்லாஷ் எனப்படக்கூடிய நிதானமில்லாத திடீர் அதிர்வினால் கூட கூட கழுத்து வலி ஏற்படலாம். சில நேரங்களில் தோல்பட்டை வலி, மயக்கம் ஏற்பட்டால் கூட இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு கூட வாய்ப்புண்டு.

டிஸ் ஆர்டர் :

டிஸ் ஆர்டர் :

செர்விக்கல் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை ஏற்பட்டால் கூட கழுத்து வலி ஏற்படும். அதீத எடை தூக்கினால் கூட கழுத்தில் வலி ஏற்படும். சில நேரங்களில் கழுத்தில் வலியைத் தாண்டி முன் அறிகுறியாக சில வித்யாச உணர்வுகள் கூட ஏற்படுவதுண்டு.

போன் ஸ்புருஸ் என்ற பிரச்சனை ஏற்ப்பட்டிருந்தால் கழுத்தின் அசைவுகள் குறைந்திடும். சாதரணமாக கழுத்தின் அசைவுகளுக்கு கழுத்தில் இருக்கும் தசை நார்கள் எளிதாக அசையும் வண்ணம் இருக்க வேண்டும்.

நோய் :

நோய் :

Fibromyalgia என்ற ஒரு வகை நோய் பாதிப்பினால் கூட உங்களுக்கு இடது பக்க கழுத்து வலிக்கலாம். இந்த நோய் தாக்கினால் அது நம்முடைய உடலில் இருக்கக்கூடிய திசுக்களை எல்லாம் அழித்திடும், இதனால் நம்முடைய உடல் அசைவுகள் வெகுவாக குறைந்திடும்.

இது பாதிக்கப்படும் பகுதிகளில் எல்லாம் சருமம் விறைப்பாக மாறிடும். பெரும்பாலும் இது கழுத்துப் பகுதிகளில் தான் அதிகமாக ஏற்படுகிறது.

வீக்கத்துடன் கூடிய வலி அல்லது கழுத்தை திருப்பி பார்ப்பதில்,குனிந்து நிமிர்வதில் சிக்கல் அல்லது வலி ஏற்படுவது இதற்கான ஆரம்ப அறிகுறியாகும்.

வேறு சில :

வேறு சில :

மேற்ச்சொன்ன இந்த நோயைத் தவிர இடது பக்க கழுத்து வலிக்கு இன்ன பிற காரணங்களும் சொல்லப்படுகிறது.

புற்றுநோய், தைராய்டு சுரப்பியில் தாக்குகிற புற்றுநோயின் முதல் அறிகுறி கழுத்து வலியாகத் தான் இருக்கும். ஆனால் தைராய்டு சுரப்பி புற்றுநோய் மிகவும் அபூர்வமாகத்தான் தாக்குகிறது.

இதைத் தவிர, கட்டி, முதுகுத்தண்டில் ஏற்படுகிற கட்டி ஆகியவற்றிற்கு கூட இடது பக்க கழுத்து வலி எடுக்கும்.

தவிர்க்கும் முறை :

தவிர்க்கும் முறை :

இடது பக்க கழுத்து வலி பெரும்பாலும் உங்களுடைய அன்றாட நடவடிக்கைகளினால் மட்டுமே ஏற்படுவதால் வலி ஏற்பட்டவுடன் உங்களுடைய வாழ்க்கை முறையை ஒரு முறை சரி பார்த்தல் நலம்.

தொடர்ந்து நீடித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள். ஏனென்றால் இது புற்றுநோய் மற்றும் தசைகளை உருக்கிடும் நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம் என்பதால் ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது நல்லது.

மாற்றங்கள் :

மாற்றங்கள் :

உடல் எடை அதிகமாக இருந்தால் கூட கழுத்து வலி ஏற்படும். அதனால் உடல் எடையை குறைதிடுங்கள். அதே போல அதிக எடையுள்ள பொருட்கள் தூக்குவதை தவிர்க்க வேண்டும்.

சரியான தூக்கம் மற்றும் முறையான உணவுப்பழக்கம் இருந்தால் இதனை மிகவும் எளிதாக குறைத்திடலாம்.

தவிர்க்க :

தவிர்க்க :

பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது.

கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

உடனடி நிவாரணம் :

உடனடி நிவாரணம் :

நொச்சி இலைகளை எடுத்து நன்கு இடித்து சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து காயவைத்து, அதை வலி உள்ள இடத்தில் தேய்த்து வெந்நீரில் வாரம் இருமுறை குளித்து வந்தால் கழுத்து வலி குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Left Side Neck Pain Causes And Treatment

Left Side Neck Pain Causes And Treatment
Story first published: Monday, January 1, 2018, 16:13 [IST]
Desktop Bottom Promotion